1. விவசாய தகவல்கள்

அறுவடை செய்த நெல்லினை விற்பனை செய்ய உள்ள வழிகள் என்ன?

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan

TNCSC e-DPC

தற்போது குறுவையில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல்லும், சில பகுதியில் இறவையில் சாகுபடி செய்யப்பட்ட நெல்லும் அறுவடைக்கு தயாராக உள்ளது. நெல்லை அரசு நிர்ணயித்த விலையில் உரிய ஈரப்பதத்துடன் கொள்முதல் செய்ய தமிழக அரசின் " தமிழநாடு நுகர்வோர் வாணிபக் கழகம்" தனது கொள்முதல் பணியை கடந்த செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல் துவங்கியுள்ளது.

தமிழகத்தின் நெல் விளையும் இடங்களில் விவசாயிகளின் தேவைக்கேற்ப கொள்முதல் நிலையம் (DIRECT PROCUREMENT CENTRE) தொடங்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்நிலையில் நடப்பாண்டுக்கான கொள்முதல் விலை நிலவரம் என்ன? விவசாயிகள் விளைப்பொருட்களை எந்த வகையில் எல்லாம் விற்பனை செய்யலாம்? என்கிற பல்வேறு தகவல்களை கிரிஷி ஜாக்ரனுடன் பகிர்ந்துள்ளார் வேளாண் ஆலோசகரான அக்ரி சு.சந்திர சேகரன். அவற்றின் விவரம் பின்வருமாறு-

நடப்பாண்டுக்கான கொள்முதல் விலை எவ்வளவு?

சன்னரக நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.2450 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. (இதில் ஒன்றிய அரசின் MSP விலை ரூ.2320 மற்றும் தமிழக அரசின் ஊக்க தொகை ரூ.130 அடங்கும்). இதைப்போல் பொது ரகத்திற்கான குறைந்தப்பட்ச ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.2405 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. (இதில் ஒன்றிய அரசின் MSP விலை ரூ.2300 மற்றும் தமிழக அரசின் ஊக்கத் தொகை ரூ.105 அடங்கும்)

நெல்லுக்கான விற்பனை வழிகள்:

1) அறுவடை செய்த நெல்லை களத்து மேட்டுலே கமிஷன் கடை வியாபாரியிடம் விற்பது. இது தவறான விற்பனை முறையாக கருதப்படுகிறது. காரணம், இதில் ஏகப்பட்ட குளறுபடிகள் (எடை இழுப்பு, விலை குறைவு) போன்றவை நடைப்பெறுகிறது.

2) நேரடி கொள்முதல் நிலையங்களில் விற்பனை: இந்த முறையை தான் பெரும்பாலான விவசாயிகள் பின்பற்றி தங்களுடைய நெல்லை விற்பனை செய்து வருகின்றனர். நேரடி கொள்முதல் நிலையங்களின் வாயிலாக விற்பனை மேற்கொள்ள விவசாயிகள் செய்ய வேண்டியவை பின்வருமாறு

முதலில் விவசாயிகள் தங்களுடைய வட்டாரத்திலுள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய, tncsc- edpc.in என்கிற இணையதளத்தில் தங்களுடைய நெல் சாகுபடிக்கான நிலத்தின் பட்டா நகல், சிட்டா அடங்கல், ஆதார், வங்கி கணக்கு புத்தகத்தின் நகல், செல்போன் எண், ஆகிய ஆவணங்களுடன் தங்களது விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். (விவசாயிகள் இதனை மேற்கொள்ள நேரடி கொள்முதல் நிலையங்களை அணுகவும்)

மேற்கண்டவாறு பதிவேற்றம் செய்தவுடன் தொடர்புடைய கொள்முதல் நிலையங்களில் இருந்து (DPC) விவசாயிகளின் அலைபேசிக்கு குறுஞ்செய்தி வரும். அந்த செய்தியில் விற்பனை செய்யும் நிலையத்தின் பெயர், கொள்முதல் செய்யப்படும் நாள் மற்றும் நேரம் ஆகிய விபரங்கள் வந்துவிடும்.

குறுஞ்செய்தி மற்றும்( OTP) அடிப்படையில் குறிப்பிட்ட நாளன்று விவசாயிகள் நேரடியாக நெல்லினை கொண்டு சென்று விற்பனை செய்யலாம். இதனால் கால விரயமாகாது, நெல் விற்பனை செய்ய நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதில்லை .தங்களுடைய லாட் அடிப்படையில் விற்பனைசெய்ய முடியும். நெல்லின் ஈரப்பதம் 11%-12% இருக்க வேண்டும். மேலும் விற்பனை செய்ய விவசாயிகள் எந்தவிதமான தொகையும் வழங்க வேண்டியதில்லை.

3) இருப்பு வைத்து விற்பனை செய்யும் முறைகள்

தமிழகத்தில் 268 ஓழுங்கு முறை விற்பனைக் கூடங்கள் உள்ளன. விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை கிடைக்காத போது, ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் இருப்பு வைத்து, கட்டுபடியான விலை வருகிற காலத்தில் விற்பனை செய்ய வாய்ப்புள்ளது.

1 மெட்ரிக் டன் விளைப்பொருட்களை இருப்பு வைக்க ஒரு நாளுக்கு ஒரு ரூபாய் மட்டுமே வாடகையாக வசூலிக்கப்படுகிறது. ஆறு மாதம் வரை இருப்பு வைத்து கட்டுபடியான விலையில் விற்பனை செய்யலாம். மேலும் இங்கு இருப்பு வைத்த விளைபொருட்களுக்கு விவசாயிகளுக்கு 5% வட்டியில் பொருளீட்டு கடனாக வழங்கப்படும். அதிகப்பட்சமாக 5 லட்சம் வரை விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

Read also: நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்!

எனவே விவசாயிகள் தங்களுடைய நெல்லை உரிய பருவத்தில் அறுவடை செய்து பரிந்துரைக்க பட்ட ஈரப்பதத்துடன் விற்பனை செய்தால் கூடுதல் லாபமே”  என வேளாண் ஆலோசகர் அக்ரி சு.சந்திர சேகரன் தெரிவித்துள்ளார்.

(மேற்குறிப்பிட்ட தகவல்கள் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள்/ விளக்கம் தேவைப்படுமாயின் அணுகவும்: அக்ரி சு.சந்திர சேகரன் (வேளாண் ஆலோசகர்), தொடர்பு எண்: 94435 70289)

Read more:

உயிர் உரங்களை எப்படி சரியாக பயன்படுத்துவது?

ரூ.13,966 கோடியில் விவசாயிகளுக்காக 7 திட்டங்கள்- அமைச்சரவை ஒப்புதல்!

English Summary: What are The ways to sell harvested paddy like TNCSC e DPC

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.