நல்லத்திட்டத்தில் முதலீடு செய்து அடுத்த சில ஆண்டுகளில் நல்ல லாபம் ஈட்டவேண்டும் என எண்ணுபவரா நீங்கள்?...
அப்படியானால் இந்தத்திட்டம் உங்களுக்குதான். அதாவது ஐந்தே ஆண்டுகளில் 21 லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் அருமையான போஸ்ட் ஆபீஸ் திட்டம் குறித்து இங்கே பார்க்கலாம்.
அஞ்சல் துறை சார்பாக தபால் நிலையங்களில் பல்வேறு சிறு சேமிப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கிராமப்புற மக்களைப் பொருத்தவரை, மத்திய அரசின் நிறுவனம் என்பதால், அஞ்சலக சேகமிப்புத் திட்டங்கள் மீது அதீத நம்பிக்கை உள்ளது.
அதையும் தாண்டி, உண்மையில் உங்கள் முதலீடுக்கு முழு பாதுகாப்பும் அளிக்கப்படுகிறது.
அதிக வட்டி (More Interest)
பிற திட்டங்களுடன் ஒப்பிடும்போது, அஞ்சலக சேமிப்புத் திட்டங்களுக்கு அதிக வட்டி வழங்கப்படுகிறது. எனவே முதலீட்டிற்கான லாபமும் அதிகமாகவே உள்ளது. தற்போது 6.8 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
தேசிய சேமிப்புச் சான்றிதழ்! (National Saving Certificate)
இந்தியத் தபால் துறை செயல்படுத்தி வரும் திட்டங்களிலேயே மிகச் சிறந்த திட்டங்களில் ஒன்றுதான் தேசிய சேமிப்புச் சான்றிதழ் திட்டம். இது மத்திய அரசின் முதலீட்டுத் திட்டம் என்பதால் இதில் முதலீட்டாளர்களின் பணம் வங்கிகளை விட அதிக பாதுகாப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டத்தின் (National Savings Certificate) முதிர்வு காலம் 5 ஆண்டுகள் ஆகும். இருப்பினும், ஒரு முதலீட்டாளர் சில நிபந்தனைகளுடன் 1 வருடத்திற்குப் பிறகு கணக்கிலிருந்து பணத்தை எடுக்க முடியும். இத்திட்டத்துக்கான வட்டி விகிதம் நிதியாண்டின் ஒவ்வொரு காலாண்டின் தொடக்கத்திலும் அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்படுகின்றது.
குறைந்தபட்சம் ரூ.100 (Minimum Rs.100)
நீங்கள் வாங்கும் சம்பளத்தில் மிகச் சிறிய தொகையை ஒவ்வொரு மாதமும் எடுத்து வைத்தாலே போதும். சில வருடங்களில் நீங்கள் லட்சாதிபதி ஆகிவிடலாம்.
தேசிய சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தில் நீங்கள் மாதத்துக்கு குறைந்தபட்சம் 100 ரூபாய் சேமிக்கலாம். இத்திட்டத்தில் 6.8 சதவீத வட்டியில் , ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து சேமித்து வந்தாலே திட்டமிட்ட இலக்கை எளிதில் அடைய முடியும்.
நீங்கள் ஐந்து ஆண்டுகளில் ரூ.15 லட்சம் முதலீடு செய்தால் வட்டி வருமானமாக உங்களுக்கு ரூ.6 லட்சம் வரையில் கிடைக்கும். இந்தத்திட்டத்தின்படி மாதம் 25 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால், அது 5 ஆண்டுகளில்15 லட்சம் ரூபாயாக மாறும். இதற்கு 6 லட்சம் வட்டியுடன் சேர்த்து, 5 ஆண்டுகள் நிறைவடைந்ததும் ரூ.21 லட்சத்தைப் பெற முடியும்.
வரிச் சலுகை (Tax concession)
தேசிய சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தின் கீழ் உங்களது சேமிப்புப் பணத்துக்கு வருமான வரிச் சட்டம் 80சி-இன் கீழ் சலுகை கிடைக்கிறது. அதாவது ரூ.1.5 லட்சம் வரையில் உங்களுக்கு வரிச் சலுகை கிடைக்கும்.
உங்களது சேமிப்புப் பணம் ரூ.15 லட்சம் என்பதால் ரூ.1.5 லட்சம் வரையில் வரிச் சலுகை கிடைக்கிறது. ஒருவேளை நீங்கள் அதை விட அதிகமாகச் சேமித்தால் உங்களுக்குக் கிடைக்கும் வரிச் சலுகையும் அதிகமாக இருக்கும்.
மேலும் படிக்க...
கிராமப்புற மக்களின் நம்பிக்கை நட்சத்திரம்- அசத்தலான அஞ்சலக சேமிப்புத் திட்டங்கள்!
Paytmல் LPG சிலிண்டர் Book செய்தால் ரூ.500 Cashback - சலுகை 2 நாட்கள் மட்டுமே!
குளிரில் உறைந்து வீணாகும் பயிர்களை பாதுகாக்கிறது பசுவின் சிறுநீர்! ஆய்வில் தகவல்!
Share your comments