தமிழகத்தில் கடந்த 2 மாதங்களில் கொரோனா வைரஸ் தொற்றுக்குப் பலியானவர்களில் 87% பேர் தடுப்பூசிப் போடாதவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
கொடூரக் கொரோனா (Cruel corona)
கடந்த இரண்டு ஆண்டுகளாக உலக நாடுகளை உலுக்கியக் கொரோனா வைரஸ் பரவல் தமிழகத்திலும் தனது கோரத்தாண்டவத் அரங்கேற்றி வருகிறது.
தொடக்கத்தில் அடுக்கடுக்காக ஏற்பட்ட உயிர்பலியைத் தொடர்ந்து, மக்களின் உயிர்காக்கும் தடுப்பூசிப் போடும் பணி முடுக்கிவிடப்பட்டது.
தடுப்பூசி சர்ச்சை (Vaccine controversy)
தடுப்பூசி குறித்த சர்ச்சைகள் ஒருபுறம் பரவிய நிலையில், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, உயிர்காக்க தடுப்பூசிப் போட்டுக்கொள்வது அவசியம் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து தடுப்பூசி முகாம்களும் முழுவீச்சில் நடத்தப்பட்டு, 100% தடுப்பூசிப் பாதுகாப்பு அரணை ஏற்படுத்த மத்திய- மாநில அரசுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன.
சுகாதாரத்துறைத் தகவல் (Health Information)
இந்நிலையில், இதுதொடர்பான ஆய்வில், தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கொரோனாவிற்கு பலியானவர்களில் 87 % பேர் தடுப்பூசி போடாதவர்கள் என்ற அதிர்ச்சித் தகவலை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
அதில், கடந்த 2 மாதங்களில் தமிழ்நாட்டில் 1,626 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். அதில் 1,419 பேர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள். அதாவது இறந்தவர்களில் 87 சதவிகிதம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த இரண்டு மாதங்களில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 80 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர். இதில் 63% பேர் கொரோனாத் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள். 24% பேர் தடுப்பூசி ஒரு டோஸ் போட்டுக்கொண்டவர்கள். 13% பேர் முழுமையாக 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள்.
87% தடுப்பூசி போடாதவர்கள் (87% are unvaccinated)
இவர்களில் கொரோனா வீரியம் அடைந்து, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்கள் 5816. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1626. இதன்மூலம் உயிரிழந்தவர்களில் 87% பேரும், அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்களில் 76 % பேரும், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
வீரியம் வித்தியாசம் (Malignancy is the difference)
இந்த புள்ளிவிபரத்தில் இருந்து கொரோனாத் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கும், செலுத்திக் கொண்டவர்களுக்கும் தொற்றின் வீரியம் எவ்வாறு இருந்தது என்பது தெளிவாகியிருக்கிறது.
மேலும் படிக்க...
தடுப்பூசிக்கு ஆன்ட்ராய்ட் போன் பரிசு – ஆட்சியரின் அதிரடி அறிவிப்பு!
Share your comments