மழைக்காலங்களில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் மின்னல், எப்போது தாக்கும் என்பது பற்றி முன்கூட்டியேத் தெரிந்துகொள்ள புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மின்னல் என்பதுஎப்போதுமே மனிதகுலத்தை அச்சுறுத்தும் ஒரு நிகழ்வாகவே உள்ளது. ஒவ்வொரு நொடியும் 50 முதல் 100 மின்னல் தாக்குதல்கள் பூமியில் தாக்குகின்றன.
தாமினி செயலி (Damini App)
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் மின்னல் தொடர்பான விபத்துக்களில் ஏற்படும் பலி எண்ணிக்கை 2000 முதல் 2500 வரை உள்ளது என்கின்றன அண்மைகால புள்ளிவிவரங்கள். ஆக கொலையாளி எனவும் அடையாளம் காணப்படும் மின்னல், எப்போது தாக்கும் என்பது குறீத்து அறிந்து கொள்ள, தாமினி எனும் செயலி (Damini App) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தாமினி செயலி இந்தியாவில் உள்ள அனைத்து பகுதிகளிலும் ஏற்படும் மின்னல் செயல்பாடுகளையும் கண்காணித்து வருகிறது. மேலும் மின்னல் குறித்த தகவல்களை சரியான இருப்பிடத்தின் அடிப்படையில் எச்சரிக்கை விடுப்பதே தாமினி செயலியின் முக்கிய நோக்கம். இந்த செயலி விவசாயிகளுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்.
மின்னல்களின் எச்சரிக்கை குறித்த தகவல்கள், ஒவ்வொரு 5,10 மற்றும் 15 நிமிடங்களின் அடிப்படையில் வரைபடத்தின் மூலம் காணலாம். மேலும் 20 மற்றும் 40 சதுர கி.மீ பரப்பளவில் வரவிருக்கும் மின்னலின் இருப்பிடங்கள், இடியுடன் கூடிய இயக்கம் மற்றும் திசை மற்றும் மின்னல் ஏற்படும் போது எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மின்னல் குறித்த சில பொது வான தகவல்களையும் தாமினி செயலி வரிசைப்படுத்தியுள்ளது.
வரவிருக்கும் மின்னல் செயல்பாடுகள் குறித்து முன்கூட்டியே தகவல்களைப் பெற தாமினி செயலி மிகவும் உதவுகின்றது. பூனேவில் உள்ள இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனம் மற்றும் பூவிஅறிவியல் அமைச்சகம் ஆகியவை இணைந்து உருவாக்கி உள்ளன இச்செயலியை கூகுள் பிளே ஸ்டோர் (Play Store)மூலம் பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம்.
தகவல்
முனைவர்.ப.அருண்குமார்
தொழில் நுட்ப வல்லுநர்
மாவட்ட வேளாண் வானிலை பிரிவு,
வேளாண்மை அறிவியல் நிலையம்,
அருப்புக்கோட்டை
மேலும் படிக்க...
பயிருக்கு உயிரூட்டும் தயிர்- பொன்னியமாக மாற்றி யூரியாவிற்கு பதிலாக பயன்படுத்தலாம்!
Share your comments