வங்கிகளின் தொடர் வைப்புத்தொகை (RD) சிறு சேமிப்புகளுக்கு பாதுகாப்பான மற்றும் சிறந்த வழியாகும். இந்தக் கணக்கை நீங்கள் எந்த வங்கியிலும் அல்லது தபால் நிலையத்திலும் தொடங்கி பயன்பெறலாம்.
RD (Bank Recurring Deposit) மூலம், நீங்கள் ஒவ்வொரு மாதமும் உரிய தேதியில் தவணையை ஆர்டியில் டெபாசிட் செய்ய மறந்து விடுவார்கள். இதன் விளைவாக கணக்கு வைத்திருப்பவர்கள் அபராதம் செலுத்த வேண்டி இருக்கும்.
RD தவணை, ஒவ்வொரு மாதமும் டெபாசிட் செய்ய வேண்டிய தொகை, தேதி மற்றும் வட்டி விகிதங்கள் தொடர் வைப்பு (RD) கணக்கைத் திறக்கும் நேரத்திலேயே முடிவாகிவிடும் என்பது குறிப்பிடதக்கது.
வாடிக்கையாளர் அவரவர் வசதிக்கேற்ப, அவர் எத்தனை ஆண்டுகளுக்கு இந்தக் கணக்கை வைக்கலாம் என்று முடிவு செய்துக்கொள்ளலாம்.
SBIஇன் தொடர் வைப்புத் திட்டத்தில், குறைந்தபட்சம் 1 வருடம் மற்றும் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை கணக்கைத் திறக்கலாம். குறைந்தபட்ச வைப்புத்தொகை ரூபாய் 100 தொடங்கலாம். அதிகபட்ச வைப்புத்தொகைக்கு எந்த வரம்பும் இல்லை.
குறிப்பிட்ட தேதியில் RD தவணையை டெபாசிட் செய்யாததற்காக வங்கி அபராதம் விதிக்கலாம். இதற்கு ஒவ்வொரு வங்கிக்கும் வெவ்வேறு விதிமுறைகள் உள்ளன.
எஸ்பிஐயில், நீங்கள் 5 ஆண்டுகள் அல்லது அதற்கும் குறைவான கால கட்டத்திற்கு ஆர்டி செய்து, சரியான நேரத்தில் தவணை செலுத்தாவிட்டால், ரூ. 100 ரூபாய்க்கான அபராதமாக ரூ.1.50 செலுத்த வேண்டும்.
அதே நேரத்தில், 5 ஆண்டுகளுக்கு மேலான கால வரம்பு கொண்ட கணக்குக்கு, இந்த அபராதம் 100 ரூபாய்க்கு 2 ரூபாயாகும். அதே நேரத்தில், தொடர்ந்து 6 தவணைகள் டெபாசிட் செய்யப்படாவிட்டால், வங்கி கணக்கை முடித்துவிட்டு மீதமுள்ள தொகையை கணக்கு வைத்திருப்பவருக்கு கொடுத்தல் வேண்டும். சரியான நேரத்தில் பணத்தை டெபாஸிட் செய்யாவிட்டால், இந்தத் தவறு பெரும் இழப்பை ஏற்படுத்தும், இதற்கு தீர்வும் உள்ளது.
மிக நேரடியான மற்றும் எளிமையான வழி என்னவென்றால், நீங்கள் RD தவணையை உரிய தேதியில் டெபாசிட் செய்வது மட்டுமே, அப்போதுதான் அபராதம் எதுவும் விதிக்கப்படாது. மற்றொரு வழி, வங்கியின் ஆட்டோ டெபிட் வசதியைப் பயன்படுத்துவது.
இதில், உங்கள் சேமிப்புக் கணக்கில் இருந்து ஒவ்வொரு மாதமும் RD தொகை டெபாசிட் செய்யப்படும், வசதி உள்ளது. எனவே, நீங்கள் கவலைப்பட தேவையில்லை. ஆனால் தவணை தேதியில் உங்கள் கணக்கில் போதுமான இருப்பு உள்ளதா என்பதை மட்டும் சரிபார்ப்பது அவசியமாகும்.
RD மூலம் கடன் வசதி
Recurring Deposit (RD) கணக்கைத் திறந்திருந்தால், தேவைப்படும்போது கடன் அல்லது ஓவர் டிராஃப்ட் வசதியையும் பெறும் வாய்ப்பு, உங்களுக்கு வழங்கப்படுகிறது. தொடர் வைப்புத்தொகையின் முதிர்ச்சியின் போது கிடைக்கும் வட்டிக்கு வரி (Interest Income) விதிக்கப்படும் என்பது குறிப்பிடதக்கது. வருமான வரி விதிகளின்படி, கணக்கு வைத்திருப்பவர்கள் 15G/15H படிவத்தை சமர்ப்பித்து வரி விலக்கு பெறும் வாய்ப்பும் உள்ளது.
மேலும் படிக்க:
பருப்பு பயிரிடும் விவசாயிகள் தொடங்கி ஏனைய விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்
தமிழகம்: 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகள் திட்டமிட்டப்படி திருப்புதல் தேர்வு!
Share your comments