2022-23ஆம் ஆண்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட 112 கிராம பஞ்சாயத்துகளில் வசிக்கும் வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பொறியியல் படித்த பட்டதாரிகளை தொழில் முனைவோர்களாக்கி விவசாயிகளுக்கு உதவும் வகையில் வேளாண் பட்டதாரிகளை தொழில் முனைவோர்களாக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
மேற்படி திட்டத்தில் கிராமத்தில் உள்ள பட்டதாரிகளை தொழில் முனைவோர்களாக்கி காளான் வளர்ப்பு, இயற்கை உரம் தயாரித்தல், வேளாண் கருவிகளை வாடகைக்கு விடும் மையம், இயற்கை மற்றஉம் உயிர் பூச்சி மற்றும் பூஞ்சான கொல்லிகள் தயாரித்தல், காய்கறிகள் மற்றும் பழங்களை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து வேன் மூலம் விற்பனை செய்தல், உரம் மற்றும் பூச்சி கொல்லிகள் விநியோகம், மண் மற்றும் தண்ணீர் பரிசோதனை மையம் அமைத்தல், வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்தல், வேளாண் தொடர்பான புதிய உத்திகள் முதலியன அமைத்து விவசாயிகள் பயன்பெறும் வகையில் தொழில்முறை படிப்பு முடித்த இளைஞர்களிடமிருந்து விண்ணப்பம் பெறப்பட்டு மாவட்ட ஆட்சியர் தலைமையலான தேர்வு குழுவின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளது.
இத்திட்டத்தில் பங்கேற்க 21-40 வயதிற்குட்பட்டு இருக்க வேண்டும். வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பொறியியல் துறையில் பட்டபடிப்பு முடித்திருக்க வேண்டும். அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலைகளில் இல்லாதவர்களாக இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு பயனாளி மட்டுமே பயன்பெற முடியும்.
பயனாளிகள் தேர்வு 80%பொது, 19% ஆதிதிராவிடர், 1%பழங்குடியினர் மற்றும் 30% மகளிர் என்ற விகிதத்தில் தேர்வு செய்யப்படும். பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்று, பட்ட படிப்பு சான்று, ஆதார் நகல், ரேசன் அட்டை நகல், வங்கி பாஸ்புக் முதல் பக்க நகல், வங்கியில் கடன்பெற்ற பயனாளிகளின் (கடன் பெற்ற சான்று மற்றும் விபரம்) விரிவான திட்ட அறிக்கையினை (DPR) சமர்பிக்கலாம்.
இதில் 25 சதவீதம் அல்லது 1லட்சம் இவற்றில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படும், வங்கி மூலம் கூடுதல் கடன் பெற்றும் தொழில் தொடங்கலாம். தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் தொழில்முனைவோர் பயிற்சி முடித்த சான்று பெற்று இருக்க வேண்டும் அல்லது தேர்வு செய்யப்பட்ட பின் பயிற்சி வழங்கப்படும்.
பயனாளி தனது மூலதனத்தில் வேளாண்மை சார்ந்த பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் (PMFME)/வேளாண்மை உள் கட்டமைப்பு நிதியின் (AIF) கீழே அனுமதிக்கக்கூடிய திட்டங்களின் அடிப்படையில் சுய தொழில் நிறுவ வேண்டும். எனவே, வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பொறியியல் பட்டம் பெற்ற இளைஞர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் கூடுதல் விபரங்களிக்கு வேளாண்மை இனை இயக்குநர் அலுவலகம் அல்லது வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ்.அனீஷ் சேகர், வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க:
தமிழகம், புதுவைக்கான அடுத்த 5 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
TNEA 2022 தரவரிசைப் பட்டியல் வெளியீடு, விவரங்களைச் சரிபார்க்கவும்
Share your comments