சிறுதானிய சாகுபடிக்கு உழவு மானியம்- விவசாயிகள் யாரை அணுகுவது?

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan

small grain cultivation

தரிசு நிலங்களில் சிறுதானிய சாகுபடி செய்வதற்காக உழவு மேற்கொள்ள தமிழக அரசின் சார்பில் மானியம் வழங்கப்பட உள்ளதாகவும், விருப்பமுள்ள விவசாயிகள் இத்திட்டத்தினை பயன்படுத்திக் கொள்ளுமாறும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

சிறுதானியங்கள் விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதம். சிறுதானிய பயிர்கள் வறட்சியான நிலப்பரப்பு மற்றும் குறு நிலங்களில் செழித்து வளரும். குறைந்த அளவு தண்ணீர், உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் தேவைப்படுவதால், சாகுபடி செலவுகள் குறையும். தினைகள் ஒரு குறுகிய கால பயிர் என்பதால், ஒரு வருடத்தில் பல அறுவடைகளை மேற்கொள்ள முடியும்.

சிறுதானிய சாகுபடி: மானிய விவரங்கள்

தமிழகத்தில் சோளம், கம்பு, கேழ்வரகு, தினை வரகு, சாமை, குதிரைவாலி, பனிவரகு போன்ற சிறுதானியங்களின் உற்பத்தி, பரப்பு ஆகியவற்றை அதிகரிக்கும்பொருட்டு தரிசு நிலங்களில் சிறுதானிய சாகுபடி செய்வதற்காக உழவு மேற்கொள்ள மானியமாக அதிகபட்சமாக ஒரு ஹெக்டேருக்கு 40 சதவீதம் அல்லது ரூ.5400/- பின்னேற்பு மானியமாக விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் 145 ஹெக்டேர் தரிசு நிலங்களை பண்படுத்தி உழவுப்பணி செய்து, சிறுதானியங்கள் சாகுபடி செய்வதற்கு ரூ.7.83 இலட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் விவசாயிகள் உழுவை இயந்திரத்துடன் சட்டிக் கலப்பை, கொத்துக் கலப்பை மற்றும் சுழற்கலப்பை ஆகியவற்றை தங்களின் தேவையின் அடிப்படையில் செய்து முடிக்கப்பட்ட பணிகளுக்கு மட்டும் செய்து முடிக்கப்பட்ட பரப்பளவின் அடிப்படையில் மேற்குறிப்பிட்ட மானியம் கணக்கிடப்பட்டு வழங்கப்படுகிறது. ஒரு விவசாயி அதிகபட்சம் 2 ஹெக்டேர் வரையிலான பரப்பளவிற்கு மானியம் பெறலாம்.

தேவைப்படும் ஆவணங்கள் விவரம்:

இத்திட்டத்தின் கீழ் பயனடைய விரும்பும் விவசாயிகள் தங்களது நிலப்பட்டா, சிட்டா, அடங்கல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார், வங்கிப் புத்தகத்தின் முதல் பக்க நகல், சாதிச் சான்றிதழ் மற்றும் சிறு குறு விவசாயி சான்றிதழ் ஆகிய ஆவணங்களுடன் பதிவு செய்து பயனடைய கேட்டுக்கொள்ளப்படுகிறுது.

மேலும் விவரங்களுக்கு தூத்துக்குடி, திருவைகுண்டம் மற்றும் கருங்குளம் வட்டார தனிநபர் விவசாயிகள் உதவி செயற் பொறியாளர் (வே.பொ) தூத்துக்குடி (9443688032), கோவில்பட்டி, கயத்தாறு, ஓட்டப்பிடாரம், புதூர் மற்றும் விளாத்திகுளம் வட்டார தனிநபர் விவசாயிகள் உதவி செயற் பொறியாளர் (வே.பொ), கோவில்பட்டி (9443276371) மற்றும் ஆழ்வார்திருநகரி, சாத்தான்குளம், திருச்செந்தூர் மற்றும் உடன்குடி வட்டார தனிநபர் விவசாயிகள் உதவி செயற் பொறியாளர் (வே.பொ) திருச்செந்தூர் (8778426945) ஆகியோரைத் தொடர்பு கொள்ளுமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆரோக்கியமான, பசையம் இல்லாத உணவுகளுக்கான தேவை அதிகரித்து வருவதால், சிறுதானியங்கள் லாபகரமான சந்தை வாய்ப்புகளை வழங்குகின்றன. தட்பவெப்ப நிலை மாறுபாட்டிற்கு தகவமைத்துக் கொள்ளும் தன்மை சிறுதானியங்களை நம்பகமான பயிராக மாற்றுகிறது, மாறிவரும் சுற்றுச்சூழல் நிலைமைகளில் விவசாயிகளுக்கு உணவு மற்றும் வருமான பாதுகாப்பை சிறுதானியங்கள் உறுதி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Read more:

வறண்ட பகுதியில் மிளகு- டிராகன் பழ சாகுபடி: அசத்தும் பெண் விவசாயி!

நெல் விவசாயிகளுக்கான சி.நாராயணசாமி நாயுடு விருது: யாரெல்லாம் விண்ணப்பிக்கத் தகுதி?

English Summary: Tillage subsidy for small grain cultivation to Tamilnadu farmers

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.