Krishi Jagran Tamil
Menu Close Menu

நீர் மேலாண்மை திட்டத்தில் விவசாயிகளுக்கு 50% மானியம்!

Thursday, 22 October 2020 07:35 AM , by: Elavarse Sivakumar
50% subsidy for farmers in water management scheme!

துணை நிலை நீர் மேலாண்மை திட்டத்தில் 50 சதவீத மானியம் பெற்று பயன்பெறலாம் என தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கு வேளாண்துறை அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து அந்த மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :

 • மாவட்டத்தில் நீர் ஆதாரம் மற்றும் மழைப்பொழிவு குறைந்து வருவதால் இருக்கும் நீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக பரப்பளவில் பயிர் சாகுபடி செய்யும் நோக்கத்தில் விவசாயிகள் செயல்பட வேண்டும்.

 • பாசனநீர் ஆதாரங்களை உருவாக்கி நுண்பாசன பாதுகாப்பான குறு வட்டங்களில், குறுகிய ஆழக்கிணறு, குழாய் கிணறு அமைப்பதற்கு செலவிடப்படும் தொகையில் 50% மானியம் அதிகபட்சமாக ரூ. 25,000 வழங்கப்படும்.

 • மேலும், டீசல் பம்புசெட், மின் மோட்டார் பம்புசெட் நிறுவுவதற்கு அதன் விலையில் 50 சதவீத மானியம் ரூ.15,000க்கு மிகாமலும், வயலுக்கு அருகில் பாசன நீரை கொண்டு செல்லும் வகையில் நீர் பாசன குழாய் (ஜஎஸ்ஐ சான்று பெற்ற குழாய்கள்) அமைப்பதற்கு 50 சதவீத மானிய தொகை ஹெக்டேருக்கு ரூ.10,000க்கு மிகாமலும் வழங்கப்பட உள்ளது.

 • பாதுகாப்பு வேலியுடன் தரை நிலை நீர்த்தேக்கத் தொட்டி நிறுவு வதற்கான செலவில் 50% ஒரு கனமீட்டருக்கு ரூ.350க்கு மிகாமலும், நிதி உதவி ஒரு பயனாளிக்கு ரூ.40,000க்கு மிகாமலும் மானியம் வழங்கப்படுகிறது.

 • மானியம் பெற விரும்பும் தகுதியுள்ள விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு தங்களது விண்ணப் பங்களை அளித்து பெயரை முன்பதிவு செய்துகொள்ளலாம்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

அஞ்சல் துறையில் வேலை: 8, ஐடிஐ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

ஏடிஎம்மில் ரொக்கப்பணம் செலுத்தினால் இனி கட்டணம் - ICICI வங்கி அறிவிப்பு!

தீபாவளி Special offerல் வட்டி விகிதம் அதிரடிக் குறைப்பு- வீடு,காரு வாங்க அடிக்கிறது யோகம்!

துணை நீர் மின் திட்டங்கள் மானியம் பெற விவசாயிகளுக்கு வாய்ப்பு மோட்டார் பம்ப் செட் நீரை சேமிக்கும் திட்டங்கள் 50% subsidy for farmers in water management scheme!
English Summary: 50% subsidy for farmers in water management scheme!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)

Share your comments


Krishi Jagran Tamil Magazine Subscription Online Subscription


Latest Stories

 1. நிவர் புயல் பாதிப்பு : பயிர் சேதம் கணக்கெடுப்பு துவக்கம்!!
 2. 10,000 உழவர் உற்பத்தியாளர் அமைப்பு உருவாக்கும் முயற்சி : தேன் உழவர் உற்பத்தியாளர் அமைப்பு துவக்கம்!!
 3. ஓசூரில் மாறி வரும் காலநிலை! குளிர்கால நோய்கள் தாக்குவதால் ரோஜா விவசாயிகள் கவலை!
 4. மஞ்சள் குவிண்டாலுக்கு ரூ.10 ஆயிரம் அரசு பரிசீலிப்பதாக வேளாண்துறை தகவல்!!
 5. நிவர் புயல் எதிரொலி : சூறைக்காற்றில் சிக்கிய வேளாண் பயிர்கள் - விவசாயிகள் வேதனை!!
 6. தேசிய பால் தினம் 2020 : வெண்மைப் புரட்சியின் தந்தை வர்கீஸ் குரியன் குறித்து தெரியுமா உங்களுக்கு!!
 7. கொரோனா தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்ளும் கடைசி நபராக நான் இருக்க விரும்புகிறேன்- ஜக்கி வாசுதேவ்!
 8. பயிர் கடன் பெறுவது எப்படி? பயிர் கடன் தரும் வங்கிகள் என்னென்ன? முழு விவரம் உள்ளே!!
 9. Niver Cyclone : அதிகாலையில் கரையைக் கடந்தது - 140 கி.மீ வேகத்தில் சூறாவளிக்காற்றுடன் கனமழை- வெள்ளத்தின் பிடியில் தமிழகம்!
 10. அதிதீவிர புயலாக மாறியது நிவர்; மணிக்கு 16 கி.மீ. வேகத்தில் நகர்கிறது!

CopyRight - 2020 Krishi Jagran Media Group. All Rights Reserved.