1. விவசாய தகவல்கள்

எந்தெந்த பயிர்களுக்கு திரவ உயிர் உரங்களைப் பயன்படுத்தலாம்? பட்டியல் இதோ!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
What liquid bio-fertilizer can be used for which crops? Here is the list!

பயிருக்கு உயிரூட்டும் உன்னதத்தன்மைப் படைத்தவை என்றால் அவை திரவ உயிர் உரங்கள்தான். எனவே விவசாயிகள் தங்கள் வேளாண் நிலங்களில் திரவ உயிர் உரங்களை பயன்படுத்தி உற்பத்தியைப் பெருக்கலாம்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், செயல்படும் திரவ உயிர் உர உற்பத்தி மையம் மூலம் விவசாயிகளுக்கு தேவையான திரவ உயிர் உரம் உற்பத்தி செய்யப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

அசோஸ்பைரில்லம் (Azospirillum)

  • நெல்

  • சிறுதானியங்கள்

  • சூரியகாந்தி

  • எள்

  • பருத்தி

  • கரும்பு

  • காய்கனிப் பயிர்கள்

  • தென்னை

  • வாழை

ரைசோபியம் (Rhizobium) 

  • பயறு

  • கடலை

பாஸ்போபாக்டீரியா (Phosphobacteria) 

அனைத்துப் பயிர்களுக்கும்

இந்த உயிர் உரங்கள் திரவ நிலையில் உற்பத்தி செய்யப்பட்டு விநியோகம் செய்யப்படுகின்றன.இவை பயிருக்கு பல்வேறு வகைகளில் நன்மை பயக்கின்றன.

திரவ உயிர் உரங்களின் பயன்கள்(Benefits)

  • உயிர் உரங்கள் காற்றில் உள்ள நைட்ரஜன் வாயுவை தழைச்சத்தாக மாற்றிப்பயிர்களுக்கு அளிக்கின்றன.

  • மண்ணில், பயிர் எடுத்துக்கொள்ள முடியாத நிலையிலுள்ள மணிச்சத்தைப், பயிருக்கு எளிதில் கிடைக்கச் செய்வதில் உயிர் உரங்கள் இன்றியமையாத பங்கு வகிக்கின்றன.

  • பயிர் வளர்ச்சி ஊக்கியான இன்டோல் அசிட்டிக் அமிலம், ஜிப்ரலின், பயோட்டின் மற்றும் வைட்டமின் B அகியவற்றை உயிர் உரங்களில், நுண்ணுயிரிகளை உற்பத்தி செய்வதால் பயிர்கள் செழித்து வளருவது உறுதி செய்யப்படுகிறது.

  • உரங்களில் 20 முதல் 25 சதவீதம் வரை தழைச்சத்து மற்றும் மணிச்சத்து சேமிக்கப்படுவதால் உரச் செலவும் குறைகிறது.

  • மண் வளம் பாதுகாக்கப்படுவது மட்டுமின்றி மகசூல் 10 சதவீதம் வரை அதிகரிக்கும்.

  • இந்த திரவ உயிர் உரங்கள், அனைத்து வேளாண் விரிவாக்க மையங்களிலும் கிடைக்கும்.

எனவே இதனை மானிய விலையில் விவசாயிகள் பெற்று பயன் பெறலாம்.

மேலும் படிக்க...

தமிழகத்தில் விவசாயத்திற்கான இலவச மின்வினியோக நேரம் மாற்றம்!

இருமடங்கு சாகுபடி தரும் திருந்திய நெல் சாகுபடி!

PMKSY:நுண்ணீர் பாசனத் திட்டத்தில் பயன்பெற அழைப்பு!

English Summary: What liquid bio-fertilizer can be used for which crops? Here is the list! Published on: 07 November 2020, 07:52 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.