துரிதமான வாழ்க்கையில், அதிக போட்டி நிறைந்த உலகில் மன அழுத்தம் (Stress) என்பது உலகம் முழுவதும் உள்ள பலருக்கு ஒரு முக்கிய கவலையாகவும் பிரச்சனையாகவும் உள்ளது. கவலை, மன அழுத்தம் ஆகியவை பல கடுமையான நோய்களுக்கு வழிவகுக்கிறது. சில நேரங்களில் இது ஆரோக்கியத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம்.
மன அழுத்தம் (Stress)
சரியான நேரத்தில் மன அழுத்தத்திற்கு சிகிச்சையளிக்கப்படா விட்டால், அது மன ஆரோக்கியத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். மன அழுத்தத்தை எதிர்த்துப் போராடுவதில் பயனுள்ளதாக இருக்கும் சில பழங்களை (Fruits) தினமும் உணவில் சேர்த்தால் உற்சாகமாக இருக்கலாம்.
கொய்யா (Guava)
கொய்யாப் பழத்தில் வைட்டமின் சி அதிகளவில் காணப்படுவதால், குளிர் காலத்தில் இதனை உட்கொள்வதன் மூலம், பல நோய்களை எதிர்த்துப் போராடும் வலிமையை கூடுதலாக பெறலாம்.
திராட்சை (Grape)
திராட்சையில் நீர் சத்து, சோடியம், பொட்டாசியம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இது மன அழுத்தத்தை போக்க சிறந்த வழி.
ஆரஞ்சு (Orange)
ஆரஞ்சு மன அழுத்தத்தை நீக்குகிறது. இதில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால் மன அழுத்தத்தை நீக்குகிறது என்று ஒரு ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.
வாழை (Banana)
பல வைட்டமின்கள், பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் வாழைப்பழத்தில் காணப்படுகின்றன. மன அழுத்தத்தில் வாழைப்பழம் சாப்பிடுவது நன்மை பயக்கும்.
புளுபெர்ரி (Blueberry)
புளுபெர்ரி எனப்படும் அவுரிநெல்லியில் வைட்டமின் சி, ஏ, பி, ஈ போன்றவை நிறைந்துள்ளன. இது மன அழுத்தத்தைப் போக்கி, உடலை வலுவாக வைத்திருக்கும் என்று ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. அதே நேரத்தில், இது நியாபக சக்தியையும் அதிகரிக்கிறது
கிவி (kiwi)
கிவி மன அழுத்தத்தைப் போக்க வந்த வரம் எனக் கூறினால் மிகையில்லை. இதில் இரும்புச்சத்து மற்றும் போலிக் அமிலம் நிறைந்துள்ளது. எனவே இந்த பழம் மன அழுத்தத்தை சமாளிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மேலும் படிக்க
யாரெல்லாம் கற்றாழையை தவிர்க்க வேண்டும்: விவரம் உள்ளே!
வறுத்த பூண்டை சாப்பிட்டால் இந்த நோயே வராதாம்: எதுன்னு பாருங்க!
Share your comments