நீர்பற்றாக்குறை உள்ள மாநிலமான தமிழகத்தில், விவசாயிகளுக்கு மாபெரும் சவாலாக இருப்பதே நிர்மேலாண்மைதான். ஏனெனில், பல ஆண்டுகள் பொய்த்துப்போவதும், சில வருடங்களில் கொட்டித் தீர்ப்பதுமாக விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு, சவால் விட்டு வேடிக்கை பார்ப்பது மழையின் வாடிக்கையாகிவிட்டது.
இதனால் கடன் வாங்கி சாகுபடி செய்த விவசாயிகள், கண்ணீர் விட்டுக் கதறுவதுடன், கண்ணை மூடிவிட்டால், இந்த பிரச்னை தீர்ந்துவிடுமோ என நினைத்து, தற்கொலைக்கும் தயங்குவதில்லை.
தமிழக அரசின் திட்டம் (Govt Scheme)
ஆனால், பிரச்னைகளை சாமர்த்தியத்தோடு எதிர்கொண்டால், எதுவும் சாத்தியமே. அந்த வகையில், நீர் மேலாண்மைக்காக தமிழக அரசு, பாசன வாதி ஏதும் இல்லாத இடங்களில் பாசன நீர் ஆதாரங்களை உருவாக்கி நுண்ணீர் பாசன முறையை (Micro irrigation Scheme) அமைப்பதற்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் நுண்ணீர் பாசனம் அமைக்க மானியம் வழங்கப்படுவதுடன், கீழ்கண்ட துணை நிலை நீர் மேலாண்மைக்கும் வேளாண் துறை மூலம் விவசாயிகளுக்கு மானியம் வழங்குகிறது.
1. பம்பு செட் மின் மோட்டார் பம்பு செட் (Motor Pump) நிறுவுவதற்கு அதன் விலையில் 50 சதவீதம் மானியம் ரூ.15,000த்திற்கு மிகாமல்,
2.வயலுக்கு அருகில் பாசன நீரைக் கொண்டு செல்லும் வகையில் நீர்ப்பாசனக் குழாய் அமைப்பதற்கு 50 சதவீத மானியத் தொகை ஹெக்டேருக்கு ரூ. 10,000/-க்கு மிகாமலும்
3. பாதுகாப்பு வேலியுடன் தரை நிலை நீர்த் தேக்கத் தொட்டி நிறுவுவதற்கு ஆகும் செலவில், 50 சதவீதத் தொகை, ஒரு கன மீட்டருக்கு ரூ.350க்கு மிகாமலும் , நிதி உதவி ஒரு பயனாளிக்கு ரூ. 40,000/-க்கு மிகாமலும் மானியம் வழங்கப்படும்.
மேற்கண்ட பணிகளுக்கான மானியம் பெறுவதற்கு விவசாயிகள் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் தொடர்பு கொண்டு, தங்கள் விண்ணப்பத்தினை அளித்து பெயரை முன்பதிவு செய்துகொள்ளலாம்.இந்த பணிகளுக்கான மானியம், நுண் பாசன முறையை பின்பற்றும் அல்லது பின்பற்ற முன்வரும் விவசாயிகளுக்கு மட்டுமே வழங்கப்படும்.
இப்பணிகளை விவசாயிகள் முதலில் தங்கள் சொந்த செலவில் மேற்கொண்டு, முழு ஆணைங்களையும் சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.விவசாயிகளுக்கு இப்பணிகளுகான மானியம், நுண்ணீர் பாசனம் அமைத்து மானியத் தொகை சந்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு விடுவிக்கப்பட்ட பின், இத்துணை நீர் மேலாண்மைக்கான மானியத்தொகை விவசாயிகளின் சேமிப்புக் கணக்கிற்கு நேரடியாக விடுவிக்கப்படும்.
மேலும் படிக்க...
காய்கறி சாகுபடிக்கு ஊக்கத்தொகை - ராமநாதபுரம் விவசாயிகளுக்கு அழைப்பு!
வயலில் பதுங்கியிருக்கும் எலிகள்-கட்டுப்படுத்தக் கச்சிதமான வழிகள்!
Share your comments