PM Kisan யோஜனாவின் 14 வது தவணையினை பெற e-KYC விவரங்களை இன்றுக்குள் விவசாயிகள் புதுப்பித்திருக்க வேண்டும். இந்த முக்கியமான அப்டேட் செய்தால் மட்டுமே 2000 ரூபாய் உங்களுக்கு வரும்.
PM Kisan யோஜனா திட்டம் விவசாயிகளின் பொருளாதார சுமையினை கணிசமாக குறைக்கும் திட்டமாக கருதப்படுகிறது. இந்நிலையில் e-KYC விவரங்களை புதுப்பித்து கொள்ளுமாறு விவசாயிகளுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதன் போது, ஏதேனும் பிரச்னைகள் ஏற்பட்டால், விவசாயிகள் திட்டத்தின் உதவி எண்- 155261 அல்லது 1800115526 (கட்டணமில்லா) அல்லது 011-23381092 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். பி.எம்.கிசான் தொடர்பான எந்தவொரு பிரச்சனைக்கும் விவசாயிகள் pmkisan-ict@gov.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்
PM Kisan சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. நான்கு மாதங்களுக்கு ஒருமுறை மூன்று தவணைகளாக தலா இரண்டாயிரம் ரூபாய் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. தற்போது விவசாயிகளுக்கு 13 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன. 14-வது தவணைக்காக விவசாயிகள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஜூன் 15 ஆம் தேதிக்குள் (இன்று) e-KYC விவரங்களை புதுப்பித்துக்கொள்ள விவசாயிகளுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.இந்நிலையில் ஜூன் 15 ஆம் தேதிக்கு பிறகு இரண்டாயிரம் ரூபாய் விவசாயிகள் கணக்கில் விரைவில் செலுத்தப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
14 வது தவணையின் போது நிதியுதவி பெறும் பயனாளிகளின் எண்ணிக்கையில் குறைவு ஏற்படலாம் என கருதப்படுகிறது. முந்தைய தவணைகளின் போது, PM கிசான் பயனாளிகளின் எண்ணிக்கையில் கணிசமான குறைப்பு ஏற்பட்டது. நிலப் பதிவேடுகள் சரிபார்த்ததே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. 14-வது தவணையின் போதும், பயனாளிகள் பட்டியலில் இருந்து தகுதியற்ற ஏராளமான விவசாயிகளின் பெயர்கள் நீக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தவறான தகவல்களை வழங்கி நிதியுதவி பெற்ற விவசாயிகளிடம், பணத்தை திரும்ப வழங்குமாறு அரசிடம் இருந்து தொடர்ந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது. பணம் திரும்ப வராத பட்சத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுவரை e-KYC விவரங்களை அப்டேட் செய்யாதவர்கள் இணையதளத்தின் மூலம் அப்டேட் செய்யும் முறை பின்வருமாறு-
> இதற்கு நீங்கள் முதலில் www.pmkisan.gov.in க்குச் செல்ல வேண்டும்.
> முகப்புப் பக்கம் உங்கள் முன் திறக்கும்.
> பின்னர் E-KYC என்ற விருப்பத்திற்குச் செல்லவும்.
> இதற்குப் பிறகு ஆதார் எண் மற்றும் கேப்ட்சாவை உள்ளிடவும்.
> ஆதார் எண் மற்றும் மொபைல் எண்ணை உள்ளிடவும்.
> இதற்குப் பிறகு உங்கள் மொபைலில் OTP வரும்.
> OTP ஐ உள்ளிட்ட பிறகு, உங்கள் e-KYC விவரம் அப்டேட் செய்யப்படும்.
வருகிற 18 ஆம் தேதி, பிரதமர் மோடி 102-வது முறையாக காலை 11 மணியளவில் மன்-கீ-பாத் நிகழ்வில் உரையாற்ற உள்ளார். அப்போது 14 வது தவணை குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும் காண்க:
PM kisan 13 வது தவணை- பதிவு செய்த விவசாயிகளுக்கு கிடைக்காமல் போக காரணம் இதுதானா?
Share your comments