விபத்தில் சிக்குவோருக்கு பணமில்லா சிகிச்சை: மத்திய அரசு புதிய திட்டம்!!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Image credit: Maalaimalar

சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு, பிரதான் மத்திரி ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்தின் கீழ், இலவச சிகிச்சை அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் ஆண்டுக்கு ஒன்றுக்கு, சுமார் 5 லட்சம் சாலை விபத்துகள் நிகழ்கின்றன. இவ்விபத்துக்களில், சராசரியாக 1.5 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். மேலும் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்டோர் கை, கால்கள் செயல்பட முடியாமல் முடங்கிப் போகிறார்கள்.

இவ்வாறு விபத்தில் சிக்குவோரின் நலனைக் கருத்தில்கொண்டு, அவர்களுக்கு பணமில்லா சிகிச்சை அளிக்க மத்திய அரசு முன்வந்துள்ளது.

ஆயுஷ்மான் திட்டம் (PMABY)

ஏற்கனவே செயல்படுத்தப்பட்டுவரும் பிரதான் மந்திரி ஆயுஷ்மான் பாரத் யோஜனா ( Pradhan Mantri Ayushman Bharat Yojana) திட்டத்தின் கீழ் இந்த சிகிச்சை அளிக்கப்படும். இந்த திட்டத்தில் இணைந்துள்ளவர்கள், விபத்தில் சிக்கும்போது, இலவச சிகிச்சையைப் பெறமுடியும்.

விபத்தில் சிக்குவோர் அனைவருக்கும், 2.5 லட்சம் ரூபாய் வரை, பணம் எதுவும் இன்றி சிகிச்சை அளிக்கும் வகையில் திட்டம் கொண்டு வரப்படுகிறது. இந்த சிகிச்சையைப் பெற வயதுவரம்பு கிடையாது. குடும்பத்தில் உள்ள அனைவரும் சிகிச்சை பெறத் தகுதி பெற்றவர்கள்.

இது தொடர்பாக, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம், மோட்டார் வாகன விபத்து நிதியை ஏற்படுத்துமாறு, அனைத்து மாநில போக்குவரத்து செயலர் மற்றும் ஆணையர்களுக்கு, கடிதம் எழுதியுள்ளது.

அதேசமயம், ஓட்டுநர் உரிமம் (Licence) பெறாமல், வாகனம் இயக்குபவர்களுக்கும் இத்திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கப்படும்.எனினும், குணமடைந்தவுடன், அவர்களிடம் இருந்து சிகிச்சைக்கு அளிக்கப்படும் தொகையை வசூலிக்கவும் இந்த திட்டம் வழிவகை செய்யும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டம்

  • கடந்த 2018ம் ஆண்டு பிரதான் மந்திரி ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

  • இது மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டுள்ள உலகிலேயே மிகப் பெரிய சுகாதாரக் காப்பீடுத் திட்டம்

  • பொருளாதாரத்தில் நலிவடைந்த 50 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு சுகாதார காப்பீடு கொடுப்பதே இந்த திட்டத்தின் இலக்கு

  • குடும்பத்திற்கு அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் வரை பிரபல தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம்

  • பணமில்ல சிசிச்சையை உறுதி செய்கிறது

  • புற்றுநோய், கொரோனா, உடல் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை, மூளை அறுவைசிகிச்சை, நுரையீரல் மற்றும் இதயம் சார்ந்த அறுவைசிகிச்சைகள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிர்பறிக்கும் நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

    மேலும் படிக்க... 

    வெண்டைக்காய் விலை கடும் வீழ்ச்சி; தோட்டத்திலேயே முதிர்ந்து வீணாகும் அவலம்!

    மழைக்கால நோய்தொற்றில் இருந்து பாதுகாக்க பாரம்பரிய மருத்துவ முறைகள் - ஆயுஷ் வெளியீடு

English Summary: Union Government Plans Accident Treatment by Ayushman Insurance Scheme Published on: 03 July 2020, 04:12 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.