அமைப்புசாரா துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் பயனடைவதற்காக அடல் பென்சன் யோஜனா திட்டம் 2015ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டு மக்கள் பயனடைந்து வருகின்றனர். அதன் பிறகு இத்திட்டம் அனைத்து மக்களுக்காகவும் நீட்டிக்கப்பட்டது. இத்திட்டத்தில் இணையும் தொழிலாளர்கள் மாதம் 5,000 ரூபாய் வரை பென்சன் பெறமுடியும். இத்துடன், குறைந்தபட்ச பென்சன் தொகைக்கான உத்தரவாதமும் கொடுக்கிறார்கள்.
அடல் பென்சன் யோஜனா திட்டம் வாழ்நாள் முழுவதும் பென்சன் பெறும் திட்டமாகும். பென்சன் வாங்கும் நபர் இறந்துவிட்டால், அவரது கணவர்/ மனைவிக்கு பென்சன் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இருவருமே இறந்துவிட்டால் நாமினிக்கு இந்த பணம் சென்றடையும். இத்திட்டத்திற்கு வருமான வரிச் சட்டம் பிரிவு 80சிசிடி கீழ் வரிச் சலுகை கிடைப்பது கூடுதல் அம்சம், எனவே மக்கள் இதனை பெறிதும் விரும்புகின்றனர்.
தற்போது, இத்திட்டம் வங்கிகள் மற்றும் நிலையங்களில் செயல்பாட்டில் உள்ளது. உங்களது வங்கிக் கணக்கு உள்ள வங்கியிலேயே நீங்கள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்து பயன்பெறலாம். பதிவு செய்வதற்கான படிவங்கள் ஆன்லைனிலும், வங்கிக் கிளைகளிலும் பெற்றுக் கொள்ளலாம். நீங்கள் படிவத்தை பதிவிறக்கம் செய்து வங்கியில் சென்று சமர்ப்பிக்கலாம். அல்லது வங்கியில் நேரடியாக படிவத்தை வாங்கி அதனை பூர்த்தி செய்து சமர்பிக்கலாம். இத்திட்டத்தில் இணைவதற்கு மொபைல் எண் மற்றும் ஆதார் வைத்திருப்பது கட்டாயமாகும்.
18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் இத்திட்டத்தில் இணைந்து பயன்யடையலாம். இதில், ஒவ்வொரு மாதமும் நீங்கள் 1000, 2000, 3000, 4000, 5000 என பென்சன் பெறும் வசதி உள்ளது. அதிகபட்சமாக ஒரு ஆண்டுக்கு ரூ.60,000 வரை பென்சன் வாங்க முடியும் என்பது குறிப்பிடதக்கது. உங்களுடைய 18 வயதிலேயே இணைந்து மாதம் 210 ரூபாய் டெபாசிட் செய்ய தொடங்கினால், இந்த பென்சன் தொகைக்கான நன்மையை பெற முடியும். அதாவது ஒரு நாளைக்கு, ஒருவர் 7 ரூபாய் என்ற கணக்கில் தனது வருங்காலத்திற்கு முதலீடு செய்யலாம்.
இப்போதே, சிந்தித்து செயல் ஆற்றினால், வருங்காலத்தில் கவலைக்கு இடம் இருக்காது.
மேலும் படிக்க:
Share your comments