PM kisan திட்டத்தின் கீழ் 14 வது தவணையாக எப்போது ரூ.2000 வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்யப்படும் என விவசாயிகள் காத்திருக்கும் நிலையில் அதன் உத்தேச தேதி குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
PM kisan திட்டம்:
இந்தியாவில் உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு உதவும் வகையில் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி உதவித் திட்டம் (PM kisan சம்மான் நிதி) 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின்படி, 4 மாதங்களுக்கு ஒருமுறை தலா 2 ஆயிரம் ரூபாய் என ஆண்டிற்கு 6 ஆயிரம் ரூபாய் விவசாயிகளுக்கு நிதியுதவியாக அளிக்கப்படுகிறது. இந்த தொகையானது விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்தியா முழுவதும் 10.09 கோடி விவசாயிகள் இந்த திட்டத்தினால் பயன் பெற்று வருகின்றனர். விவசாயிகளுக்கு பிஎம் கிசான் நிதியுதவி திட்டம் ஒரு வரப்பிரசாதமாகவே கருதப்படுகிறது.
இதனிடையே PM கிசானின் 13-வது தவணை பிப்ரவரி 27, 2023 அன்று வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 14-வது தவணை மே மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் வழங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அதன் உத்தேச தேதி வெளியாகியுள்ளது.
ஜூன் மாதம்- 14 வது தவணை:
கிடைத்துள்ள ஆதாரங்களின்படி, ஜூன் மாதத்தில் PM kisan யோஜனாவின் அடுத்த தவணைக்கான பணத்தை ஒன்றிய அரசு வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்ய உள்ளது. இந்த முறை ஜூன் 23-ஆம் தேதி 14 வது தவணையாக ரூ.2000 விவசாயிகளின் கணக்கில் டெபாசிட் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
PM Kisan Yojana அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 12 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் 13-வது தவணை நிதியுதவினை பெற பதிவு செய்துள்ளனர். ஆனால் 8.69 கோடி விவசாயிகள் மட்டுமே 13-வது தவணையின் கீழ் தலா ரூ.2,000 பெற்றுள்ளனர்.
மீதமுள்ள 3.30 கோடி பதிவு செய்த விவசாயிகள் பல காரணங்களால் நிதியுதவி பெற முடியவில்லை. இவர்களில் சிலர் பயனாளிகள் அல்லாதவர்கள், மற்றவர்கள் சரிபார்ப்பு முடிக்கப்படாததால், புதிய தவணைகளின் பலனைப் பெற இயலவில்லை.
PM Kisan Yojana மூலம் பயனடையும் விவசாயிகளை அடையாளம் காண, சரிபார்ப்பு செயல்முறை அல்லது e-KYC அவசியமானது. e-KYC, ஆதார் விவரங்கள், நில விதைப்பு மற்றும் பிற விவரங்களை புதுப்பித்த விவசாயிகள் மட்டுமே அடுத்த தவணைக்கு தகுதி பெறுவார்கள்.
அதுமட்டுமின்றி, பயனாளி தனது பெயர், ஆதார் அட்டை, வங்கி விவரங்கள் மற்றும் இதர ஆவணங்களில் ஏதேனும் தவறுகள் இருந்தால் அதனை திருத்தியிருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்க. அதிகாரப்பூர்வ தேதியானது இன்னும் ஒரிரு நாட்களில் அதிகாரப்பூர்வமாக பிரதமர் அறிவிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காண்க:
பருத்திக்கு 11 % இறக்குமதி வரி- விலக்கு கேட்கும் SIMA.. காரணம் ஏன்?
Share your comments