கைவினை கலைஞர்களுக்கு தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (TAMCO) மூலம் கடன் உதவி வழங்கப்பட உள்ளதாகவும், தகுதியான நபர்கள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் தெரிவித்துள்ளார்.
மரபு உரிமை கடன் திட்டம் மூலம் குறைந்த வட்டி வீதத்தில் அவர்களின் தொழிலுக்கான உபகரணங்கள், இயந்திரங்கள் ஆகியவற்றை வாங்க உதவும் நோக்கில் கடன் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் நோக்கம் பின்வருமாறு-
நீலகிரி மாவட்டத்தில் சமூக பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சிறுபான்மையின மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழம் (டாம்கோ) மற்றும் தேசிய சிறுபான்மையினர் மேம்பாட்டு மற்றும் நிதி கழகத்தின் (NMDFC) மூலம் மரபு வழி கைவினை கலைஞர்களை ஊக்குவிக்கும் பொருட்டு விரசாத் (VIRASAT) என்ற மரபு உரிமை கடன் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மேற்படி, விரசாத் திட்டம் 1-ல் கடன்தொகை பெற விண்ணப்பதாரர் 18 வயது முதல் 60 வயது உடையவராக இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். ஆண்டு வருமானம் கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு ரூ.98,000/-மும், நகர்புறங்களில் வசிப்பவர்களுக்கு இத்திட்டத்தில் ரூ.1,20,000/- மும், மிகாமல் இருத்தல் வேண்டும்.
இத்திட்டத்தில் கடனாக ரூ.10 இலட்சம் வரை பெண்களுக்கு 4% வட்டி வீதத்திலும், ஆண்களுக்கு 5% வட்டி வீதத்திலும் அதிகபட்சம் ரூ.10 இலட்சம் வரை கடனுதவி வழங்கப்படும். மேலும், விரசாத் திட்டம் 2-ல் கடன்தொகை பெற திட்டம் 1-ல் பயன் பெற முடியாதவர் மற்றும் ஆண்டு வருமானம் கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் வசிப்பவர்களுக்கு ரூ.8,00,000/- மிகாமல் இருத்தல் வேண்டும்.
மேலும், இத்திட்டத்தில் பெண்களுக்கு 5% வட்டி வீதத்திலும், ஆண்களுக்கு 6% வட்டி வீதத்திலும் அதிகபட்சம் ரூ.10 இலட்சம் வரை கடனுதவி வழங்கப்படும். மேலும், கடன் திரும்ப செலுத்தும் கால அளவு 5 ஆண்டுகள் ஆகும். மேற்படி இத்திட்டத்தில் கடன் தொகையில் தேசிய சிறுபான்மையினர் மேம்பாட்டுக் கழத்தின் பங்கு 90% சதவீதம், மாநில சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் பங்கு 5% சதவீதம், மற்றும் விண்ணப்பதாரரின் பங்கு 5% சதவீதம் ஆகும்.
இத்திட்டத்தில் பயன்பெற சாதி மற்றும் வருமானவரி சான்றிதழ் நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், தொழில் குறித்த விபரம் மற்றும் திட்ட அறிக்கை மற்றும் வங்கி கோரும் இதர ஆவணங்களையும் அளிக்க வேண்டும்.
கடன் பெற விரும்பும் கைவிணைக் கலைஞர்கள் மாவட்ட ஆட்சியரின் கூடுதல் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பத்தினை பெற்று, விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சா.ப.அம்ரித் இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.
மேலும் காண்க:
இடி மின்னலுனு மிரட்டும் மழை- 10 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
கால்நடை மருத்துவ பட்டப்படிப்பிற்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு- முழுவிவரம் காண்க
Share your comments