அரசு ஊழியர்களுக்கு 5 சதவீத அகவிலைப்படி உயர்வை இந்த மாநில முதல்வர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு ஊழியர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தப்பட்ட பிறகு மாநில அரசுகளும் ஒவ்வொன்றாக அகவிலைப்படி உயர்வை அறிவித்து வருகின்றன. அந்த வகையில் திரிபுரா மாநில அரசு ஊழியர்களின் நீண்ட நாள் காத்திருப்பு தற்போது முடிவுக்கு வந்துள்ளது. அகவிலைப்படி உயர்வுக்கு அம்மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
5 சதவீதம் உயர்வு
இதன் படி அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் மாணிக் சாஹா அறிவித்துள்ளார். இந்த உயர்த்தப்பட்ட அகவிலைப்படி 2022 ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ளது.
சட்டமன்றத் தேர்தல்
திரிபுராவில் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், அரசு ஊழியர்களைக் கவரும் வகையில், மாநில அரசு இந்த பெரிய முடிவை எடுத்துள்ளது.
அரசின் இந்த முடிவால் மாநில அரசுக்கு ரூ.523.80 கோடி கூடுதல் செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. இருப்பினும், அரசின் இந்த முடிவால் 1,04,683 ஊழியர்களும் 80,855 ஓய்வூதியதாரர்களும் பலன் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. அதாவது திரிபுராவில் இந்த அறிவிப்பால் மொத்தம் 1.88 லட்சம் பேர் பயனடைவார்கள்.
மேலும் படிக்க...
Share your comments