விவசாயம் மனித நாகரிக முன்னேற்றத்துக்கு மிகப்பெரிய பங்காற்றுகிறது. உலகம் முழுவதும் செய்யப்படும் பல்வேறு விவசாய முறைகள், தங்களுக்கென விளைச்சலை அதிகரிக்கும் யுக்தியை கண்டுபிடித்துள்ளது. பழந்தமிழர் விவசாயம், பாரம்பரிய விவசாயம், இயற்கை விவசாயம், நவீன விவசாயம் என தமிழகத்திலும் பல்வேறு வகைகள் உள்ளது. இந்த ஒவ்வொரு விவசாய முறையிலும் இருக்கும் சிறப்புகளை தேர்ந்தெடுத்து, அதில் உலகத்தர அதிநவீன தொழில்நுட்பத்தை இணைத்து, எதிர்கால விவசாயிகளை (Future Farmers) உருவாக்கும் முயற்சியில் வி.ஐ.டி வேளாண் துறை (VIT Agriculture Department) ஈடுபட்டுள்ளது.
விவசாயப் பயிற்சிகள்
வேளாண் துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ள விஐடி நிர்வாகம், கல்லூரிக்குள் மிகப்பெரிய வயல்வெளியை அமைத்துள்ளது. வகுப்பறைகளை விட மாணவர்கள் அதிகம் நேரம் வயல்களிலேயே செலவிடுகின்றனர். நிலத்தை உழவ டிராக்டர் பயிற்சி (Tractor Training), இயற்கை உரம் தயாரிப்பு, கால்நடைகள் வளர்ப்பு, பயிர் வளர்ப்பு, நீர்ப்பாசனம், தோட்டக்கலை (Horticulture), குடில் அமைத்து விவசாயம், தேனீ வளர்ப்பு உள்ளிட்ட பல பயிற்சிகளை வழங்க தனித்தனியாக இடங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
விவசாய கல்வி
விவசாயத்தின் மீது இருக்கும் ஆர்வத்தின் அடிப்படையிலே மாணவர்களுக்கு சீட் வழங்கப்படுகிறது, மதிப்பெண்கள் எல்லாம் இரண்டாம் பட்சம் தான். ஆர்வமுள்ள பல ஏழை விவசாய மாணவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் விவசாய கல்வி வழங்கப்படுகிறது. நாட்டில் சிறந்த விவசாயிகளை உருவாக்கும் நோக்கத்திலேயே இந்த வேளாண் துறை வடிவமைக்கப்பட்டுள்ளது.
விவசாயி - மாணவர் இணைப்பு திட்டம் :
பாடப்புத்தகத்தில் கற்பிக்கப்படும் விவசாய பிரச்னைகளை விட களத்தில் விவசாயிகள் சந்திக்கும் பிரச்னை அதிகம் என உணர்ந்த வி.ஐ.டி நிர்வாகம் விவசாயி மாணவர் இணைப்பு திட்டத்தை உருவாக்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாணவரும் ஒவ்வொரு விவசாயியுடன் இணைந்து செயல்படுகிறார். வயலில் இருக்கும் பிரச்னைகள் ஆய்வுசெய்து, பேராசிரியர் உதவியுடன் அதற்கு தீர்வும் காண்கிறார். இதனால் களத்தில் இருக்கும் பிரச்னைகள் மாணவர்களுக்குத் தெரிய வருகிறது. அதேநேரம் விவசாயிகளின் பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கிறது.
புதுப்புது கண்டுபிடிப்புகள்
மாணவர்கள் கள பிரச்னைக்கு தீர்வு கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கியுள்ளனர். வயலில் கிடைக்கும் களைச் செடிகள் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள பூச்சிக்கொல்லி மருந்து, குறைந்த விலை இன்குபேட்டர், காளான் வளர்ப்பு தொழில்நுட்பம், மண் வளத்தை அதிகரிக்கும் முறை, என பல்வேறு கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்துள்ளனர். இவ்வாறு ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கு கல்லூரி நிர்வாகம் ஊக்கத்தொகை வழங்கி உதவி வருகிறது.
கட்டமைப்பு வசதிகள்
விவசாய கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க நடவடிக்கைகளுக்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. உயர்தர உபகரணங்கள் மற்றும் கருவிகளைக் கொண்ட ஆய்வகம், ஸ்மார்ட் வகுப்பு, விவசாய மற்றும் தோட்டக்கலை நிலங்கள், தாவரவியல் பூங்கா, மூலிகை தோட்டம், உரம் தயாரிக்கும் அலகு, நீர்ப்பாசன வசதி, பண்ணை இயந்திரங்கள், இஸ்ரேல் போன்ற உலகநாடுகளுக்கு இணையான பயிர்வளர்க்கும் தொழில்நுட்பங்கள் என பல்வேறு வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.
உலகத்தர ஆசிரியர்கள்
வேளாண், மண் அறிவியல், பூச்சியியல், வேளாண் நுண்ணுயிரியல், தாவர இனப்பெருக்கம் மற்றும் மரபியல், தாவர பயோடெக்னாலஜி, பயிர் உடலியல், வேளாண் பதப்படுத்துதல், வேளாண் பொறியியல், புவிசார் பொறியியல், தோட்டக்கலை, நீர் தொழில்நுட்பம் (Water Technology) உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் குழு மாணவர்கள் உருவாக்கி வருகின்றனர்.
மேலும் படிக்க
தென்னை மரங்களை தாக்கும் கூன் வண்டுகளை கட்டுப்படுத்த கவர்ச்சி பொறி! வேளாண் துறை தகவல்
தரமற்ற விதையால் 100 ஏக்கரில் நெற்பயிர்கள் பாதிப்பு! இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை
Share your comments