1. வாழ்வும் நலமும்

கோடை வெயிலைக் கொளுத்திவிட- தினமும் 4 புதினா இலைகள்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
4 mint leaves daily to brighten up the summer sun!

பொதுவாகக் கோடைக் காலங்களில், நம் உடலில் அதிகளவில் வறட்சி ஏற்படும். நீரில் அளவு குறைவதால் அடிக்கடித் தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற நிலை உருவாகும்.

நீரில் அளவு குறித்து உடலில் ஏற்படும் சோர்வைப் போக்க தினமும் 4 புதினா இலைகளைப் சாப்பிடுவது நல்லது. ஏனெனில், புதினா மிக அதிக அளவு ஆன்டி - ஆக்சிடண்ட்டுகளைக் கொண்ட மூலிகை இலை. அதிலும், க்ரீன் டீயை விட கிட்டதட்ட 100 மடங்குக்கும் மேல் ஆன்டி ஆக்சிடண்ட்டின் அளவு அதிகம் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம். இதை தினமும் உணவில் சேர்ப்பதால் இன்னும் என்னென்ன பயன்களைப் பெற முடியும்.

​ஜீரண சக்தி

புதினாவில் ஆன்டி - பாக்டீரியல் மற்றும் ஆன்டி - செப்டிக் பண்புகள் அதிக அளவில் இருப்பதால், அஜீரணப் பிரச்னைகளுக்கு நிவாரணம் அளிப்பதோடு, வயிறு மந்தத்தைச் சரிசெய்யவும் உதவுகிறது.சாப்பிட்டு முடித்தபின் 4 புதினா இலைகளை வாயில் போட்டு மென்று தண்ணீர் குடித்தால் அஜீரணக் கோளாறு உண்டாகாது.

​சளியை குறைக்க

குளிர்காலம் மற்றும் மழைக் காலங்களில் மட்டுமல்லாது வெயில் காலத்திலும் கூட சிலருக்கு சளி பிடிக்கும். அப்படி பருவ மாற்றத்தாலும் தொற்று மற்றும் அழற்சியினாலும் ஏற்படுகிற சளியைப் போக்க புதினாவைச் சேர்த்துக் கொள்வது நல்லது.புதினா மூக்கடைப்பு, தொண்டை வலி மற்றும் நுரையீரல் சம்மந்தப்பட்ட பிரச்சினைகளைச் சரிசெய்கிறது.குறிப்பாக, புதினாவில் உள்ள ஆன்டி - இன்ப்ளமேட்டரி பண்புகள் கொண்டிருப்பதால் இது நாள்பட்ட சளியையும் வெளியேற்றும் தன்மை கொண்டது.

பல் சொத்தை

புதினா எசன்ஸ் சேர்த்து தயாரிக்கப்பட்ட மிட்டாய் மற்றும் சுவிங்கம் கடைகளில் விற்கின்றன. அப்பப்போது ஓய்வாக இருக்கும்போது புதினா சுவிங்கம் அல்லது வெறுமனே ஃபிரஷ்ஷான புதினா இலைகளை வாயில் போட்டு மென்று வந்தாலே பற்களில் சொத்தை வராது. அதுமட்டுமின்றி பல் வலி ஏற்படாது. இருக்கிற பல் வலியும் குறையும்.

​எடை குறைய

புதினா வயிற்றில் ஜீரண சக்தியை மேம்படுத்தும் என்சைம்களைத் தூண்டுகின்றன. இது நம்முடைய உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை மட்டும் உடல் கிரகித்துக் கொள்ள உதவுகிறது. மேலும், நம் மெட்டபாலிசத்தையும் அதிகரிக்கச் செய்வதன் மூலம் நாம் எடையைக் குறைக்கவும் உதவுகிறது.

​பருக்கள் நீங்க

சருமத்தில் ஏற்படும் தொற்றுக்கள் மற்றும் அதிக அளவில் சீரம் உற்பத்தியாவதால் ஏற்படும் பருக்கள் மற்றும் சருமக் கொப்புளங்களைத் தீர்க்க உதவுகிறது.இதில் உள்ள ஆன்டி - இன்பிளமேட்டரி பண்புகள் மற்றும் ஆன்டி - பாக்டீரியல் பண்புகள் சருமத் தொற்றுக்களைச் சரிசெய்வதோடு பருக்களையும் பருக்கள் இருந்த தழும்புகளையும் நீக்குகிறது.

​காலை நேர சோர்வு

காலை நேரத்தில் சிலர் எழுந்திருக்கும்போதே சோர்வாக இருப்பார்கள். அதிலிருந்து மீண்டு காலை நேரத்தையும் அந்த நாளையும் சுறுசுறுப்பாக மாற்றுவதற்கு காலையில் எழுந்ததும் ஒரு புதினா டீ குடித்தால் போதும்.

மேலும் படிக்க...

தினமும் 3 டம்ளர் பால் மட்டும்- அதிகரித்தால் இத்தனைச் சிக்கல்கள்!

ஐஸ் வாட்டர் குடித்தால் இதயத் துடிப்பு குறையும்- நிபுணர்கள் எச்சரிக்கை!

English Summary: 4 mint leaves daily to brighten up the summer sun! Published on: 03 April 2022, 08:03 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.