பால் பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களை ஊக்குவிக்கும் வகையில், பிரதமரின் உணவு பதப்படுத்தும் சிறுதொழில் நிறுவனங்களுக்கான திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மத்திய அரசின் ஆத்மநிர்பார் பாரத் அபியான் திட்டத்தின் (Aatma Nirbhar Bharat Abhiyan)ஒரு பகுதியாக அமைப்பு சாரா உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களை வலுப்படுத்த பிரதமரின் உணவு பதப்படுத்தும்
சிறு நிறுவனங்களுக்கான திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
2020- 21 முதல் 2024- 20ம் ஆண்டு வரை 6 ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படும் இத்திட்டம் மத்திய அரசின் 60 சதவீத மற்றும் மாநில அரசின் 40 சதவீத நிதிப் பங்களிப்புடன் ஒரு மாவட்டத்துக்கு ஒரு விளைபொருள் என்ற அடிப்படையில் செயல்படுத்தப்படும்.
இந்தத்திட்டத்தின் மூலம் தனிநபர் அடிப்படையில் ஏற்கெனவே உணவு பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு நிறுவனங்களை வலுப்படுத்தவும், புதிய நிறுவனங்களைத் தொடங்கவும், குழு அடிப்படையில் பொது உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தவும், வர்த்தக முத்திரை, சந்தைப்படுத்துதல், தொழில்நுட்பப் பயிற்சிகள் ஆகிய வற்றுக்கு நிதி உதவி செய்யப்படுகிறது.
அத்துடன், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், சுய உதவிக் குழுக்கள், கூட்டுறவு நிறுவனங்களுக்கும் நிதியுதவி செய்யப்படும். இதன்படி ஒரு மாவட்டத்தில் இந்தத் தொழிலில் ஈடுபட உள்ள சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனங் களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
மானியம் (Subsidy)
இத்திட்டத்தின் மூலம் ஒரு சிறு உணவுப் பதப்படுத்தும் நிறுவனம் தகுதியான திட்ட மதிப்பீட்டில் 35 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை மானியம் பெறலாம்.
வர்த்தக முத்திரை, சந்தைப் படுத்துதலுக்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படும். சிறிய உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு தேவைப்படும் தொழில் கடன் வங்கி மூலம் ஏற்பாடு செய்து தரப்படும்.
இத்திட்டம் குறித்து வேலூரில் மாவட்ட அளவிலான குழு ஆட்சியர் அ.சண்முகசுந்தரம் தலைமையில் அமைக்கப்பட்டு நடைபெற்ற முதல் கூட்டத்தில், திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்தும், பயனாளிகளைத் தேர்வு செய்தல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
பால், இதர உணவுப் பொருள் உற்பத்தி சார்ந்த சிறு தொழில் களுக்கும் இத்திட்டம் மூலம் பயன்பெற வழிவகை செய்யவும் ஆலோசிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் பால் பதப்படுத்தும் தொழிலுக்கு திட்ட மதிப்பீட்டில் 35 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கப்பட உள்ளதாக ஆட்சியர் சண்முக சுந்தரம் அறிவித்துள்ளார். இந்தத்திட்டத்தின்படி பயன்பெற விரும்புபவர்கள் மாவட்ட வேளாண் அலுவலகங்களைத் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் படிக்க...
குட்பை சொல்லும் குப்பைகள்- உரமாகும் அதிசயம்!
அங்கக வேளாண்மையில் பயிர்களின் காதலன் எது தெரியுமா?
உடல் சூடு பிரச்னை இவைகளுக்கும் உண்டு-தடுக்கும் வழிகள் !
Share your comments