இனி மூன்று வேளையும் இலவச உணவு- தமிழக அரசின் அதிரடி திட்டம்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Free food for all three now - Government of Tamil Nadu Action Plan!

Credit: Hindu Tamil

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு, 3 வேளையும் இலவச உணவு வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

முழு ஊரடங்கு (Full curfew)

கொரோனா இரண்டாவது அலை மிகவும் வேகமாகப் பரவி வரும் நிலையில் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேநேரத்தில், தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குவியும் நோயாளிகள் (Accumulating patients)

ஊரடங்கினால் மட்டுமே கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியும் என்று ஊரடங்கு போட்டாலும், மக்களின் வாழ்வாதாரம் மறுபுறம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகள் குவிந்த வண்ணம் இருக்கின்றனர். 

உணவுக்கு சிக்கல் (Problem with food)

ஒரேக் குடும்பத்தைச் சேர்ந்த பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதால் அவர்களுக்கு உணவு கிடைப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.

நிவாரணம் (Relief)

இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் விதமாக முதல் தவணையாக 2000 ரூபாய் ரேஷன் அட்டைகள் மூலம் வழங்கப்படுகிறது. அதற்கான டோக்கன்கள் வழங்கும்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மே 15ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் நிவாரண தொகை வழங்கப்பட உள்ளது.

புதியத் திட்டம் (New project)

இந்நிலையில் சென்னையில் பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் முக்கிய திட்டம் ஒன்றை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.
சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஏழை எளிய மக்களின் பசியைப் போக்கும் விதமாக 24 மணி நேரமும் உணவு வழங்கும் திட்டத்தை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தால் அனைவரும் பயனடைவார்கள் என்று நம்பப்படுகிறது.

அம்மா உணவகங்கள் (Amma restaurants)

இது, அதிமுக அரசு கொண்டு வந்த திட்டம் என்றாலும் பல மக்களின் பசியைப் போக்க முக்கிய பங்கு வகிக்கிறது என்பதால் அம்மா உணவகங்கள் தொடர்ந்து சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

முதலமைச்சர் உத்தரவு (Order of the Chief Minister)

அண்மையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் நோயாளிகளுக்குத் தரமான உணவு வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க...

ரூ.4,000 கொரோனா நிவாரணம் வழங்கும் திட்டம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்!

இவர்களுக்கு ரூ.2,000 கொரோனா நிவாரணம் கிடையாது, தமிழக அரசின் அதிர்ச்சித் தகவல்!

அரிசி அட்டை தாரருக்கு ரூ.4000, பால் விலை குறைப்பு - முத்தான 5 திட்டங்களுக்கு மு.க.ஸ்டாலின் கையெழுத்து!

English Summary: Free food for all three now - Government of Tamil Nadu Action Plan!

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2022 Krishi Jagran Media Group. All Rights Reserved.