பிரதமரின் கிசான் திட்டத்தில் இது வரை விண்ணப்பிக்காத விவசாயிகள் வரும் அக்டோபர் 31ம் தேதிக்குள் விண்ணப்பித்து நவம்பர் மற்றும் டிசம்பர் மாத இரண்டு தவணைகளை பெற முடியும்.
பிரதமரின் கிசான் சம்மன் நிதி (Pradhan Mantri Kisan Samman Nidhi yojana) திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 மூன்று தவணைகளில் மத்திய அரசு வழங்கி வருகிறது. இது வரை 6 தவணைகளை மத்திய அரசு இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு வழங்கியுள்ளது. இந்நிலையில், பிரதமரின் கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தில் இதுவரை பதிவு செய்யாத விவசாயிகள், அக்டோபர் 31க்கு முன் விண்ணப்பித்து, அவர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டால், அவர்களுக்கு நவம்பர் மாதம் முதல் தவணையும், டிசம்பர் மாதம் இரண்டாவது தவணைக்கான பணத்தை அவரவர் வங்கிக் கணக்கில் பெறலாம்.
அதவாது, மத்திய அரசு மூன்று தவணையாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக பணத்தை செலுத்தி வருகிறது. இதன் படி, வரும் அக்டோபர் 31-ம் தேதிக்குள் இந்த திட்டத்தில் இணைய நீங்கள் விண்ணப்பிப்பதன் மூலம் ஆகஸட் மாதத்திற்கான தவணையை வரும் நவம்பர் மாதத்தில் பெறலாம், அதேபோல் டிசம்பர் மாதத்திற்கான தவணை உங்கள் கணக்கிற்கு வரும். எனவே நீங்கள் 2 தவணையை அடுத்து அடுத்து பெற வாய்ப்பு உள்ளது.
பி.எம் கிசான் திட்டத்தில் இணைய தேவைப்படும் முக்கிய ஆவணங்கள்
பிரதமர் கிசான் சம்மன் நிதி யோஜனா (Pradhan Mantri Kisan Samman Nidhi yojana) திட்டத்தின் கீழ் வரும் நன்மைகளைப் விவசாயிகள் பெறுவதற்கு ஆதார் அட்டை (AATHAR card) வைத்திருப்பது கட்டாயமாகும். மத்திய அரசு நேரடியாக உங்கள் வங்க கணக்கிற்கு (Direct Benefit Transfer) உங்களுக்கான தவணையை வழங்குகிறது. எனவே உங்களுக்கு வங்கி கணக்கு (Bank Account) இருப்பது அவசியம், மேலும் உங்கள் வங்கிக் கணக்கு ஆதார் உடன் இணைக்கப்பட வேண்டும். விவசாயிகள் மொபைல் எண்ணும் (Mobile Number)இருக்க வேண்டும்.
பி.எம் கிசான் திட்டத்தில் ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி?
நீங்கள் பதிவு செய்யும் பணியைத் தொடங்குவதற்கு முன், உங்கள் விவசாய நிலத்தின் ஆவணங்கள், ஆதார் அட்டை, புதுப்பிக்கப்பட்ட வங்கி கணக்கு, முகவரி ஆதாரம் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் உங்களிடம் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றுங்கள்
-
முதலில் PM- Kisan - னின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்லுங்கள் https://pmkisan.gov.in/
-
பின் Farmers corner-என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து அதில், ''New Farmer Registration'' என்பதை கிளிக் செய்யுங்கள்.
-
இதன் பின் வரும் புதிய பக்கத்தில் உங்கள் ஆதார் எண்ணை பதிவிடுங்கள்
-
தொடர்ந்து உங்கள் மாநிலம் அல்லது மாவட்டம், பெயர், பாலினம், வகை, ஆதார் அட்டை தகவல், பணம் மாற்றப்படும் வங்கி கணக்கு எண், அதன் ஐஎஃப்எஸ்சி (IFSC)குறியீடு, முகவரி, மொபைல் எண், பிறந்த தேதி போன்ற அனைத்து விவரங்களையும் நிரப்பவும். நீங்கள் காஸ்ரா எண், எவ்வளவு நிலம் போன்ற நில விவரங்களையும் கொடுக்க வேண்டும்.
-
இந்த தகவல்களை பூர்த்தி செய்த பின்னர், படிவத்தை சமர்ப்பிக்கவும்.
பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டம் கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மோடி அரசால் தொடங்கப்பட்டது, இந்த திட்டம் 2018 டிசம்பர் 1 முதல் நடைமுறைக்கு வந்தது. இந்த திட்டத்தின் கீழ், மத்திய அரசு விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் மூன்று தவணைகளில் ரூ. 6000 ரூபாய் வழங்கி வருகிறது. இதற்கான முதல் தவணை டிசம்பர் 1 முதல் மார்ச் 31 வரையும். இரண்டாவது தவணை ஏப்ரல் 1 முதல் ஜூலை 31 வரையும், இதன் மூன்றாவது தவணை ஆகஸ்ட் 1 முதல் நவம்பர் 30 வரை விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க...
லட்சத்தில் சம்பாதிக்க வேண்டுமா? கால்நடை வளர்ப்பு
தொடங்கும் பருவமழை - கால்நடைகளுக்கு அவசர சிகிச்சை அளிக்க தொடர்பு எண் அறிவிப்பு!
Share your comments