நிலையான உணவு உற்பத்தி மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு, இயற்கை வள பாதுகாப்பு மற்றும் மண்வள ஆரோக்கியத்தை உறுதி செய்வதற்காக இந்திய அரசும், தமிழக அரசும் பாரம்பரிய வேளாண்மை மேம்பாட்டு திட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து செயல்படுத்தி வருகிறது.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 2023-24 ஆம் ஆண்டிற்கான பாரம்பரிய வேளாண்மை மேம்பாட்டு திட்டத்தில் குழுவாக 400 எக்டேர் மற்றும் தனி விவசாயிகளுக்கென 180 எக்டேர் ஆக 580 எக்டர் செயல்படுத்தப்படவுள்ளது.
பாரம்பரிய வேளாண்மை மேம்பாட்டு திட்டத்தில் குழுவாக சேர்ந்து பயன்பெற ஒரு கிராமத்தை சேர்ந்து பயன்பெற ஒரு கிராமத்தை சேர்ந்த அல்லது அருகில் உள்ள 2-3 கிராமத்தில் உள்ள குறைந்தது 20 விவசாயிகள் சேர்ந்து 20 எக்டேர் கொண்ட தொகுப்பினை உருவாக்கி பாரம்பரிய விவசாயத்தில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும். இத்திட்டத்தில் ஒரு எக்டருக்கு முதலாமண்டு - ரூ.16500/-, இரண்டாம் ஆண்டு - ரூ.17,000 மற்றும் முன்றாமாண்டு - ரூ.16,500/- என மொத்தம் ஒரு எக்டருக்கு ரூ.50,000/- மானியம் வழங்கப்படும்.
பாரம்பரிய வேளாண்மை மேம்பாட்டு திட்டத்தில் மற்றொரு துணை திட்டமாக ஏற்கனவே பாரம்பரிய விவசாயத்தில் ஈடுபட்டு வரும் தனி விவசாயிகள், குழுவாக சேர்ந்து பயன்பெற இயலாத விவசாயிகள், பாரம்பரிய விவசாயிகளுக்கு பதிவு கட்டணமா, இத்திட்டத்தில் ஒரு எக்டருக்கு முதலாமாண்டு - ரூ.2000/- என மொத்தம் ஒரு எக்டருக்கு ரூ.6000/- மானியம் வழங்கப்படும்.
பாரம்பரிய வேளாண்மை மேம்பாட்டு திட்டத்தில் சேர்ந்து பயன்பெறும் விவசாயிகளுக்கு ஒரு எக்டருக்கு முதல் ஆண்டில் குழுவினை உருவாக்கிட ரூ.1000/-, குழுவின் தகவல் சேகரித்து பராமரித்திட ரூ.1500/-, மண்டல ஆலோசனை மற்றும் பதிவு கட்டணமாக ரூ.700/-, பாரம்பரிய விவசாயம் செய்திட பின்னேற்பு மானிய ஊக்கத் தொகை ரூ.12000/- மற்றும் விளம்பர செலவினங்கள் ரூ.1300/- என மொத்தம் ஒரு எக்டருக்கு முதலாமாண்டிற்கு ரூ.16500/- மானியம் வழங்கப்படும். எனவே, அனைத்து வட்டார விவசாயிகள் http://tnagrisnet.tn.gov.in என்ற இணையதளத்திலும், உழவன் செயலி மூலமும் பதிவு செய்து அல்லது தங்கள் பகுதி வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்படுகிறது.
மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இச் செய்தி வெளியீடுவோர், உதவி இயக்குநர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், திருச்சிராப்பள்ளி.
மேலும் படிக்க:
LIC சாரல் பென்ஷன் யோஜனா: 40 வயது முதல் பென்ஷன் பெறலாம்!
Coop Bazaar ஆப்: கூட்டுறவு மளிகை ஷாப்பிங் இனி வீட்டிலேயே செய்யலாம்!
Share your comments