அன்றாட வாழ்க்கையில் அவசரமாக வேலைக்கு ஓடும் பலருக்கு, ரத்தத்தில் Blood Pressure அளவில் மாறுபடுகிறது. இந்தப் பிரச்னையில் இருந்து விடுபட, நம் வீடுகளில் தயார் செய்யப்படும் ஒரு கப் தயிர் போதும் என்று பல்கலைக்கழக ஆய்வில் தெரியவந்துள்ளது.
உயிருக்கே ஆபத்து
நமக்கு ரத்த அழுத்தம் சீராக இருந்தால் எந்தத் தொந்திரவும் வருவதில்லை. குறிப்பாக 40 வயதைக் கடக்கும்போது, ரத்த அழுத்தம், அதிகமாவோ அல்லது குறைவாகவோ மாறுகிறது. இது இதய ஆரோக்கியத்தைக் கெடுத்து, உயிருக்கு உலைவைக்கும் அளவுக்குச் செல்லும்.
40 வயதில்
அதனால்தான் எந்த ஒரு விஷயத்திற்காகவும் டென்ஷன் ஆகாமல், பிரச்னைக்கான காரணத்தை ஆராய்ந்து, அதை சமாளிப்பதற்கான வழியையும் கண்டுபிடிக்க வேண்டும்.இருப்பினும் இயந்திரமயமாகிவிட்ட இந்தியர்களின் வாழ்க்கையில், எல்லாமே சகஜமாகிவிட்டது. 40 வயதைக் கடந்தவர்களில், பிரஷர், சுகர் ,இல்லாதவர்களைப் பார்ப்பது கடினம். அந்த அளவுக்கு மன அழுத்தம் நம்மை ஆட்கொண்டுவிட்டது. இந்தப்பிரச்னைக்கு தயிரே மிகச்சிறந்த மருந்து என்கிறது, அமெரிக்க ஆராய்ப்பு முடிவு.
தயிர்
சராசரி அளவை விடவும் ரத்த அழுத்தம் அதிகமாக இருப்பவர்கள், அதாவது 140/90எம்.எம்.ஹெச்.ஜி., இருந்தால், தினமும் அன்றாடம் தயார் செய்த புளிக்காத தயிர் சாப்பிட வேண்டும். ரத்த அழுத்தம் குறைந்து சராசரி நிலைக்கு வந்து விடும்.
ஆய்வில் தகவல்
இதயத்திற்கு ஆரோக்கியத்தை தரும் தயிரில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள், அதிக அளவு புரதத்தை உற்பத்தி செய்கின்றன. இது இயல்பாகவே ரத்த அழுத்தத்தை குறைக்கிறது என்று அமெரிக்காவின் மெய்னோ பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
மழைகாலத்தில் நோய்களை விரட்ட- எதிர்ப்பு சக்தியை கூட்டும் 4 பழங்கள்!
தினமும் அதிகாலையில் 4 கருவேப்பிலை- வாரிக்கொடுக்கும் நன்மைகள்!
Share your comments