கொரோனா கால நெருக்கடி நிலையை சமாளிக்க விவசாயிகளுக்கு கிசான் கிரெடிட் கார்டு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், இதன் மூலம் விவசாயிகள் குறைந்த வட்டியில் விவசாயம் சார்ந்த தேவைகளுக்கு கடன் பெற முடியும். கிசான் கிரெடிட் கார்டு பெற தேவைப்படும் ஆவணங்கள் என்னென்ன மற்றும் விண்ணப்பிக்கும் முறை குறித்து விரிவாக பார்போம்.
கிசான் கடன் அட்டையின் (Kisan credit Card) சிறப்பம்சங்கள்
-
இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகள் ரூபாய் 1.60 லட்சம் வரையிலான கடன் பெற எந்தவித அடமானமும் தேவையில்லை.
-
KCC- மூலம் விவசாயிகள் ரூ.3 லட்சம் வரை குறுகிய கால கடனை குறைந்த வட்டியில் பெற முடியும். முறையாக தவணை செலுத்தும் விவசாயிகளுக்கு 4 சதவீத வட்டி மட்டுமே வசூலிக்கப்படுகிறது.
-
கடன் அட்டையின் மூலம் கடன் பெற்றுள்ள விவசாயிகள் சாகுபடி செய்துள்ள பயிர்களுக்கும் பயிர் காப்பீடு திட்டத்தின் மூலம் காப்பீடு செய்யப்படும்
-
கடன் அட்டை கணக்கில் உள்ள விவசாயிகளின் சேமிப்பு பணத்திற்கு கூடுதல் வட்டியும் வழங்கப்படும்.
கிசான் கிரெடிட் கார்டு பெற யார் தகுதியுடையவர்கள்?
-
விண்ணப்பதாரர் விவசாயத்துடன் தொடர்புடையவராக இருக்க வேண்டும்.
-
18 வயது முதல் 75வயது வரையிலான விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.
-
60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் துணை விண்ணப்பதாரர் கட்டாயம் அவசியம்.
-
மற்றவரின் நிலத்தில் விவசாயம் செய்யும் விவசாய நபர் கூட இந்த கடன் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.
தேவைப்படும் ஆவணவங்கள் என்ன?
-
முழுமையாக நிரப்பப்பட்ட கிசான் கடன் அட்டைக்கான (KCC) விண்ணப்ப படிவம்
-
ஆதார் அட்டை, வாக்காளர் ஐடி, ஓட்டுநர் உரிமம் போன்ற புகைப்படத்துடன் கூடிய அடையாள ஆதாரம்.
-
நில ஆவணங்கள்.
-
இரண்டு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள்
-
வங்கிகள் கோரும் பிற ஆவணங்கள்.
எந்த எந்த வங்கிகள் கிசான் கடன் அட்டைகளை வழங்குகின்றன?
நபார்ட்(NABARD), ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (State Bank of India), ஆக்சிஸ் வங்கி (Axis Bank), பஞ்சாப் நேஷனல் வங்கி (Punjab National Bank), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (Indian Overseas Bank), பேங்க் ஆப் இந்தியா (Bank of India), எச்.டி.எஃப்.சி வங்கி (HDFC Bank) மற்றும் ஐ.டி.பி.ஐ (IDBI) ஆகிய வங்கிகள் கிசான் கிரெடிட் கார்டை வழங்குகின்றன.
PM Kisan: 8-வது தவணை நிதியை விடுவித்தார் பிரதமர் நரேந்திர மோடி - 9.5 கோடி விவசாயிகள் பயன்!!
அதிகாரப்பூர்வ பக்கத்தின் மூலம் படிவத்தை பதிவிறக்கம் செய்வது எப்படி?
விவசாயிகள் பதிவு செய்வதை எளிதாக்குவதற்கு, மத்திய அரசும் பிரத்யேக அதிகாரப்பூர் பக்கத்தையும் உருவாக்கி உள்ளது. இதன் மூலமும் நீங்கள் கிசான் கிரடிட் கார்டுக்கு எளிதில் விண்ணப்பிக்கலாம்.
-
PM Kisan Samman Nidhi-யின் அதிகாரப்பூர்வ இணையதள செல்லவும்.
-
பின்பு Farmers Corner-ல் Down Loan Kcc form என்பதை கிளிக் செய்யவும்
-
பின் கிசான் கடன் அட்டைக்கான படிவத்தைப் பதிவிறக்கம் செய்யவும்,
-
பதிவிறக்கம் செய்த படிவத்தை கவனமாக பூர்த்தி செய்து அருகிலுள்ள வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்.
-
கிசான் கிரெடிட் கார்டு தயாரானதும், வங்கி விவசாயிக்கு தகவல் அளித்து அவரது முகவரிக்கு அனுப்பப்படும்.
நேரடியாக படிவத்தைப் பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்
வங்கி மூலம் விண்ணப்பிக்கும் முறை?
-
எஸ்பிஐ (SBI), ஆக்சிஸ் வங்கி (Axis Bank), பிஎன்பி (PNB), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி(IOB) உள்ளிட்ட எந்த வங்கியில் உங்களுக்கு கணக்கு உள்ளதோ அந்த வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லுங்கள்
-
அதில் Apply for KCC என்பது குறித்து தேடுங்கள், பின் அந்த படிவத்தை பதிவிறக்கம் செய்யுங்கள்.
-
கிசான் கடன் அட்டை (KCC)படிவத்தை முழுமையாகப் பூர்த்தி செய்யுங்கள்.
-
பூர்த்தி செய்த படிவத்தை பதிவிறக்கம் செய்து, அருகிலுள்ள வங்கியின் கிளைக்குச் சென்று சமர்ப்பிக்கவும்.
கடன் அட்டை வழங்கும் அதிகாரி உங்கள் படிவத்தை மதிப்பாய்வு செய்து அவர் கூறும் அறிவுரைகளைப் பின்பற்றவும். கடன் அட்டை ஒப்புதல் அளிக்கப்பட்டதும், கிசான் கிரெடிட் கார்டு உங்கள் இல்லம் தேடி வரும் பெற்றுக்கொள்ளுங்கள்
மேலும் படிக்க....
வேளாண் தொழில்நுட்பங்களை அறிய விவசாயிகள் வேளாண் துறையை போன் மூலம் தொடா்பு கொள்ளலாம்!!
குறுவை சாகுபடிக்கான நெல் விதைகள் விற்பனை, விவசாயிகள் பயன்பெற அழைப்பு!!
Share your comments