பல்வேறு எதிர்ப்புகளின் மத்தியில் நாட்டில் நிதி சேமிப்பை ஊக்குவிப்பதற்காக பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு கொண்டு வந்த ஒரு முதன்மையான திட்டம் தான் இந்த பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனா (PMJDY) திட்டம். இதன் மூலம் 41க்கும் அதிகமான மக்கள் பயனடைந்துள்ளதாக நிதி அமைச்சகம் சமீபத்தில் தெரிவித்துள்ளது.
PMJDY திட்டம் முதன்முதலில் 2014ம் ஆண்டு பிரதமர் மோடி தனது முதல் சுதந்திர தின உரையில் அறிவித்து, அதே ஆண்டில் ஆகஸ்ட் 28ம் தேதி முதல் தொடங்கப்பட்டது. மத்திய அரசின் சமீபத்திய தகவலின் படி இதுவரை 41.6 கோடி மக்கள் ஜன்தன் கணக்குகளை வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியன் எக்ஸ்பிரஸின் 2016 ஆம் ஆண்டின் அறிக்கையின்படி, 2015ம் ஆண்டில் பூஜ்ய இருப்பு வங்கிக் கணக்குகள் 58 சதவீதத்திலிருந்து 7.5 சதவீதமாக கணிசமாகக் குறைந்துவிட்டதாக அமைச்சகம் ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, கடந்த 2018ம் ஆண்டில் இந்த திட்டத்தில் பல அம்சங்கள் மற்றும் நன்மைகள் சேர்க்கப்பட்டு, PMJDY 2.0 ஐ அறிமுகப்படுத்தியது. இந்த சீரமைப்பு திட்டத்தின் கீழ், 'ஒவ்வொரு வீட்டுக்கும்' அல்லது 'வங்கிக் கணக்கு இல்லாத வயது வந்தோருக்கும்' என கவனம் செலுத்தி வங்கிக் கணக்கு ஏற்படுத்திக்கொடுக்க முன்வந்தது. அதற்காக, ஆகஸ்ட் 28, 2018 க்குப் பிறகு திறக்கப்பட்ட PMJDY கணக்குகளுக்கு ரூபே கார்டுகளில் இலவச தற்செயலான காப்பீட்டுத் தொகை 2 லட்சமாகவும், ஒவர் டிராப் 2000 ரூபாயகவும் உயர்த்தியது.
ரிசர்வ் வங்கியின் பரிந்துரைப்படி, இரண்டு வருடங்களுக்கும் மேல் ஜன்தன் வங்கிக் கணக்கில் வாடிக்கையாளர்களிடம் இருந்து எந்தவொரு பரிவர்த்தனைகளும் இல்லாவிட்டால் ஜன்தன் கணக்கு செயல்படாததாகக் கருதப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜன்தன் கணக்கின் நன்மைகள்!
-
ஜன்தன் கணக்கு குறிப்பாக பெண் பயனாளிகளுக்கு அதிகளவு நன்மைகளை அளிக்கிறது.
-
ஜன்தன் கணக்கில் வைப்புத்தொகைக்கு நிலையான வட்டிவிகிதம் வழங்கப்படுகிறது.
-
பயனாளிகளுக்கு வங்கி கணக்குடன் இலவச மொபைல் பேங்கிங் வசதி கிடைக்கும்.
-
மூன்றாவதாக, ஜன்தன் கணக்கு வைத்திருப்பவர்கள் ஓவர் டிராஃப்ட் மூலம் தங்கள் கணக்கிலிருந்து ரூ .10,000 வரை பெறலாம். இருப்பினும், சில மாதங்களுக்கு ஜன்தன் கணக்கை முறையாக பராமரித்த பின்னரே இந்த வசதி வழங்கப்படும்.
-
PMJDY திட்டத்தின் கீழ் உங்களுக்கு ரூ .2 லட்சம் வரையிலான காப்பீட்டுத் தொகையை வழங்கும்.
-
ரூ .30,000 வரை ஆயுள் பாதுகாப்பு காப்பீடும், கணக்கு தாரர் விபத்தில் சிக்கி மரணம் அடைய நேரிட்டால், 2 லட்சம் ரூபாய் வழங்க வகைசெய்யும் ஆயுள் காப்பீடும் வழங்கப்படுகிறது.
-
PMJDY ஜன்தன் கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகையை பராமரிக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், நீங்கள் காசோலை புத்தகத்தின் வசதியை பெற விரும்பினால் குறைந்தபட்ச இருப்பை 500 முதல் 1000 ரூபாய் வரை பராமரிக்க வேண்டும்.
உங்கள் பழைய வங்கிக் கணக்கை ஜன்தன் கணக்காக மாற்றுவது எப்படி?
-
அருகேயுள்ள வங்கி கிளைக்குச் செல்ல வேண்டும்
-
பின்னர், வங்கி வாடிக்கையாளர் அதிகாரியிடம் கேட்டு, அவர் கொடுக்கும் படிவத்தை பூர்த்தி செய்து ரூபே அட்டைக்கு விண்ணப்பிக்கவும்.
-
நீங்கள் படிவத்தை பூர்த்தி செய்தவுடன், அதை வங்கியில் சமர்ப்பிக்கவும்.
-
இதற்குப் பிறகு, உங்கள் வங்கிக் கணக்கு ஜன்தன் கணக்காக மாற்றப்படும்.
புதிதாக வங்கிக்கணக்கைத் தொடங்குவது எப்படி?
நீங்கள் ஜன் தன் வங்கி கணக்கைத் தொடங்க விரும்பினால், கீழே கொடுக்கப்பட்டுள்ளதைப் பின்பற்றுங்கள்
பிரதம மந்திரியின் ஜன் தன் யோஜனா விண்ணப்பப் படிவத்தை அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்தோ அல்லது ஏதாவதொரு வங்கி இணையதளத்திலிருந்தோ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
-
விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, அடையாள ஆவணம், முகவரிச் சான்று ஆகியவற்றை இணைத்து அதனோடு KYC விவரங்களை முழுவதுமாக பூர்த்தி செய்ய வேண்டும்.
-
நீங்கள் ஜன் தன் கணக்கு திறக்க நினைக்கும் வங்கி கிளைக்கு இந்த ஆவணங்கள் மற்றும் கணக்கு திறப்பதற்கான விண்ணப்பத்தையும் எடுத்துச் செல்லவும்.
-
உங்கள் ஆவணங்களை முறையாகச் சரிபார்த்த பின்னர், உங்கள் வங்கிக் கணக்கு திறக்கப்படும்.
விண்ணப்பிக்கத் தேவைப்படும் ஆவணங்கள்
-
ஓட்டுநர் உரிமம்
-
ஆதார் அட்டை
-
வாக்காளர் அடையாள அட்டை
-
கடவுச்சீட்டு (Passport)
-
நிரந்தர கணக்கு எண் அட்டை (PAN card)
-
தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட அடையாள அட்டை (மாநில அரசு அலுவலரால் கையொப்பம் இடப்பட்டது) அல்லது மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்கள்.
மேலும் படிக்க....
Jan Dhan Yojana: ஜன் தன் திட்டம் குறித்து அறிந்து கொள்ள மாநில அளவிலான இலவச உதவி என்கள்!
பெண்களுக்காக 50% மானிய விலையில் அம்மா ஸ்கூட்டர் திட்டம்! - இப்போதே முந்துங்கள்!!
ஓய்வூதியம் வேண்டுமா..? ரூ.55- ரூ.200 செலுத்தி மாதம் ரூ.3000 பெற்றிடுங்கள்!!
Share your comments