1. விவசாய தகவல்கள்

இலை உதிரா மரமான நாவல் மரத்தை பயிரிட்டு நல்ல லாபம் பெறலாம்!

KJ Staff
KJ Staff
Credit : Moonchat Hunt

நாவல் மரம் வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய சிறுபான்மை பழப்பயிர். இதன் பழங்களில் கனிமங்கள், சர்க்கரை, புரதங்கள் மற்றும் இரும்புச்சத்தும் அதிகமாக உள்ளன.
இந்த மரத்தின் அனைத்துப் பாகங்களும் பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்தாலும் வியாபார ரீதியில் குறைந்த அளவே இந்த மரங்கள் வளர்க்கப்படுகின்றன.

மண்

நாவல் மரம் வறண்ட வெப்ப மற்றும் மித வெப்ப மண்டலப் பகுதிகளில் எல்லாவகை மண்களிலும் நன்கு வளரும் தன்மையுடையது. மேலும் உப்புத் தன்மை மற்றும் நீர் தேங்கியுள்ள நிலங்களிலும் நன்கு வளரும் இயல்புடையது.

வகைகள்

ராம் நாவல் என்ற வட இந்திய ரகத்தின் பழங்கள் பெரியதாகவும், நீள் சதுர வடிவமாகவும் அடர் ஊதா நிறத்திலும் இருக்கும். கிராமப்புற சந்தைகளில் கிடைக்கும் பழங்கள் உருண்டையாக சதைப்பகுதி சற்று குறைவாக இருக்கும்.

நடவு

விதைகள் மூலம் கிடைக்கும் நாற்றுகள் அல்லது மொட்டு ஒட்டு கட்டும் முறையில் கிடைக்கும் ஒட்டுச் செடிகள் நடவிற்குப் பயன்படுத்தப்படுகின்றன.

உரம் தேவையில்லை

நாவல் செடிக்கு பொதுவாக உரமிடுவது வழக்கத்தில் இல்லை. இருந்த போதிலும் நன்கு வளர்ந்த மரத்திற்கு 50 கிலோ வரை தொழு உரம் இடுவதால் காய் பிடிப்பு அதிகரிக்கும்.
செடிகளின் இளம் பருவத்தில் தொடர்ச்சியாக நீர் பாய்ச்சுதல் வேண்டும். மரங்களில் வெள்ளை ஈக்கள் தாக்கத்தைக் கட்டுப்படுத்த மரத்தைச் சுற்றி சுகாதார நிலையை பராமரித்துப் பாதிக்கப்பட்ட பழங்களைப் பறித்து அழித்து விட வேண்டும்.

அறுவடை

  • நாவல் மரத்தில் நாற்றுகள் 8 முதல் 10 ஆண்டுகளிலும், ஒட்டுச் செடிகள் 6 முதல் 7 ஆண்டுகளிலும் பலன் கொடுக்கும். மேலும் மரங்கள் தொடர்ந்து 50, 60 ஆண்டுகள் வரை பலன் கொடுக்கும்.
  • நாற்று மூலம் வளர்ந்த மரம் ஒன்றிலிருந்து ஆண்டுக்கு 80 முதல் 100 கிலோ வரை பழங்கள் கிடைக்கும். ஒட்டுச் செடி மரத்திலிருந்து 60 முதல் 70 கிலோ வரை மட்டுமே பழங்கள் கிடைக்கும். நன்கு பழுத்த தரமான பழங்கள் சந்தையில் கிலோ ரூ.300 வரை விற்பனையாகின்றன
Credit : Tamil Webdunia

மருத்துவப்பயன்கள் (Medical Benenits)

  • நாவல் பழங்கள், விதை, இலை மற்றும் மரப்பட்டைகளும் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.
  • நாவல் பழத்தின் விதையை பொடி செய்து, அதனை நீரில் கலந்து குடிக்கலாம். இல்லாவிட்டால், நாவல் பழத்தினை ஜூஸ் போட்டு குடித்து வரலாம்.
  • நாவல் பழங்களை சாப்பிட்டு வந்தால், கல்லீரல் பிரச்சனைகள் நீங்குவதுடன், சிறுநீர்ப்பை பிரச்சனைகளில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்.
  • ஈறுகள் மற்றும் பற்களில் பிரச்சனை உள்ளவர்கள், நாவல் பழத்தினை உட்கொண்டால் நல்ல தீர்வு கிடைக்கும். அதிலும் நாவல் பழத்தின் இலையை பொடி செய்து, அதனைக் கொண்டு பற்களை துலக்கி வந்தால், ஈறுகள் மற்றும் பற்கள் ஆரோக்கியமாகவும், பளிச்சென்றும் இருக்கும்.
  • நாவல் பழத்தின் இலைகள் மற்றும் மரப்பட்டைகள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைக்கும். அதற்கு அவற்றை நீரில் போட்டு கொதிக்க விட்டு, அந்நீரை பருக வேண்டும்.
  • நாவல் விதைகள் சிறுநீரில் சர்க்கரையின் அளவைக் குறைக்க உதவுகின்றன.
  • நாவல் மரக்கட்டைகளைப் பூச்சி மற்றும் பூஞ்சானங்கள் தாக்குவதில்லை. எனவே, அவை ரயில்களில் படுக்கைகள் அமைக்கப் பயன்படுகின்றன.
  • நாவல் பழங்களை சாப்பிட்டு வந்தால், அவை சருமத்தில் ஏற்படும் வெண் புள்ளி நோய்களுக்கு சிறந்த நிவாரணம் அளிக்கும். எப்படியெனில் நாவல் பழங்களானது மெலனினை செல்களாக செய்யத் தூண்டுகிறது.
  • அசிடிட்டி பிரச்சனை உள்ளவர்கள், நாவல் பழத்தில் ப்ளாக் சால்ட் (Black Salt)மற்றும் சீரகப் பொடி சேர்த்து சாப்பிடுவது நல்லது. பழத்தினை அளவாக சாப்பிட்டு வந்தால், இவை தமனிகளில் ஏற்படும் பிரச்சனைகளை குறைத்து, மாரடைப்பு வருவதைக் குறைக்கும்.

தகவல்

அக்ரி. சு.சந்திரசேகரன்
வேளாண் ஆலோசகர்
அருப்புக்கோட்டை
9443570289

மேலும் படிக்க

செரிமானப் பிரச்னை தீர சீரகம்- அக்டோபர் மாதத்தில் பயிரிட சிறந்த மருத்துவ மூலிகை!

குறித்த காலத்தில் மல்லிகைக்கு கவாத்து செய்தால் குளிர்காலத்தில் அதிக மகசூல்!

English Summary: You can make a good profit by cultivating a leafless novel tree! Published on: 25 October 2020, 03:18 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.