PM-KMY: விவசாயிகளுக்கான ஓய்வூதியத் திட்டம் - பயன்கள் மற்றும் தேவைப்படும் ஆவணங்கள்!!

Daisy Rose Mary
Daisy Rose Mary
Credit : Dreams time

பிரதமரின் கிஸான் மன் தன் யோஜனா திட்டத்தின் மூலம் விவசாயிகள் 60 வயதை அடையும் போது அவர்களுக்கான ஓய்வு ஊதியமாக ஒவ்வொரு மாதமும் ரூ.3,000 வழங்கப்படுகிறது. சிறு விவசாயிகளின் முதியோர் பாதுகாப்பினை உறுதி செய்யும் விதமாக இந்த திட்டம் அமைந்துள்ளது.

PM-KMY திட்டம் என்றால் என்ன?

பிரதமரின் கிஸான் மன் தன் யோஜனா (Pradhan Mantri Kisan Maandhan Yojana) என்ற திட்டம் நாட்டில் உள்ள விவசாயிகளின் சமூக பாதுகாப்பிற்காகவும், விவசாயிகளின் முதியோர் பாதுகாப்பினை உறுதி செய்யும் விதமாகவும் கடந்த 2019 ஆண்டு தொடங்கப்பட்டது. ஆகஸ்ட் 1,2019 நிலவரப்படி மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்களின் நிலப்பதிவுகளில் பெயர் இருக்கும் விவாசயிகள் இந்த திட்டத்தில் பயன்பெற தகுதியுடையவர்கள்

PM-KMY விதிமுறைகள்

  • 18 முதல் 40 வயதுக்குட்பட்டும், இரண்டு ஹெக்டேர் வரை சாகுபடி செய்யக்கூடிய நில உரிமையாளர்கள் விண்ணப்பிக்கலாம்.

  • இந்த திட்டத்தில் இனையும் விவசாயி அவரின் வயதுக்கேற்ப மாதம் தோறும் 55 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை பணம் செலுத்த வேண்டும்.

  • இப்படி பணம் பங்களிப்பு செய்வது அவருக்கு 60 வயது ஆகும் வரை தொடரும். அதைத் தொடர்ந்து விவசாயி தனது ஓய்வூதியத் தொகையை மாதம் தோறும் கோர முடியும்.

  • விவசாயி இந்த திட்டத்தை இடையில் விட்டுவிட விரும்பினால், அவரது பணம் திருப்பிக்கொடுக்கப்படாது

PM-KMY -திட்டத்தின் பயன்கள்

  • ஒரு குடும்பத்தில் உள்ள கணவனும், மனைவியும் தனித்தனியாக விவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டத்தில் இணைந்து கொள்ளலாம்.

  • பயனாளர் மாதம் தோறும் குறைந்தபட்சம் ரூபாய் 3,000/- என்றும் வருடத்திற்கு 36,000 வீதம் உதவியாக தனது வயதான காலத்தில் பெறலாம்.

  • இந்த திட்டத்தில் இணைந்த விவாசயிகள் ஓய்வூதிய திட்டம் முடியும் முன்பே இறந்தால் , அவருடைய மனைவி திட்டத்தை தொடரலாம். அவருக்கு விருப்பம் இல்லையெனில் கணவர் கட்டிய தொகையுடன் வட்டியும் சேர்த்து மனைவிக்கோ அல்லது அவர்களது பிள்ளைகளுக்கு தரப்படும்.

  • ஓய்வூதியம் பெற்று கொண்டிருக்கும் விவசாயி இறந்தால் அவரது மனைவிக்கு 50% அதாவது ரூ 1500/- வழங்கப்படும்.

  • கணவனோ, மனைவியோ உயிருடன் இல்லையெனில் அவரது பணம் ஓய்வூதிய நிதியில் வரவு வைக்கப்படும்.

யார் தகுதியற்றவர்கள்

தேசிய ஓய்வூதிய திட்டம் (National Pension Scheme ), மாநில காப்பீட்டுக் கழகம் (Employees State Insurance Corporation Scheme) பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மந்தன் யோஜனா (Pradhan Mantri Shram Yogi Maandhan Yojana), பிரதான் மந்திரி வியாபரி மந்தன் யோஜனா (Pradhan Mantri Vyapari Maandhan Yojana) ஆகிய திட்டங்களில் உறுப்பினராக உள்ளவர்கள் PM-KMY திட்டத்துக்கு தகுதியற்றவர்களாகிறார்கள்.

இந்த திட்டத்தில் இணைய தேவையான ஆவணங்களுடன் அருகில் உள்ள பொது சேவை மையத்துக்கு சென்று ஆன்லைன் மூலமாக பதிவு செய்யலாம்.

English Summary: How Farmers Can Get Rs. 36000 Yearly Under PM Kisan Maan dhan Yojana Details inside Published on: 11 June 2020, 03:51 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.