1. வாழ்வும் நலமும்

வயாக்ரா உதவியால் - 28 நாட்கள் கோமாவில் இருந்து மீண்ட பெண்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Viagra - The woman who overcame her coma in 28 days!

கொரோனா பாதிப்பு மன உளைச்சலை மட்டுமல்ல பல்வேறு நோய்களையும் பரிசாக வழங்கியுள்ளது. அப்படி கொரோனா பாதிப்பால் கோமா நிலைக்குத் தள்ளப்பட்டப் பெண்ணை, வயாக்ராமருந்து கொடுத்துக் காப்பாற்றியிருக்கிறார்கள் மருத்துவர்கள்.

கொடூரக் கொரோனா (Cruel corona)

கொரோனா உலக நாடுகளை உலுக்கி எடுத்தது. இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் பலர் பரலோக ராஜியத்தை அடைந்தார்கள். லட்சக்கணக்கானோர் தீவிர சிகிச்சைக்குப் பிறகு மீண்டனர். 

அப்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டு, கோமா நிலைக்குத் தள்ளப்பட்ட ஒரு அதிர்ஷ்டவமாக உயிர்தப்பி, இயல்புநிலைக்குத் திரும்பியுள்ளார்.

இங்கிலாந்தை சேர்ந்த செவிலியர் மோனிகா அல்மேடா . செவிலியரான இவர் கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களைம் போட்டுள்ளார். அவருக்கு கடந்த அண்மையில் கொரோனா பரிசோதனை நடத்தபட்டது. அப்போது கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது இதை தொடர்ந்து அவர்மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார்.

தீவிர சிகிச்சை (Intensive treatment)

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு, மோனிகா நான்கு நாட்களில் சுவை மற்றும் வாசனையை இழந்தார்.அவருடைய ஆக்ஸிஜன் அளவு குறைந்தது. உடல்நிலை மோசமடைந்ததால், தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். பல நாட்காள கோமாவில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்.

கோமா

இந்த நிலையில் ஒரு சோதனை முயற்சியாக,மருத்துவர்கள் அவருக்கு அதிக அளவு வயாக்ரா மருந்து கொடுத்து உள்ளனர்.இதன் பிறகு மோனிகாவில் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் தென்பட்டது. என்ன ஆச்சரியம் கோமாவில் இருந்த மோனிகாவிற்கு, இந்த மருந்து காரணமாக, து 28 நாட்களுக்குப் பிறகு சுயநினைவு திரும்பியது.

டிஸ்சார்ஜ் (Discharge)

அவர் சுயநினைவு திரும்பிய பிறகு, லிங்கன் கவுண்டி மருத்துவமனையின் மருத்துவர்கள் கோமாவில் வைக்கப்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு அவருக்கு வயாக்ரா மருந்து வழங்கப்பட்டதை வெளிப்படுத்தி உள்ளனர்.
இதையடுத்து மோனிகா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் விடுமுறையை அவர் கழிக்க முடிந்தது. இருப்பினும், அவர் முழுமையாக குணமடைய பல மாதங்கள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காற்று அலைகள் திறப்பு

இதுகுறித்து செவிலியர் மோனிகா கூறியதாவது:-
நிச்சயமாக வயாக்ராதான் என்னைக் காப்பாற்றியது. 48 மணி நேரத்திற்குள் அது என் காற்று அலைகளைத் திறந்ததால், என் நுரையீரல் செயல்பட ஆரம்பித்தது. மருந்து எவ்வாறு செயல்படுகிறது என்றால், அது உங்கள் இரத்த நாளங்களை விரிவுபடுத்துகிறது. எனக்கு ஆஸ்துமா உள்ளது, என் காற்றுப் பைகளுக்கு கொஞ்சம் உதவி தேவை.

நான் குணமடைந்தவுடன் மருத்துவ ஆலோசகர் ஒருவர் என்னிடம் உங்களை காப்பாற்றியது வயாக்ரா தான் என்று கூறினார். நான் சிரித்தேன், அவர் கேலி செய்கிறார் என்று நினைத்தேன், ஆனால் பின்னர்தான் தெரியவந்தது, வயாகராதான் எனக்கு மருந்தாக செலுத்தப்பட்டது என்பது.

உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் இப்போது இரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க வயாக்ரா மருந்தைப் பயன்படுத்த முடியுமா என்று பரிசோதித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க...

அடுத்து வருகிறது மிக மிக ஆபத்தான வைரஸ்- விஞ்ஞானி எச்சரிக்கை!

நடுங்கும் குளிரில் இருந்து தப்பிக்க- இந்த 4 பொருட்கள் மட்டும் போதும்!

English Summary: Viagra - The woman who overcame her coma in 28 days!

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2022 Krishi Jagran Media Group. All Rights Reserved.