இந்த மாம்பழங்கள் ஜப்பானின் கியுஷு மாகாணத்தில் மியாசாகி நகரத்தில் வளர்க்கப்படுகின்றன.எனவே இதன் பெயர் மியாசாகி என்று அழைக்கப்படுகிறது. இந்த மாம்பழங்கள் 350 கிராம் எடையுள்ளவை மற்றும் 15 சதவீதத்திற்கும் மேல் சர்க்கரை உள்ளடக்கம் கொண்டவை.
இந்தியாவில் மிகவும் அரிதான பயிரைப் பாதுகாக்க மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு தம்பதியினர் பாதுகாப்புக் காவலர்களையும், காவலர் நாய்களையும் பணியில் அமர்த்தியுள்ளனர், முதலில் ஜப்பானில் வளர்க்கப்படும் மியாசாகி மா கன்றுகளை ரயிலில் பணிக்கும் போது ஒரு மனிதர் தங்களுக்கு வழங்கியதாக தம்பதியினர் தெரிவிக்கின்றனர்.
இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் பிரபலமான மாம்பழ வகைகளை விட இந்த மாம்பழம் அதன் வித்தியாசமான தோற்றத்திற்கும் வண்ணத்திற்கும் பிரபலமானது. மத்திய பிரதேசத்தில் உள்ள தம்பதியினர் பழம் இளஞ்சிவப்பு நிறத்தில் இருப்பதாகக் கூறினர். இந்த மாம்பழங்களை "சூரியனின் முட்டை" (ஜப்பானிய மொழியில் டையோ-நோ-தமாகோ) என்றும் அழைக்கப்படுகிறது.
ஜப்பானில் இருந்து வரும் மாம்பழங்களின் அழகிய வகைகளைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே:
ஜப்பானில் உள்ள மியாசாகி உள்ளூர் தயாரிப்புகள் மற்றும் வர்த்தக மேம்பாட்டு மையத்தின் கூற்றுப்படி, இந்த மாம்பழங்கள் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை அதிகளவில் வளர்க்கப்படுகின்றன.
மியாசாகி மாம்பழங்கள் உலகின் மிக விலையுயர்ந்தவையாகும், கடந்த ஆண்டு சர்வதேச சந்தையில் ஒரு கிலோ ரூ.2.70 லட்சத்திற்கு விற்கப்பட்டதாக ஜப்பானிய ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
மியாசாகி என்பது ஒரு வகை "இர்வின்" மாம்பழமாகும், இது தென்கிழக்கு ஆசியாவில் பரவலாக வளர்க்கப்படும் மஞ்சள் "பெலிகன் மா" யிலிருந்து வேறுபட்டது என்று ஜப்பானிய வர்த்தக மையம் தெரிவித்துள்ளது.
மியாசாகியின் மாம்பழங்கள் ஜப்பான் முழுவதும் அனுப்பப்படுகின்றன, அவற்றின் உற்பத்தி அளவு ஜப்பானில் ஒகினாவாவுக்குப் பிறகு இரண்டாவது இடத்தில் உள்ளது.
இந்த மாம்பழங்களில் ஆக்ஸிஜனேற்றம் நிறைந்திருக்கிறது மற்றும் பீட்டா கரோட்டின் மற்றும் ஃபோலிக் அமிலம் உள்ளது, இது சோர்வடைந்த கண்களுக்கு உதவி தேவைப்படும் மக்களுக்கு சிறந்தது என்று ரேட் ஊக்குவிப்பு மையம் தெரிவித்துள்ளது.பார்வை குறைவையும் சீராக்க அவை உதவுகின்றன.
70 களின் பிற்பகுதியிலும் 80 களின் முற்பகுதியிலும் மியாசாகியில் மாம்பழம் உற்பத்தி தொடங்கியது என்று உள்ளூர் செய்தி அறிக்கைகள் தெரிவிக்கின்றன. நகரின் வெப்பமான வானிலை, நீண்ட நேரம் சூரிய ஒளி மற்றும் ஏராளமான மழை ஆகியவை மியாசாகியில் உள்ள விவசாயிகளுக்கு மா விவசாயம் செய்ய வழிவகுத்தன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மியாசாகி மாம்பழங்கள் அயல் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்வதற்கு முன்னர் கடுமையான சோதனை மேற்கொள்ளப்பட்டது. மிக உயர்ந்த தரமாக கருதப்படும் மியாசாகி மாம்பழம் "சூரியனின் முட்டை" என்று அழைக்கப்படுகிறது.
இந்த மாம்பழங்கள் பெரும்பாலும் சிவப்பு நிறத்திலும், எரியும் தீ வண்ணத்திலும் மற்றும் அதன் வடிவம் டைனோசர் முட்டைகளைப் போல இருக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும் படிக்க:
பழங்களின் அரசன் மாம்பழம் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?
வண்டுகள் மற்றும் ஈக்களை கட்டுப்படுத்த தோட்டக்கலை துறையினர் ஆலோசனை
ஒரு பழத்தின் விலை ரூ.500 முதல் ரூ.1,000 வரை,மத்தியப் பிரதேசத்தின் 'நூர்ஜஹான்' மாம்பழங்கள்.
Share your comments