தேனி மாவட்ட தொழில் மையத்தில் பிரதம ந்திரியின் வேலைவாயப்பு உருவாக்கும் திட்டத்தில் புதிய தொழில் துவங்குபவர்கள் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இத்திட்டம் குறித்த தகவலை, இந்த பதிவில் பார்க்கலாம்.
இத்திட்டத்தில் 2021ல் 55 பேருக்கு ரூ.1.70 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த ஆண்டு 177 பேருக்கு ரூ.5.10 கோடி மானியம் அளிக்க இலக்கு நிர்ணயித்திருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. உற்பத்தி தொழிலுக்கு ரூ.25 லட்சமும், சேவை தொழிலுக்கு ரூ.10 லட்சமும் கடனாக வழங்கப்படும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் நகர்புறங்களுக்கு திட்டமதிப்பீட்டில் 25 சதவீதமும், ஊரக பகுதிகளுக்கு 35 சதவீதமும் மத்திய அரசு மானியமாக வழங்க உள்ளது. இந்த மானிய உதவியுடன், நீங்கள் என்னென்ன தொழில் தொடங்கலாம், கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இதில் கால்நடை தீவனம், ஆட்டோமொபைல் சர்வீஸ் சென்டர், பேக்கிரி, ஒட்டல், அழகு நிலையம் போன்ற உற்பத்தி தொழில்கள் மற்றும் சேவை நிறுவனங்கள் துவங்கி பயன்பெறலாம்.
மேலும் படிக்க: தமிழ்நாடு CM Fellowship 2022-24: விண்ணப்பப் படிவம், தகுதி! அறிந்திடுங்கள்!
விருப்பமுள்ளவர்கள் www.kviconline.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் Agency DIC என குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு மாவட்ட தொழில் மைய மேலாளரை 8925533998 என்ற அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம், என கலெக்டர் முரளீதரன் கூறினார்.
தகுதிகள் (Eligibility):
குறைந்தபட்சம் வயது வரம்பு 18 ஆகும்.
ரூ.10 இலட்சத்திற்கு மேல் உற்பத்தி தொழில்கள் மற்றும் ரூ.5 இலட்சத்திற்கு மேல் சேவைத் தொழில்கள் துவங்க குறைந்த பட்சம் 8 ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருத்தல் அவசியமாகும்.
குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு இல்லை.
மேலும் படிக்க: பிரதமர் மோடி வருகை முன்னிட்டு, சாலை பாதை மாற்றம் அறிவிப்பு!
திட்டத்தின் சிறப்பம்சங்கள் (Scheme Feature):
பொதுப்பிரிவினருக்கான மூலதனப் பங்கு 10 விழுக்காடு. சிறப்புப் பிரிவினருக்கான மூலதனப் பங்கு 5 விழுக்காடு. அதாவது பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் பெண்கள் மாற்றுத் திறனாளிகள் முன்னாள் இராணுவத்தினா் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர்).
மானியமாக திட்ட மதிப்பீட்டில் 25 விழுக்காடு (நகா்புறங்களுக்கும்), 35 விழுக்காடு (ஊரக பகுதிகளுக்கும்) வழங்கப்படுகிறது.
மேலும் படிக்க: தமிழகம்: தங்கம் விலை பவுனுக்கு ரூ.320 சரிவு! விலை நிலவரம்!
மாவட்ட தோ்வு குழு மூலம் நோ்காணல் செய்யப்பட்டு, மாதம் இருமுறை பயனாளிகள் தோ்வு செய்யப்படுவா்.
தற்போது, இளைஞர்கள் அனைவரும் தங்கள் சொந்த தொழில் செய்ய விரும்புகின்றனர், அதற்கு அவர்களுக்கு தேவை முதலீடு மட்டுமே. அந்த வகையில் இந்த திட்டம் அவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்புடன், மானியமும் வழங்குகிறது. எனவே, மக்கள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் படிக்க:
TNTET 2022 அறிவிப்பு: எப்போது வரும் ஹால்டிக்கேட்? அறிந்திடுங்கள்!
Share your comments