புயல் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட நெற் பயிர்களைக் (Paddy) காப்பாற்றும் வழிமுறைகளை வேளாண் துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து தஞ்சை மவாட்டம், பேராவூரணி வேளாண் உதவி இயக்ககம் எஸ்.மாலதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
-
புரெவி புயல் காரணமாக பெய்த கனமழையால், இளம்பயிர்கள் முதல் அறுவடை செய்யும் நிலையிலுள்ள பயிர்கள் வரை நீரில் மூழ்கியுள்ளது.
-
விவசாயிகள் உடனடியாக நீரை வடித்து, பயிரைக் காப்பாற்ற வழிவகை செய்ய வேண்டும்
-
பயிர் கரைந்த நிலையில் உள்ளதற்கும், மஞ்சள் நிறமாக மாறி இருப்பதற்கும் உரிய தொழில்நுட்பங்களைக் கடைப்பிடித்தால் மகசூல் (Harvesting) இழப்பின்றி விவசாயிகள் பயன்பெற முடியும்.
-
அதிக நாட்கள் நீரில் இருந்த தாக்கத்தால் தழைச்சத்து குறைபாடு ஏற்பட்டு, இலைகள் மற்றும் தண்டுகள் இள மஞ்சள் நிறமாக மாறிவிடும்.
பயிர்களைக் காப்பாற்றும் மருந்து (Crop protection drug)
-
இதற்கு ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீர், ஒரு கிலோ ஜிங்க் சல்பேட் (Zinc Sulpate)மற்றும் 2 கிலோ யூரியா கலந்து கைத்தெளிப்பான் மூலம் இலை வழியாக தெளிக்க வேண்டும்
-
தண்ணீர் தேக்கத்தினால் பயிர் வளர்ச்சி குன்றி காணப்பட்டால், தண்ணீர் வடிந்தவுடன் ஏக்கருக்கு 22 கிலோ யூரியாவுடன் ஜிப்சம் 18 கிலோ மற்றும் வேப்பம் புண்ணாக்கு 4 கிலோவை சேர்த்து ஒரு நாள் இரவு கலந்து வைக்கவும்.
-
மறுநாள் 17 கிலோ பொட்டாஷ் கலந்து மேலுரமிட வேண்டும். ஒரு கிலோ சூடோமோனாஸ் மருந்தை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து 10 நாள்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளித்திட வேண்டும்.
-
தண்டு உருளும் மற்றும் பூக்கும் பருவத்திலுள்ள பயிர்களுக்கு 4 கிலோ டிஏபி உரத்தை 10 லிட்டர் தண்ணீரில் முதல் நாள் ஊரவைத்து, மறுநாள் வடிகட்டி கரைசலுடன் 2 கிலோ யூரியா மற்றும் 1 கிலோ பொட்டாஷ் உரத்தை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து மாலை வேளையில் கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும்.
-
இவ்வாறு தெளிக்கும் பட்சத்தில் மகசூல் இழப்பிலிருந்து பயிரை பாதுகாத்திடலாம்.நன்மை செய்யும் பூச்சிகள் அதிகரிக்கும்.
-
இலை சுருட்டப்புழு, தண்டுத் துளைப்பான், புகையான் போன்ற பூச்சிக்களை கட்டுப்படுத்த, வரப்பில் மஞ்சள் நிற மலர் செடிகளை நடவு செய்வதன் மூலம் நன்மை செய்யும் பூச்சிகள் அதிகரித்து தீமை செய்யும் பூச்சிகளை அழித்துவிடும்.
-
பூச்சி நோய்த் தாக்குதல் பொருளாதார சேத நிலைக்கு மேல் இருக்கும் பட்சத்தில், வேம்பு சார்ந்த மருந்துகளை உபயோகப்படுத்தி கட்டுப்படுத்துவது சாத்தியம்.
-
இரட்டை வால் குருவி அமருவதற்கு ஏதுவாக, வயலில் 15 முதல் 20 பறவை குடில்கள் அமைப்பதன் மூலம் இலைகருட்டுப் புழுக்களை முழவதுமாக கட்டுப் படுத்தலாம்.
-
கூடுதல் விவரங்களுக்கு அந்தந்த பகுதி வேளாண் அலுவலர்களைத் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் படிக்க...
விவசாயிகளே! பாரம்பரிய நெல் இரகங்களை பயிரிடுவோம்! மீட்டெடுப்போம்!
Share your comments