வளர்ந்து வரும் விவசாய தொழில்நுட்பங்களை உரிய நேரத்தில் விசாயிகளிடம் சேர்க்கும் வகையில் வேளாண் அலுவலர்களுக்கும், விவசாயிகளுக்கும் இடையேயான தொடர்பை வலுப்படுத்தும் நோக்கில் "உழவர் - அலுவலர் தொடர்பு திட்டத்தை" தமிழக அரசு அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது.
உழவர் - அலுவலர் தொடர்புத் திட்டம் (Uzhavar-Aluvalar Thodarbu Thittam)
வேளாண் துறையில் விரிவாக்கப் பணிகளை வலுப்படுத்த குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் வலுப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதன் பொருட்டு இந்த 'உழவர் - அலுவலர் திட்டத்தை' அரசு அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் ஏற்கனவே உள்ள வேளாண் அலுவலர்களை தக்க முறையில் பயன்படுத்தி வேளாண் நடிவடிக்கைகளுக்கான மானியத் திட்டங்களும், தொழில்நுட்ப ஆலோசனைகளும் விவசாயிகளுக்கு வழங்கப்படும். வேளாண் துறை அதிகாரிகள் விளை நிலங்களுக்கே சென்று விவசாயிகளைச் சந்தித்து உரிய நடைமுறை ஆலோசனைகளை வழங்குவதுடன், தகவல் தொழில்நுட்ப உத்திகளையும் வழங்குவார்கள்.
திட்டம் செயல்படும் விதம்
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 'உழவர்-அலுவலர் தொடர்பு திட்டத்தின்' மூலம் உதவி வேளாண்மை அலுவலர்கள், உதவி தோட்டக்கலை அலுவலர்கள், வேளாண்மை அலுவலர்கள், துணை வேளாண்மை அலுவலர்கள், தோட்டக்கலை அலுவலர்கள், துணை அலுவலர்கள், வேளாண்மை உதவி இயக்குனர், தோட்டக்கலை உதவி இயக்குனர்கள் ஆகியோர் கிராம ஊராட்சிகளுக்கு நேரடியாகச் சென்று விவசாயிகளை சந்திக்கும் பயனத்திட்டத்தின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளது.
ஒவ்வொரு கிராம ஊராட்சிகளிலும் குறைந்தபட்சம் 10 முன்னோடி விவசாயிகளை தேர்ந்தெடுத்து (அதில் 2 பேர் SC/SC பிரிவினர்) அவர்களுக்கு பல்வேறு நவீன வேளாண் தொழில்நுட்பங்கள் மற்றும் அரசு மானியத் திட்டங்கள் குறித்து விளங்கங்களும் பயிர்சிகளும் உரிய கால இடையவெளியில் தொடர்ந்து வழங்கப்படும்.
வட்டரா விரிவாக்கக் குழு
வேளாண் உதவி இயக்குனர் தலைமையில், பல்வேறு அலுவலர்களைக் கொண்டு "வட்டரா அளவிலான விரிவாக்கக் குழு" ஏற்படுத்தப்பட்டு விவசாயிகளுக்கும் பயிற்சி அளிக்கப்படும். இந்த குழு, கிராம ஊராட்சிகளை ஒதுக்கீடு செய்தல், கிராம ஊராட்சி வாரியாக பயணத் திட்டத்தினை நிர்ணயித்தல், மாதாந்திர வேளாண் செய்தியை தயாரித்தல், விரிவாக்க அலுவலர்களுக்கு பயிற்சி அளித்தல், முன்னோடி விவசாயிகளை கண்டறிதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ளும்.
விரிவாக்க அலுவலர்கள் பணி
வட்டார விரிவாக்கக் குழுவில் உள்ள வேளாண் விரிவாக அலுவலர்கள், கிராம ஊராட்சிகளை தேர்ந்தெடுத்து பயணித்தல், பயனத்திட்டமிடல், விரிவாக்கப் பணிகளை மேள்கொள்ளும் நேரம், வயல் ஆய்வு, முன்னோடி விசாயிகள் மற்றும் பிற விவசாயிகளை சந்தித்தல், வானிலை முன்னறிவிப்பு, விவசாயிகளுக்குப் தேவையான பயிற்சி வழங்கள், விவசாயிகளுடான கலந்தாய்வு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வர்.
உழவர்-அலுவலர் தொடர்பு ஆப்
இந்த உழவர்-அலுவலர் தொடர்பு திட்டத்திற்கென ஒரு பிரத்யேக மொபைல் ஆப் உருவாக்கப்பட உள்ளது. இதன் மூலம் இத்திட்டத்தின் அனைத்து நிலைகளும் மேலதிகாரிகள் கண்டறிய வசதி செய்யப்பட உள்ளது. கிராம ஊராட்சிக்கு மேற்கொண்ட பயணங்கள், அங்கு மேற்கொண்ட களப் பணிகள் உள்ளிட்ட அனைத்தும் வரிவாக்க அலுவலர்கள் அந்த ஆப்பில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதை தவறும் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கும் அதிகாரம் கொடுப்பட்டுள்ளதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Don't miss it...
பயறு வகைகளை உற்பத்தி செய்தால் 50%மானியம்: வேளாண் துறை தகவல்!!
தமிழக விவசாயிகளுக்கு நல்ல செய்தி....நெல் கொள்முதல் கடந்த ஆண்டை விட அதிகம்!!
கால்நடை மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு: கன்னியாகுமரி மாணவி முதலிடம்!!
Share your comments