பிரதமரின் சுய வேலை வாய்ப்பு உறுதி திட்டமான PMEGP திட்டத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் சொந்த வாகனம் வாங்க ஏதுவாக, 30 சதவீத மானியத்துடன் ரூ.5 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. இதனை தனி நபர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
ஏதேனும் சிறுதொழில் தொடங்கி கூடுதல் வருமானம் ஈட்ட வேண்டும் என நினைப்பவரா நீங்கள்? அப்படியானால் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்டையலாம். சிறுதொழில் மூலம் சுய வேலை வாய்ப்பை கிராமப்புறங்களிலும், நகர்புறங்களிலும் உருவாக்கும் நோக்கத்தில் பிரதம மந்திரி ரோஸ்கார் யோஜனா மற்றும் கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம் ஆகிய இரண்டையும் இணைத்து 2008ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட திட்டம்தான் பிரதமரின் வேலை உருவாக்கத் திட்டம் (Prime Minister Employment Generate Program PMEGP).
தொழில்முனைவோர், கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் வசிக்கும் வேலையில்லாதவர்களை ஒருங்கிணைத்து சுய வேலைவாய்ப்பைப உருவாக்குவதே இந்தத்திட்டத்தின் நோக்கம்.
சலுகைகள் (Concession)
இத்திட்டத்தின் கீழ் ஆட்டோ ஓட்டுநர்கள் சொந்த வாகனம் வாங்குவதற்கு எளிதில் கடன் பெற முடியும். 30 சதவீத மானியத்துடன் ரூ.5 லட்சம் வரையில் தனிநபருக்கான கடனுதவி வழங்கப்படுகிறது. பயணிகள் ஆட்டோ வாங்குவதற்கு இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். திட்டத்தின் பயன்கள் குறித்துப் பெரும்பாலானோருக்குத் தெரியாததால் விண்ணப்பிக்க முடியாமல் போகிறது.மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள மக்களும், கிராமப்புற மக்களும் அதிகம் பயன்பெற முடியும்.
தேவையான ஆவணங்கள்(Documents)
-
குடும்ப அட்டை
-
வாக்காளர் அட்டை
-
ஆதார் அட்டை
-
இரண்டு புகைப்படம்
-
சாதி சான்று
-
வருமான சான்று
-
(குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 1 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்)
-
கல்வி சான்று
-
ஓட்டுநர் உரிமம். பேட்ஜ் அவசியம்
-
(இது வாகன கடனுக்கு மட்டும்
தேவை)
-
திட்ட அறிக்கை
-
தேசியமயமான வங்கி கணக்கு எண்
இத்திட்டத்தில் பயன்பெற http://www.kviconline.gov.in/pmegpeportal/jsp/pmegponline.jsp என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். பயனடைய விரும்புவோர் தங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நேரில் அணுகி விபரங்களைத் தெரிந்துகொள்ளலாம்.
மேலும் படிக்க...
பண்ணை இயந்திர வங்கி அமைக்க மத்திய அரசு 80% மானியம்- 20% முதலீடு செய்ய நீங்க ரெடியா?
வீடு கட்ட 2.5லட்சம் வரை மானியம் தரும் மத்திய அரசின் திட்டம்!
Share your comments