பசுந்தீவன சாகுபடிக்கு மானியத்தில் இடுப்பொருள் மற்றும் புல்நறுக்கும் கருவி!

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
Green Fodder Cultivation

அரியலூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் 2024-2025 ஆம் ஆண்டிற்கான தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இறவை சாகுபடியில் 20 ஏக்கருக்கு, மானாவரி சாகுபடியில் 100 ஏக்கருக்கு என பசுந்தீவனம் வளர்க்க தேவையான இடுப்பொருட்கள் மானியத்தில் வழங்கப்பட உள்ளதாகவும் மற்றும் புல் நறுக்கும் கருவிகள் 40 அலகுகள் வழங்கப்பட உள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

மானியத்தில் வழங்கப்படும் இடுப்பொருட்கள் என்ன? இத்திட்டத்தில் பயன்பெற யாரெல்லாம் தகுதி? விண்ணப்பிக்க எப்போது கடைசித் தேதி? போன்ற பல்வேறு விவரங்களை உள்ளடக்கிய செய்திக்குறிப்பு ஒன்றினை அரியலூர் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அவற்றின் விவரம் பின்வருமாறு-

இறவையில் பசுந்தீவன சாகுபடி:

இறவையில் பசுந்தீவனம் வளர்க்கும் திட்டத்தின் கீழ் 20 ஏக்கரில் நீர்ப்பாசன வசதி உள்ள விவசாயிகளின் நிலங்களில் (ஒரு நபருக்கு குறைந்தபட்சம் 25 சென்ட், அதிகபட்சம் 1 ஏக்கர்) பசுந்தீவனம் வளர்க்க தேவையான விதைகள் (தீவன சோளம் 0.375 கிலோ மற்றும் வேலி மசால் 0.5கிலோ) மானியத்தில் வழங்கப்படவுள்ளது.

மானாவாரியில் பசுந்தீவன சாகுபடி:

மானாவாரியில் தீவனப்பயிர் வளர்க்கும் திட்டத்தின் கீழ் நீர்ப்பாசன வசதி அற்ற கால்நடை வளர்ப்போர் நிலங்களில் இத்திட்டத்தின் கீழ் 100 ஏக்கரில் (ஒரு நபருக்கு குறைந்த பட்சம் 50 சென்ட், அதிகபட்சம் 1 ஹெக்டேர்) பசுந்தீவனம் வளர்க்க தேவைப்படும் விதைகள் (தீவனசோளம் 6 கிலோ மற்றும் காராமணி 2 கிலோ) மானியத்தில் வழங்கப்படவுள்ளது.

மேற்காணும் திட்டங்களில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் இதற்கு முன்பு கடந்த மூன்று ஆண்டுகளில் இத்தகைய திட்டங்களில் பயன்பெற்றவராக இருத்தல்கூடாது. மேலும் இத்திட்டத்தின் பயன்பெறும் விவசாயிகள் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு தொடர்ந்து தீவன பயிர்களை பராமரிக்க வேண்டும்.

புல் நறுக்கும் இயந்திரம்:

மின்சாரத்தால் இயங்கும் புல் நறுக்கும் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் கடந்த 10 ஆண்டுகளில் பயன்பெறாத 40 பயனாளிகளுக்கு தலா ஒன்று வீதம் ரூ.32,000/- மதிப்புள்ள புல் நறுக்கும் கருவிகள் 50% அரசு மானியத்துடனும் (ரூ.16,000/-), 50% பயனாளிகளின் பங்கு தொகையுடனும் (ரூ.16,000/-) வழங்கப்பட உள்ளது.

மேற்காணும் அனைத்து திட்டங்களிலும் சிறு மற்றும் குறு விவசாயிகள், ஆவின் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள், பெண்கள், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்தோர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

எனவே, இத்திட்டங்களில் பயன்பெற விரும்புவோர் அருகில் உள்ள கால்நடை மருந்தகங்களில், கால்நடை உதவி மருத்துவரை அணுகி திட்ட விளக்கங்களை பெற்று உரிய படிவத்தில் தங்களுடைய புகைப்படம், குடும்ப அட்டை, ஆதார் அட்டை நகல், தொலைபேசி எண், தங்கள் பெயரில் உள்ள நிலத்திற்கான சான்று மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தக நகலுடன் தங்களது விண்ணப்பத்தை சமர்பிக்கவும்.

விண்ணப்பிக்க கடைசித்தேதி:

மேற்குறிப்பிட்ட ஆவணங்களோடு 16.10.2024 முதல் 28.10.2024 வரை விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி, இ.ஆ.ப., வேண்டுக்கோள் விடுத்துள்ளதாக செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read more:

E vaadagai: டிராக்டருக்கு ரூ.500 மட்டுமே- விவசாயிகளுக்கு ஆட்சியர் கொடுத்த அப்டேட்

மக்காச்சோளத்தை தாக்கும் படைப்புழு- வேளாண் விஞ்ஞானிகள் கொடுத்த ஜடியா!

English Summary: Subsidy to farmers for Green Fodder Cultivation includes mulcher and mower Published on: 21 October 2024, 01:39 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.