கரும்பு சாகுபடி இயந்திரம்: வாடகை மையம்‌ நிறுவ ரூ.60 லட்சம் மானியம்‌

Deiva Bindhiya
Deiva Bindhiya

சாகுபடிக்கு போதிய வேலையாட்கள்‌ கிடைக்காத நிலையில்‌, விவசாயிகள்‌ உரிய காலத்தில்‌ சாகுபடிப்‌ பணிகளை மேற்கொள்வதற்காக, வேளாண்‌ இயந்திரமயமாக்குதல்‌ திட்டத்தினை தமிழக விவசாயிகளிடையே பிரபலப்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

நடப்பு 2022-23 ஆம்‌ ஆண்டு வேளாண்‌ நிதிநிலை அறிக்கை அறிவிப்புகள்‌

தனிப்பட்ட விவசாயிகள்‌ வேளாண்‌ இயந்திரங்கள்‌ வாங்குவதற்கு மானியம்‌, இளைஞர்களை விவசாய தொழிலில்‌ ஈர்த்திட, விவசாயிகள்‌, தொழில்‌ முனைவோர்கள்‌, பதிவு செய்த விவசாய சங்கங்கள்‌, உழவர்‌ உற்பத்தியாளர்‌ அமைப்புகள்‌ மூலம்‌ கிராம, வட்டார அளவிலான வேளாண்‌ இயந்திர வாடகை மையம்‌ நிறுவ, மானியம்‌ போன்ற வகைகளில்‌ வேளாண்மை இயந்திரமயமாக்குதல்‌ திட்டத்தினை தமிழகத்தில்‌, 2022-23 ஆம்‌ ஆண்டில்‌ செயல்படுத்துவதற்காக, ரூ.150 கோடி ஒன்றிய, மாநில அரசினால்‌ ஒதுக்கீடு செய்யப்படும்‌ என வேளாண்‌ நிதிநிலை அறிக்கையில்‌ அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ரூ.41.67 கோடி நிதியில்‌ இத்திட்டத்தினை செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது

கரும்பு சாகுபடிக்கான இயந்திர வாடகை மையம்‌ நிறுவ ரூ.60 இலட்சம்‌ மானியம்‌

அதிக வேலையாட்கள்‌ தேவைப்படும்‌ கரும்பு சாகுபடியில்‌ இயந்திரமயமாக்குதலை ஊக்குவிப்பதற்காக, ரூ.150 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ கரும்பு சாகுபடிக்கான இயந்திர வாடகை மையம்‌ அமைக்க முன்வரும்‌ தொழில்‌ முனைவோர்களுக்கு 40 சதவீத மானியம்‌ அதிகபட்சமாக ரூ.60 இலட்சம்‌ வரை மானியம்‌ வழங்கப்படும்‌. பங்களிப்புத்‌ தொகைக்கு 3 சதவிகித வட்டி மானியத்துடன்‌ கடன்‌ வசதி,

வேளாண்‌ இயந்திர வாடகை மையம்‌ அமைக்க முன்வரும்‌ விவசாயக்‌ குழுக்களுக்கு, மானியம்‌ போக மீதமுள்ள பங்களிப்புத்‌ தொகையை செலுத்துவதற்கு, வங்கியின்‌ மூலம்‌ கடன்‌ பெற்றுத்தரவும்‌ அரசு நடவடிக்கை எடுக்கும்‌. இவ்வாறு பெறும்‌ கடனுக்கு, வேளாண்‌ உட்கட்டமைப்பு நிதியின்‌ (Agriculture Infrastructure Fund) கீழ்‌ மூன்று சதவிகித வட்டி மானியம்‌ கிடைக்கும்‌.

மேலும் படிக்க: 70% மானியத்தில் வேளாண் இயந்திரங்கள்: Full List இதோ!

எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும்‌?

இத்திட்டத்தில்‌ பயன்பெற விரும்பும்‌ விவசாயிகள்‌ உழவன்‌ செயலி மூலமாகவோ அல்லது http://aed.tn.gov.in என்ற இணையதளத்தின்‌ மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்‌. கூடுதல்‌ தகவலுக்கு அருகிலுள்ள வேளாண்மைப்‌ பொறியியல்‌ துறை அலுவலகத்தை அணுகலாம்‌.

தேவைப்படும்‌ ஆவணங்கள்‌:

அ) ஆதார்‌ அட்டையின்‌ நகல்‌

ஆ) புகைப்படம்‌ (Passport Size Photo)

இ) சொந்த நிலத்திற்கான சிட்டா மற்றும்‌ அடங்கல்‌

ஈ) ஆதி திராவிட, பழங்குடியின விவசாயிகளாக இருந்தால்‌, சாதிச்‌

சான்றிதழ்‌ மற்றும்‌ சிறு, குறு விவசாயிக்கான சான்றிதழ்‌ நகல்‌

கிராமங்களில்‌ சாகுபடிப்‌ பணிகளுக்கு போதிய வேலையாட்கள்‌ கிடைக்காமல்‌ அவதியுறும்‌ வேளாண்‌ பெருமக்களின்‌ நலனைக்‌ கருத்தில்‌ கொண்டு, அரசு மேற்கொண்டு வரும்‌ வேளாண்‌ இயந்திரமயமாக்கல்‌ திட்டத்தில்‌ இணைந்து பயன்பெறுமாறு வேளாண்மை-உழவர்‌ நலத்‌ துறை அமைச்சர்‌ எம்‌.ஆர்‌.கே.பன்னீர்செல்வம்‌ அவர்கள்‌ தெரிவித்துள்ளார்‌.

(குறிப்பு: இச்செய்தி மக்கள் தொடர்புத்துறையால் வெளியிடப்பட்டது.)

மேலும் படிக்க:

70% மானியத்தில் வேளாண் இயந்திரங்கள் | மண்ணில்லா விவசாயம்: ரூ.15,000 மானியம் | தக்காளி விவசாயிகள் அரசிடம் கோரிக்கை

70% மானியத்தில் வேளாண் இயந்திரங்கள்: Full List இதோ!

English Summary: Rs.60 lakh subsidy for setting up machinery rental centre for sugarcane cultivation Published on: 23 November 2022, 03:11 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.