மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 95 வது பிறந்தநாளை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி நிலத்தடி நீர் மேம்பாட்டை வலியுறுத்தும் 'அடல் ஃபூஜல் யோஜனா' திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
அடல் ஃபூஜல் யோஜனா என்றால் என்ன?
அடல் ஃபூஜல் யோஜனா (நிலத்தடி நீர் மேலாண்மைத் திட்டம்) என்பது ஒரு மத்திய அரசின் திட்டமாகும், சுமார் ரூ .6,000 கோடி ஒதுக்கீட்டில் ஐந்து ஆண்டு காலத்திற்குள் செயல்படுத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. குஜராத், ஹரியானா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய ஏழு மாநிலங்களில் அடையாளம் காணப்பட்ட குக்கிராமங்களில் நிலத்தடி நீர் மேலாண்மையை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். அறிக்கையின்படி, இந்த திட்டத்தை செயல்படுத்தினால் 78 மாவட்டங்களில் கிட்டத்தட்ட 8350 கிராம பஞ்சாயத்துகளுக்கு நன்மை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திட்டம் பஞ்சாயத்து அமைப்புகளின் தலைமையிலான நிலத்தடி நீர் மேலாண்மை மற்றும் நிர்வாக மாற்றத்தை மையமாகக் கொண்டு செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டம் குறித்த பேசிய பிரதமர் மோடி, நாட்டின் மொத்த நீர்ப்பாசன பரப்பளவில் நிலத்தடி நீர் சுமார் 65 சதவீதத்தை பங்களிப்பை கொண்டுள்ளதாக கூறினார். மேலும், தண்ணீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்த வேண்டும் என்றும், குறைந்த தண்ணீரை உட்கொள்ளும் பயிர்களை விவசாயிகள் பயிரிட முன்வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
ஆண்டுக்கு ரூ.100 மட்டுமே! - பாதுகாப்பு வாழ்நாள் முழுவதற்கும்!
2024க்குள் ஒவ்வொரு வீட்டிற்கும் தண்ணீர்
'நீர் பிரச்சினை மிகவும் முக்கியமானது மேலும் வாஜ்பாயின் கனவுத்திட்டம்' என்றும் பிரதமர் கூறினார், 2024 க்குள் நாட்டின் ஒவ்வொரு வீட்டிற்கும் தண்ணீரை வழங்கும் நோக்கில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் மோடி தெரிவித்தார்.
அடல் ஃபுஜல் திட்டத்திற்கு யார் நிதியளிப்பார்கள்?
அடல் ஃபூஜல் யோஜனாவின் மொத்த செலவினங்களில், 50 சதவீதம் உலக வங்கி கடன் அளிக்கிறது. மேலும் அவை மத்திய அரசால் திருப்பிச் செலுத்தப்படும். மீதமுள்ள 50 சதவிகிதம் வழக்கமான பட்ஜெட் ஆதரவிலிருந்து மத்திய அரசின் உதவி மூலம் மாநிலங்களுக்கு மானியமாக வழங்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடல் ஃபூஜல் யோஜனாவால் யாருக்கு நன்மை கிடைக்கும்?
திட்ட அறிக்கையின்படி, அடல் ஃபூஜல் யோஜனா திட்டத்தை அமல்படுத்தினால் குஜராத், ஹரியானா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களில் 78 மாவட்டங்களில் கிட்டத்தட்ட 8,350 கிராம் பஞ்சாயத்துகளுக்கு நன்மை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 2020 முதல் 2025 வரையிலான ஐந்து ஆண்டுகளில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ABVKY : அடல் பிமித் வியக்தி கல்யாண் யோஜனா மூலம் வேலை இழந்தவர்கள் சம்பளம் பெறுவது எப்படி?
Share your comments