மின்சார பம்ப் செட்டுகள் விவசாயத்தில் முக்கியமானவை, ஏனெனில் அவை பாசனத்திற்காக தண்ணீரை திறம்பட விநியோகித்து, நல்ல விளைச்சலுக்கு ஆரம்ப புள்ளியாக உள்ளது. எனவே, மின் மோட்டர் பம்ப்செட் வாங்க தமிழகத்தில் செயலில் உள்ள திட்டம் தொடர்பாக அறிக.
இவை நிலையான நீர் விநியோகத்தை உறுதி செய்கின்றன, பயிர் விளைச்சல் மற்றும் தரத்தை அதிகரிக்கின்றன. அவை உழைப்பு, நேரம் மற்றும் ஆற்றலைச் சேமிக்கின்றன, நிலையான மற்றும் லாபகரமான விவசாயத்திற்கு பங்களிக்கின்றன. அவ்வாறு இருக்க மின் மோட்டர் பம்ப்செட் வாங்க என்ன செய்ய வேண்டும் என்று விவசாயிகள் அறிவதில்லை. இப்பதிவில் இத்திட்டம் பற்றிய விளக்கமான விளக்க உரையை காணலாம்.
மானியத்தில் மின்மோட்டர் பம்புசெட்டுகள்:
நோக்கம்:
மின்சார பயன்பாட்டுத் திறனை அதிகரித்தல்.
அதிகமான பாசன நீரினை குறைந்த செலவில் குறைத்தல்.
நிதி ஆதாரம்:
ஒன்றிய மற்றும் மாநில அரசு நிதி
மானியங்களும், சலுகைகளும்
புதிதாக வாங்கப்படும் மின் மோட்டர்களின் மொத்த விலையில் ரூ.15,000/- அல்லது 50% இவற்றில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படும்.
திட்டப் பகுதி: தமிழகத்தின் அனைத்து மாவட்டங்கள் (சென்னை நீங்கலாக).
மேலும் படிக்க: ஆழ்துளை கிணறு அமைக்க 50 விழுக்காடு மானியத்துடன் கடன் திட்டம்: பயன்பெற அழைப்பு!
செயல்படுத்தப்படும் பணிகள்:
பழைய மின் மோட்டர் பம்பு செட்டுகளை புதிதாக மாற்றுவதற்கு அல்லது அமைக்கப்படும் கிணறுகளுக்கான புதிய மின் மோட்டார் பம்பு செட்டுகள் அமைப்பதற்கு மானியம் வழங்குதல்.
தகுதி:
- 5 ஏக்கர் வரை நிலம் உளஅ விவசாயிகளுக்கு மட்டும் மானியம் வழங்குதல்.
- தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமை மூலம் ஏற்கனவே நுண்ணீர்ப்பாசனம் நிறுவியுள்ள விவசாயிகள், அல்லது தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமை மூலம் நுண்ணீர்ப்பாசனம் அமைத்து கொள்ள விருப்பம் உள்ள விவசாயிகள் மட்டும் தகுதியுடைவர்களாக இருக்கின்றனர்.
தேர்வு செய்தல்
மூதுரிமை அடிப்படையில் விவசாயிகள் வேளாண்மைப் பொறியியல் துறையால் அங்கீகரிக்கப்பட்ட 4 ஸ்டார் தரத்திற்கு குறைவில்லாமல் உள்ள பல்வேறு நிறுவனங்களின் மின்மோட்டர் பம்புசெட்டுகளின் மாடல்களை தங்களுக்கான நிறுவனத்தினை தங்களது முழு விருப்பத்தின் பேரில் தேர்வு செய்து கொள்ளலாம்.
அணுக வேண்டிய அலுவலர்
- சம்மந்தப்பட்ட வருவாய்க் கோட்டத்திலுள்ள உதவி செயற் பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறை.
- எனவே, புதிதாக மின் மோட்டார் பம்பு செட் அமைக்க நினைக்கும் மற்றும் பழைய மின்மோட்டார் பம்ப் செட்டை வாங்க நினைக்கும் விவசாயிகளுக்கு, இத்திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம்.
மேலும் படிக்க:
2ஆம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான பொதுத் தேர்வு அறிவிப்பு!
Share your comments