1. வாழ்வும் நலமும்

படுக்கச் செல்லும் முன்பு -2 கிராம்பு+ஒரு டம்ளர் வெந்நீர்- ஏத்தனை நன்மைகள்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
2 cloves before going to bed + a tumbler of hot water - amazing benefits!

உணவுக்கு மணத்தையும் சுவையையும் கூட்டிக்கொடுக்கும் மசாலாப் பொருட்களில் கிராம்பு இன்றியமையாதது. அதன் கமகமக்கும் மசாலா மணமே இதற்குச் சாட்சி.

இரட்டிப்பு நன்மைகள் (Doubling benefits)

பொதுவாகக் கிராம்பை நாம் எந்த நேரத்திலும் வேண்டுமானாலும் உட்கொள்ளலாம், ஆனால் படுக்கைக்கு முன் அதை உட்கொண்டால், அதன் நன்மைகளை இரட்டிப்பாகப் பெற முடியும்.

ஆரோக்கியத்தின் அஸ்திவாரம் (The foundation of health)

சைஜியம் அரோமடிகம் என அறிவியல் பூர்வமாக அறியப்படும் கிராம்பு, குறிப்பாக ஆயுர்வேதத்தின் அடிப்படையாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ள ஒன்றாகும். கிராம்பை அன்றாட நமது உணவுகளுடன் சேர்த்துக்கொண்டால், அதன் மருத்துவ குணங்களுடன் வயிற்று நோய்கள் மற்றும் பல்வலி மற்றும் தொண்டை வலி ஆகியவற்றிலிருந்து நிவாரணம் பெறலாம்.

தோற்றத்தில் சிறியதாகவும் சுவையில் சற்று கசப்பாகவும் இருக்கும் கிராம்பில், எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. யூஜெனோல் என்ற உறுப்பு கிராம்புகளில் காணப்படுகிறது. இது மன அழுத்தம், வயிற்று நோய்கள், பார்கின்சன் நோய், உடல் வலி போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு தருகிறது.

வைட்டமின்கள் (Vitamins)

கிராம்பில் வைட்டமின் ஈ, வைட்டமின் சி, ஃபோலேட், ரிபோஃப்ளேவின், வைட்டமின் ஏ, தியாமின், வைட்டமின் டி, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் போன்ற அழற்சி எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன.

சாப்பிடுவது எப்படி? (How to eat?)

இரவில் படுக்கும் முன் 2 கிராம்புகளை மெல்ல வேண்டும். இதற்குப் பிறகு, 1 கிளாஸ் வெந்நீரைக் குடிக்க வேண்டும். இது முகப்பரு உள்ளிட்ட பல பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவும்.

ஆரோக்கிய நன்மைகள் (Health Benefits)

செரிமானக் கோளாறு (Digestive disorder)

இரவில் கிராம்பை உட்கொள்வது மலச்சிக்கல், அமிலத்தன்மை, வயிற்றுப்போக்கு போன்ற வயிற்றுப் பிரச்சினைகளைப் போக்க உதவும். கூடுதலாக, செரிமான அமைப்பு சரியாக வேலை செய்யவும் இது உதவுகிறது.

முகப்பரு (Acne)

கிராம்பில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. முகப்பருவுக்கு உதவும் ஒரு குறிப்பிட்ட வகை சாலிசிலேட் இதில் உள்ளது.

பல்வலி (Toothache)

உங்கள் பற்களில் புழுக்கள் இருந்தால், வெதுவெதுப்பான நீரில் கிராம்பை உட்கொள்வது அதிலிருந்து விடுபட உதவும். மேலும் இது பல் வலியைப் போக்கவும் உதவுகிறது.

கிராம்பு சாப்பிடுவதால் வாயில் இருந்து துர்நாற்றம் மறைந்து போகும். இது நாக்கில் உள்ள பாக்டீரியா மற்றும் தொண்டையின் மேல் பகுதியையும் சுத்தம் செய்யவும் உதவுகிறது. கிராம்பு தொண்டைப் புண் மற்றும் வலியிலிருந்து விடுபட உதவுகிறது.

நடுக்கம் (Trembling)

கைகள் மற்றும் கால்களின் நடுங்கும் பிரச்சனையை நீங்கள் எதிர்கொண்டால், படுக்கைக்கு முன் 1-2 கிராம்புகளை வெதுவெதுப்பான நீரில் உட்கொள்ளலாம். சில நாட்களில் நீங்கள் பலன் பெறுவீர்கள்.

சளி, இருமல், வைரஸ் தொற்று, மூச்சுக்குழாய் அழற்சி, சைனஸ், ஆஸ்துமா போன்ற பிரச்சனையிலிருந்து விடுபடவும் கிராம் நிச்சயம் உதவும்.
உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் பலவீனமாக இருந்தால், தினமும் கிராம்புகளை உட்கொள்ளத் தொடங்குவது நல்லது.

மேலும் படிக்க...

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் வேம்பு தேநீர்!

சருமப் பிரச்சனை தீர Milk water bathபாத் தான் பெஸ்ட்- விபரம் உள்ளே!

English Summary: 2 cloves before going to bed + a tumbler of hot water - amazing benefits! Published on: 18 October 2021, 10:45 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.