பாலில் இருந்து நமக்கு பல்வேறு பொருட்கள் கிடைக்கின்றன.பால், மோர், தயிர், வெண்ணை, ஆகியவை அனைத்தும் உடலுக்கு நன்மை அளிப்பவை என்று நம் அனைவருக்குமே தெரிந்த ஒன்று. இதில் நம் உடல் குளிர்ச்சிக்காக தயிர், மோர் போன்றதை உட்கொள்கிறோம். இவ்விரண்டில் முக்கியமாக தயிர் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை நாம் அனைவரும் அறிந்திருப்போம், ஆனால் இதே தயிரை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகளை பற்றி படித்ததாவது உண்டா? வாருங்கள் தயிரால் ஏற்படும் தீமைகளை பற்றி அறிந்து கொள்வோம்.
தேம்பல், இரும்பல்,சளி தொல்லை, ஜீரண கோளாறு, ஒவ்வாமை போன்ற பிரச்சனைகள் இருந்தால் தயிரை முடிந்த அளவிற்கு குறைவாக பயன்படுத்த வேண்டும்.
புளித்த மற்றும் அதிக நாட்களான தயிரை சாப்பிடுவதால் உடலுக்கு அதிகளவில் தீங்கு ஏற்பட வாய்ப்புண்டு. இதனால் முடிந்த வரை பிரெஷ் மற்றும் சுத்தமான தயிரையே உட்கொள்வது நல்லதாக அமையும்.
எய்ட்ஸ்(Aids) மற்றும் (organ transplant) உடல் உறுப்பு தானம் பெற்றவர்களாக இருந்தால் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் தயிர் உபயோகப்படுத்த கூடாது. காரணம் என்னவென்றால் முன்பே இப்பிரச்சனைகளால் அவர்களின் நோய் எதிர்ப்பு தன்மை குறைவாக இருக்கும், மேலும் தயிர் சாப்பிடுவதால் மேற்கொண்டு பல பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடும்.
கர்பிணி பெண்களுக்கு தயிர் நல்லது. ஆனால் அதையே அதிகமாக உட்கொண்டால் உடலில் சரும ஒவ்வாமை ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே முடிந்த வரை தயிரை குறைவாக உட்கொள்ளுங்கள்.
நீங்கள் கடைகளில் விற்கும் தயிரை உபயோகித்தால் அதிக நாள் வரை பயன்படுத்த கூடாது. காரணம் இத்தயிர்களில் ப்ரெசெர்வேடிவ் (preservative) சேர்க்கப்படுவதால் அதிக நேரம் வரை பிரெஷாக இருப்பதில்லை. மேலும் அசிடிட்டி, டான்சில், இரும்பல், வீக்கம், உடல் வலி, போன்ற விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்.
உடலில் சரும பிரச்னைகள் இருந்தால் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் தயிர் உட்கொள்ளாதீர்கள். இதனால் பிரச்சனை அதிகரிக்க கூடும்.தயிரை அதிகமாக சாப்பிட்டு வந்தால் உங்களுக்கு இரும்பல் பிரச்சனை ஏற்படும். இதன் விளைவாக சுவாச கோளாறு ஏற்படும் அபாயம் உண்டு.
K.SAKTHIPRIYA
KRISHI JAGRAN
Share your comments