கொரோனா தொற்று வேகமாகப் பரவிவரும் சூழலில், கவலைக்குரிய மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் உள்ளிட்ட 8 மாநிலங்கள் இடம் பெற்றுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கட்டுப்படாதக் கொரோனா (Unrestricted corona)
தமிழ்நாட்டில் ஒமிக்ரான் அச்சுறுத்தல் காரணமாக, தினசரி கொரோனா பாதிப்பு மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. கொரோனாப் பரவலைக் கட்டுப்படுத்த ஏதுவாக தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உள்ளிட்டவை அமல்படுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் கட்டுக்குள் வரவில்லை. கட்டுக்கடங்காமல், தொடர்ந்து அதிகரித்து வருவது, மக்களிடையே மாபெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
20 ஆயிரத்திற்கும் மேல் (More than 20 thousand)
ஜனவரி 13ம் தேதி மட்டும் 20,911 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதில், சென்னையில் மட்டும் 8,218 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று நாடு முழுவதும் வேகமாகப் பரவிவரும் சூழலில், கவலைக்குரிய மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் உள்ளிட்ட 8 மாநிலங்கள் இடம் பெற்றுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய பேசிய சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
3 மிக மிக மோசம் (3 Very very bad)
சளி, இருமல், காய்ச்சல் இருந்தால் கட்டாயம் பரிசோதனை செய்ய வேண்டும். ஒமிக்ரான் தொற்று வேகமாகப் பரவும் தன்மை கொண்டது. 2ஆம் அலையை விட 3 மடங்கு பாதிப்புகள் அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
பூஸ்டர் தடுப்பூசி செலுத்த 60 வயதுக்கு மேற்பட்டோர் தகுதியானவர்கள். தகுதியானவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
தகுதியானவர்கள் (Deserving)
மக்கள் தாமாக முன்வந்து 2-வது தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் 93 லட்சம் பேர் 2-வது தவணை தடுப்பூசி செலுத்த தகுதியானவர்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் படிக்க..
Share your comments