மகளிர் உரிமைத் தொகை- கூட்டுக்குடும்பமாக வாழும் பெண்கள் அதிர்ச்சி

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
Kalaignar magalir urimai thogai eligibility criteria announced by MK stalin

ஒரு குடும்ப அட்டைக்கு ஒருவர் மட்டுமே மகளிர் உரிமைத் தொகை பெறத் தகுதியுடையவர்கள் என அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், கூட்டுக்குடும்பமாக வாழும் பெண்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த தருவாயில், திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளில் முதன்மையான திட்டமாக கருதப்பட்ட கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்குதல் வருகிற செப்டம்பர் 15-ஆம் நாளன்று தொடங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அத்திட்டத்தை செயல்படுத்துவது எப்படி, யாரெல்லாம் உரிமைத்தொகை பெற தகுதியுடையவர்கள் போன்றவை குறித்து முதல்வர் தலைமையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்தின் நிறைவில் உரிமைத்தொகை தொடர்பாக பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அவற்றின் விவரம் பின்வருமாறு-

விண்ணப்பிக்கும் நடைமுறைகள்:

  • குடும்பத் தலைவிகளுக்கான கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெற, கீழ்க்கண்ட தகுதிகளைப் பெற்ற குடும்பங்களில், 21 வயது நிரம்பிய பெண் ஒருவர் விண்ணப்பிக்கலாம். அதாவது, செப்டம்பர் 15, 2002 தேதிக்கு முன்னர் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • இத்திட்டதிற்கு பொது விநியோக நியாயவிலைக் கடைகள் ஒரு கணக்கெடுப்பு அலகாக எடுத்துக் கொள்ளப்படும். விண்ணப்பதாரர்கள் தங்கள் குடும்ப அட்டை இருக்கும் நியாயவிலைக் கடை அமைந்திருக்கும் விண்ணப்பப் பதிவு முகாமில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
  • ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு பயனாளி மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியானவர்.

குடும்பத்தலைவி வரையறை:

  • குடும்ப அட்டையில் பெயர் இடம் பெற்றுள்ளவர்கள் அனைவரும் ஒரு குடும்பமாகக் கருதப்படுவர்.
  • ஒவ்வொரு தகுதி வாய்ந்த குடும்பத்திலும் உள்ள குடும்பத்தலைவி, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெற விண்ணப்பிக்கலாம்.
  • குடும்ப அட்டையில் குடும்பத் தலைவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ள பெண் குடும்பத் தலைவியாகக் கருதப்படுவார்.
  • குடும்ப அட்டையில் ஆண் குடும்பத் தலைவராகக் குறிப்பிடப்பட்டிருந்தால், அந்தக் குடும்பத்தலைவரின் மனைவி குடும்பத்தலைவியாகக் கருதப்படுவார்.
  • திருமணமாகாத தனித்த பெண்கள், கைம்பெண்கள் மற்றும் திருநங்கைகள் தலைமையில் குடும்பங்கள் இருந்தால் அவர்களும் குடும்பத் தலைவிகளாகக் கருதப்படுவர்.
  • ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட 21 வயது நிரம்பிய பெண்கள் இருந்தால், இத்திட்டத்தின்கீழ் பயன்பெற, ஒரு நபரைக் குடும்ப உறுப்பினர்கள் தேர்வு செய்து விண்ணப்பிக்கச் செய்யலாம்.

பொருளாதாரத் தகுதிகள்:

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெற விண்ணப்பிக்கும் குடும்பங்கள் கீழ்க்காணும் மூன்று பொருளாதார அளவுகோல்களுக்கு உட்பட்ட குடும்பங்களாக இருத்தல் வேண்டும்.

  • ஆண்டு வருமானம் ரூ.2.5 இலட்சத்திற்குக் கீழ் வருமானம் ஈட்டும் குடும்பங்கள்.
  • ஐந்து ஏக்கருக்குக் குறைவாக நன்செய் நிலம் அல்லது பத்து ஏக்கருக்குக் குறைவாகப் புன்செய் நிலம் வைத்துள்ள குடும்பங்கள்.
  • ஆண்டிற்கு வீட்டு உபயோகத்துக்கு 3600 யூனிட்டிற்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள்.

பொருளாதாரத் தகுதிகளுக்காகத் தனியாக வருமானச் சான்று அல்லது நில ஆவணங்களைப் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்கத் தேவையில்லை எனவும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்பு எதிர் கட்சிகள் மத்தியில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. உதாரணத்திற்கு ஒரு குடும்பத்தில் மாமியார், மருமகள் என குடும்ப அட்டையில் இடம்பெற்றிருக்கும் சூழ்நிலையில் அதில் ஒருவர் மட்டுமே உரிமைத்தொகை பெற தகுதியுடையவர் என அறிவிப்பு வெளிவந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காண்க:

65 கிராம ஊராட்சி விவசாயிகளுக்கு வேளாண் கருவி பெற மானியம்!

English Summary: Kalaignar magalir urimai thogai eligibility criteria announced by MK stalin Published on: 08 July 2023, 10:30 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.