ஊழியர்கள் வைப்பு நிதி நிறுவனம், மாதாந்திர வைப்பு நிதி சேமிப்புகளை மட்டுமல்லாமல், ஓய்வூதியத்துக்கு மாதந்திரம் பிடித்தம் செய்யப்படும் தொகை, PPO வாக சேகரிக்கப்படுகிறது.EPFO சேவை பெற PPO எண் இருந்தால் மட்டுமே தொடர்புக்கொள்ள முடியும். இந்த PPO எண்ணை எப்படி பெறுவது என பல கேள்விகள் உள்ளன.
ஒரு ஊழியர் வேலையில் இருந்து ஓய்வு பெறும் போது, EPFO நிறுவனம் ஊழியரின் வைப்பு நிதி மற்றும் பென்ஷன் விவரங்களை பென்ஷன் பேமெண்ட் ஆர்டர் என்ற அறிக்கையில் வழங்குகிறது. ஓய்வுதியம் பற்றிய எந்தவொரு கேள்வி அல்லது சந்தேகம் ஏற்பட்டாலும், மத்திய ஓய்வூதிய கணக்கு அலுவலகத்தைத் (சென்ட்ரல் பென்ஷன் அக்கவுண்டிங் அலுவலகம்) தொடர்பு கொள்ள, இந்த PPO எண்ணை வழங்க வேண்டியது அவசியமாகும்.
உங்களுக்கு ஓய்வூதியம் பெறுவதற்கு, இந்த PPO எண் உதவும் என்பது குறிப்பிடதக்கது. அது மட்டும் இன்றி, நீங்கள் வருடாந்திர லைஃப் சர்டிஃபிகேட் வழங்கும் போதும், இந்த PPO எண்ணைக் குறிப்பிடுதல் அவசியமாகும். எனவே, பென்ஷன் பற்றிய எந்தத் தகவலைப் பெற வேண்டும் என்றாலும், உங்களுக்கு PPO எண் தேவை என்பது குறிப்பிடதக்கது.
இந்த PPO எண் என்பது, உங்களுக்கான பிரத்யேக பான் அல்லது ஆதார் போல, உங்கள் பென்ஷன் கணக்குக்கான பிரத்யேகமான 12 இலக்க எண்ணாகும். இந்தத் திட்டம் ஜனவரி 1, 1990 அன்று அறிமுகமானது. எனவே, அதற்கு முந்தைய அரசு அலுவலங்களின் ஓய்வூதியங்களைப் பற்றிய விவரங்கள், இந்த டேட்டாபேசில் கிடைக்காது என்பதும் குறிப்பிடதக்கது.
PPO எண்ணை பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை : (What you need to know about PPO number)
ஒவ்வொரு PPO எண்ணும் 12 இலக்கங்களைக் கொண்டிருப்பதாகும். அதில் முதல் 5 இலக்கங்கள், உங்கள் PPO வழங்கும் நிறுவனத்தைக் குறிப்பதாகும். அடுத்த இரண்டு இலக்கங்கள், எந்த ஆண்டு வழங்கப்பட்டது என்ற ஆண்டைக் குறிக்கும், அடுத்த நான்கு இலக்கங்கள் PPO வின் வரிசை எண்ணைக் குறிக்கும். இறுதியாக, கடைசி இலக்கம், கணினிக்கானது.
உங்கள் PPO எண்ணை எப்படிக் கண்டுபிடிப்பது என்ற விளக்கம்
* www.epfindia.gov.in என்ற EPFO வின் அதிகாரபூர்வமான இணையத்தளத்துக்குச் செல்ல வேண்டும்
* ‘Pensioners Portal’ என்ற ஓய்வூதியம் பெறுபவர்கள் போர்ட்டல் என்பதைக் கிளிக் செய்யவும்.
* அடுத்த பக்கத்தில், ஓய்வூதியதாரர்களின் போர்ட்டலுக்கு வரவேற்கிறோம் என்ற வரவேற்பு உரைக்கு அடுத்து, ‘Know your PPO No’ என்பதைக் கிளிக் செய்யவும்.
* இந்த இடத்தில், உங்கள் ஓய்வூதியத்துடன் இணைக்கப்பட்ட உங்கள் வங்கிக் கணக்கு எண்ணை சமர்ப்பிக்க வேண்டும். உங்கள் வங்கிக்கணக்கு விவரங்களைச் சமர்ப்பிக்கும் போது, உங்களுடைய பென்ஷன் கணக்கின் PPO எண், உறுப்பினர் ஐடி மற்றும் ஓய்வூதிய வகையை தெரிந்து கொள்ளலாம்.
*இது தவிர, நீங்கள் PPO எண்ணை நேரடியாகவும் பெறலாம்: https://mis.epfindia.gov.in/PensionPaymentEnquiry/ என்ற இணையத்தளத்துக்குச் செல்லவும். இது ஊழியர்களுக்கு வழங்கப்படும் தனிப்பட்ட போர்ட்டலாகும்.
இந்த தளத்தில், நான்கு வெவ்வேறு சேவைகளைப் பயன்படுத்தலாம்:
* ஜீவன் பிரமான விசாரணை
* PPO எண்ணைத் தெரிந்து கொள்ளலாம்
* PPO விசாரணை/ பேமெண்ட் பற்றிய விசாரணை
* உங்கள் ஓய்வூதிய நிலை
மேலே உள்ள இரண்டு வழிகளில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி, உங்கள் PPO எண்ணையும் தெரிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க:
மீண்டும் நாட்டிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் 54 சீன செயலிகளுக்கு, இந்திய அரசு தடை!
Share your comments