குளிர்காலத்தில் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பது மிகவும் சவாலான விஷயம் ஆகும். குளிர்ந்த காற்று யாரையும் நோய்வாய்ப்படுத்த வல்லது. குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர், விரைவில் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. ஆதற்காக நாம், குளிர்கால மாதங்களில் வீட்டிற்குள் சென்று நம்மை அடைத்துவிட முடியாது. ஆகவே கீழே கொடுக்கப்பட்ட வழிமுறைகளை பயன்படுத்தி பாருங்கள்.
மஞ்சள் பால் (Turmeric Milk)
பெரும்பாலான மக்கள் குளிர்காலத்தில் சூடாக இருக்க காபி அல்லது டீ குடிப்பது வழக்கம். ஆனால் காஃபின் கலந்த பானங்கள் உங்களுக்கு அவ்வளவாக உதவாது. இந்த பருவத்தில், உங்கள் சூடான கப் காபியை விட்டுவிட்டு, ஆரோக்கியமான மஞ்சள் பாலை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு நாளும் மஞ்சள் பால் அருந்துவது, சளி மற்றும் காய்ச்சலில் இருந்து உங்களைப் பாதுகாக்கும். உங்கள் மஞ்சள் பாலில் இலவங்கப்பட்டை தூள், மிளகு தூள் மற்றும் ஏலக்காய் தூள் போன்ற சில மசாலாப் பொருட்களையும் சேர்த்தால் பாலின் சுவை இன்னும் அதிகரிக்கும்.
மசாஜ் (Massage)
குளிர் காலத்தில், எள் எண்ணெய் அல்லது கடுகு எண்ணெய் மூலம் மசாஜ் செய்வது உங்களை சூடாக வைத்திருக்கும், இது குளிரை எதிர்த்துப் போராட உதவுகிறது மற்றும் உங்கள் சருமத்தை மென்மையாகவும் வைத்திருக்கும். காலையில் குளிப்பதற்கு முன் அல்லது படுக்கைக்குச் செல்வதற்கு முன் உங்கள் தோலை மசாஜ் செய்யலாம். மசாஜ் செய்வது உங்கள் மனதை அமைதிப்படுத்துகிறது, மன அழுத்தத்தை நீக்குகிறது மற்றும் உங்கள் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துகிறது.
தேங்காய் எண்ணெய் (Coconut Oil)
வறண்ட மற்றும் உதிரும் முடி பிரச்சனை, குளிர்காலத்தில் மற்றொரு பொதுவான பிரச்சினையாகும். குளிர்ந்த காற்று உங்கள் தலைமுடியில் உள்ள ஈரப்பதத்தை நீக்குகிறது. இந்த பருவத்தில் உங்கள் தலைமுடிக்கு ஊட்டமளித்து வலுவூட்ட தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துங்கள். உங்கள் விரல் நுனியில் சில துளிகள் தேங்காய் எண்ணெயை எடுத்து, உங்கள் உச்சந்தலையில் மசாஜ் செய்யவும். தேங்காய் எண்ணெயுடன் மசாஜ் செய்வது உங்கள் கூந்தலை வலுவாகவும், பளபளப்பாகவும் மாற்றும்.
சூடான உணவை உண்ணுங்கள் (Have Hot Food)
கோடை காலத்தை விட குளிர்காலத்தில் நமது செரிமான அமைப்பு பலவீனமாக இருக்கும். எனவே, இந்த சீசனில் குளிர்ந்த உணவைத் தவிர்க்கவும். நீங்கள் குளிர்ந்த உணவை உண்ணும்போது, உங்கள் செரிமான அமைப்பு அதை ஜீரணிக்க கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இது பெரும்பாலும் அஜீரணம் மற்றும் பிற வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. ஆரோக்கியமாக இருக்க சூடான மற்றும் எளிதில் ஜீரணிக்கக்கூடிய உணவை உட்கொள்ளுங்கள்.
சுறுசுறுப்பாக இருங்கள்ஷ் (Be active)
எந்த பருவத்திலும் ஆரோக்கியம் மற்றும் சுறுசுறுப்பாக இருப்பது முக்கியம். குளிர்காலத்தில் காலையில் எழுந்து வாக்கிங் செல்வது சற்று சிரமம்தான், ஆனால் உடல் ஆரோக்கியமாக இருக்க இதை செய்ய வேண்டும். நீங்கள் வெளியே செல்ல விரும்பவில்லை என்றால் வீட்டிலும் யோகா செய்யலாம். நீங்கள் எந்த வகையான உடற்பயிற்சி செய்தாலும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்பதே முக்கிய நிகழ்ச்சி நிரல் ஆகும்.
மேலும் படிக்க:
ஜூன் 2022 வரை சோயாமீல் மீதான புதிய இருப்பு வரம்புகள் அரசு நிர்ணயம்
Share your comments