Chennai : தமிழக அரசின் உயர்கல்வி உதவித் தொகை திட்டத்தின்படி, இளநிலை படிப்புகளை மேற்கொள்ளும் மாணவியரின் விபரங்களை, அரசு மற்றும் சுயநிதி கல்லுாரிகளில் வரும், 30ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என, தமிழக உயர்கல்வி துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கல்லுாரி கல்வி இயக்குனர், தொழில்நுட்ப கல்வி இயக்குனர், அனைத்து வகை பல்கலைகளின் பதிவாளர்களுக்கு, தமிழக உயர்கல்வி முதன்மை செயலர் கார்த்திகேயன் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டதாவது: தமிழகத்தில் உள்ள கலை, அறிவியல் கல்லுாரிகள் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரிகள் உள்ளிட்டவற்றில், இளநிலை படிக்கும் மாணவியருக்கான மூவலுார் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டம், நடப்பு கல்வி ஆண்டில் செயல்படுத்தப்படுகிறது.
அரசு, அரசு உதவி பெறும் கல்லுாரிகள், சுயநிதி கல்லுாரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலையில் உயர்கல்வியை தொடரும் மாணவியர், இத்திட்டத்தில் பயன்பெறுவார் என்பது குறிப்பிடதக்கது. விண்ணப்பிக்கும் அதிகாரப்பூர்வ இணையத்தளம் கிழே வழங்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: News Update: இன்றைய முக்கிய செய்திகள்
RBI update: கிரெடிட், டெபிட் கார்டு 'டோக்கனைசேஷன்' காலக்கெடு நீட்டிப்பு
இதற்காக இன்று முதல், 30ம் தேதிக்குள் கல்லுாரிகளில் சிறப்பு முகாம் அமைத்து, https://penkalvi.tn.gov.in என்ற இணையதளத்தில், மாணவியரின் விபரங்களை பதிவிட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. அரசு பள்ளிகள், மாநகராட்சி, பஞ்சாயத்து ஒன்றியம், ஆதி திராவிடர், பழங்குடியினர், கள்ளர் சீரமைப்பு, வனத்துறை பள்ளிகள் மற்றும் அரசால் நிர்வகிக்கப்படும் பள்ளிகளில், ஆறு முதல் பிளஸ் 2 வரை படித்த, மாணவியரின் வங்கி கணக்கு மற்றும் அரசு பள்ளி விபரங்களை, இதில் பதிவு செய்ய வேண்டும்.
ஆதார் நகல் |
வங்கி கணக்கு புத்தகத்தின் முகப்பு நகல் |
10ம் வகுப்பு மதிப்பெண் நகல் |
பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் நகல் |
பள்ளி மாற்று சான்றிதழ் நகல் |
ஆகியவற்றை, மாணவியர் கல்லுாரிகளுக்கு எடுத்து வந்து பதிவு செய்ய வேண்டியிருக்கும். மாணவியர் தாங்களாகவும் இணையதளத்திலும் பதிவு செய்துக் கொள்ளலாம்.
இந்த பதிவுகளை, வரும் 30ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்பது குறிப்பிடதக்கது. இதுகுறித்து, கல்லுாரி முதல்வர்களுக்கு உரிய வழிமுறைகள் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:
11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு.. டவுன்லோட் லிங்க் இதோ!
Share your comments