தலைமுறை தலைமுறையாக இயற்கை எண்ணெய்கள் தலைமுடி மற்றும் சரும பராமரிப்பில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பட்டு போன்ற மென்மையான சருமம் அனைவரும் விரும்பும் ஒன்று. அதற்கு இயற்கையான எண்ணெய்கள் உங்களுக்கு உதவும். அவை உங்கள் சருமத்தை வலிமையாக மாற்றும். எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வதால் சருமத்தில் உள்ள நச்சுக்கள் எளிதில் வெளியேறும். சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க முக மசாஜ் செய்வது பாரம்பரிய முறையாகும். இயற்கை எண்ணெய்கள் மூலம் உங்கள் முகத்தை மசாஜ் செய்வது உண்மையில் உங்கள் சருமத்தை ஈரப்பதமாக்குகிறது, எண்ணெய் மசாஜ் செய்வதால் சருமத்தில் பாக்டீரியா போன்ற கிருமிகள் அண்டவிடாமல் பாதுகாக்கும். அது மட்டுமில்லாமல் அழகுசாதனப் பொருட்களில் இருக்கும் ரசாயனங்களால் ஏற்படும் சருமப்பாதிப்பை சீராகாக்க உதவும்.
தேங்காய் எண்ணெய் (Coconut Oil)
பாட்டி வைத்தியத்தில் கூட, முதல் இடம் தேங்காய் எண்ணெய்க்கு தான். இதனால் சருமத்திற்கு பல நன்மைகள் உண்டு. முதலில் தோலில் இருந்து நச்சுகளை அகற்ற பயன்படுகிறது. இது பாக்டீரியா, பூஞ்சை எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது. தேங்காய் எண்ணெயில் வைட்டமின் ஈ மற்றும் கே உள்ளன, அவை உங்கள் சருமத்திற்கு மிகவும் ஆரோக்கியமானவை. சருமத்தால் இதன் நன்மைகள் எளிதில் உறிஞ்சப்படும். உங்களுக்கு எண்ணெய் பசை சருமம் என்றால் நீங்கள் பொதுவாகவே எண்ணெய் மசாஜை தவிர்க்கலாம்.
ஆலிவ் எண்ணெய் (Olive Oil)
நவநாகரீக எண்ணெய்களில் ஒன்றான ஆலிவ் எண்ணெய் உங்கள் சருமத்திற்கு மிகவும் ஆரோக்கியமானது. கூடுதல் வர்ஜின் வகைகளில் உள்ள ஆலிவ் எண்ணெய் சரும பராமரிப்பில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இது தோலில் ஏற்படும் அலர்ஜி பிரச்னைக்கு நல்ல தீர்வாக இருக்கும். ஆலிவ் எண்ணெயில் சருமதிற்கு ஊட்டச்சத்து வழங்கும் வைட்டமின்கள் ஏ, டி, ஈ மற்றும் கே ஆகியவை உள்ளன. இது ஒரு மாய்ஸ்சரைசரைப் போலவும் செயல்படும். சருமத்தை இயற்கையாக சுத்தப்படுத்த சிறந்த தேர்வாக இருக்கும். ஆலிவ் எண்ணெயை சருமத்தில் தடவினால் வறட்சி பிரச்னை உங்களுக்கு இருக்காது.
சூரியகாந்தி விதை எண்ணெய் (Sunflower Seed Oil)
சூரியகாந்தி எண்ணெய் பொதுவாக சமையலுக்கு தான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் சூரியகாந்தி விதை எண்ணெய் முக மசாஜ் செய்ய ஒரு சிறந்த இயற்கை எண்ணெய். இந்த எண்ணெயில் அதிக அளவு வைட்டமின் ஈ உள்ளது, அதனால் சருமத்தில் இயற்கையாக அந்த சத்து உறிஞ்சப்படுகிறது. சருமத்தை எப்போதும், ஈரப்பதத்துடன் வைத்து கொள்ளும். ஆனால் இதை குறைந்த அளவில் பயன்படுத்த வேண்டும், ஏனெனில் இது இயற்கையில் ஒட்டும் தன்மையுடையது. இதனால் சிலர் இதை அசௌகரியமாக உணரலாம். இருப்பினும், இது உங்கள் சருமத்தை தொற்று, பாக்டீரியா மற்றும் வைரஸ்களிலிருந்து பாதுகாக்கும். ஆலிவ் எண்ணெயைப் போல சூரியகாந்தி எண்ணெய் அலர்ஜி ஏற்படுத்தாது.
பாதாம் எண்ணெய் (Almonds Oil)
இந்த எண்ணெய் ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த பாதாம் பருப்பில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இதில் வைட்டமின் ஈ, துத்தநாகம், புரதங்கள் மற்றும் பொட்டாசியம் ஆகியவை நிறைந்துள்ளன. இது உங்கள் சருமத்தை பளபளப்பாக வைத்து, சருமத்தின் அமைப்பை ஒளிரச் செய்கிறது. எனவே முக மசாஜிற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குளிர்காலத்தில் இதை பயன்படுத்தினால், சருமத்தில் வறட்சி ஏற்படாது.
இருப்பினும், பாதாம் எண்ணெய் சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தலாம். அதனால் உங்கள் தோலின் தன்மைக்கு இந்த எண்ணெய் உகந்ததா என பார்த்து கொண்டு உபயோகிக்கவும்.
மேலும் படிக்க
உஷார்: இரண்டே நிமிடம் போதும் ரகசிய கேமராவை கண்டுபிடிக்க!
அடுத்தவர் விஷயத்தில் மூக்கை நுழைப்பவரா நீங்கள்? இந்த டிப்ஸ் உங்களுக்குத் தான்!
Share your comments