1. வாழ்வும் நலமும்

பால் போல் வெண்மையான முகம் பெற இதை செய்தால் போதும்!

Daisy Rose Mary
Daisy Rose Mary
Credit By : HindiRush

ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, கண்ணாடி முன்பு நின்று பார்க்கும்போது, தங்கள் அழகை பராமரிக்க வேண்டும் எனக் கருதுவது இயல்பு. அழகு என்று வரும்போது, அது இருபாலருக்கும் பொதுவான விஷயமாகவே மாறிவிடுகிறது. அதன் விளைவாகவே தற்போது பெண்களுக்கான அழகு நிலையங்களைப்போல ஆண்களுக்கான அழகு நிலையங்களும், அதிகளவில் இயங்கத் தொடங்கியுள்ளன.

என்னதான் அழகு நிலையங்களுக்குச் சென்று அழகை புதுபிக்க நாம் முயற்சிகள் எடுத்தாலும் அது காலப்போக்கில் நம் சருமத்தை பாதிக்குமோ என்ற அச்சம் நம்மில் பலருக்கு இருந்துக்கொண்டு தான் இருக்கிறது. எனவே தான் பல பெண்கள் இன்னமும் இயற்கை முறையிலேயே அழகை மீட்டெடுக்க முயற்சி செய்கிறார்கள், நாம் அன்றாடும் பயன்படுத்தும் அனைத்து பொருட்களில் நம் அழகை மேம்படுத்தக்கூடிய ரகசியங்கள் அடங்கி இருக்கிறது.

அதில் ஒன்று தான் பால் (Milk). பசும்பாலாக இருந்தாலும் சரி, பாக்கெட் பாலாக இருந்தாலும் சரி இளைமைய மீட்க பால் அதிகம் உதவுகின்றன. இதன் காரணமாகவே நம்முடைய அத்தியாவசியப் பொருட்களின் பட்டியலில் பால் இடம்பெற்றுள்ளது. பாலைப் பயன்படுத்துவதால் எண்ணற்ற பலன்கள் கிடைக்கின்றன. அவற்றில் சிலவற்றை இப்போது பார்ப்போம்.

பால் போல் பொங்கும் உள்ளம்

பசும் பாலில் உள்ள ஏ2 புரோட்டின் (A2 Protien) உடலை மட்டுமல்ல உள்ளத்தையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. உடலில் லாக்டோஸ் அளவு குறைவாக உள்ளவர்கள் பசும்பாலை தினமும் பருகுவது அளப்பரியப் பயன்களை அளிக்கும்.

Credit by : 1zoom.me

தோலின் ஈரப்பத்தத்தை அதிகரிக்கும்

நம்மில் பெரும்பாலோருக்கு, வறண்ட சருமமாக இருப்பதால், வறட்சி காரணமாக அவ்வப்போது அரிப்பு எடுக்கும். இந்த பிரச்சை தீர, தினமும் உடலில் பாலைத் தேய்ப்பதால், அதில் உள்ள லாக்டிக் அமிலம் (Lactic Acid), அதிக ஈரப்பத்த்தை அளித்து, சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும். பாலில் உள்ள கொழுப்புத்தன்மை, சருமத்தை வறட்சியில் இருந்து பாதுகாக்கிறது. பாலில் உள்ள அதிக புரோட்டீன் அழகான, மிருதுவான சருமத்தை அளிக்கிறது.

வயது மூப்பை தடுக்கும் (Anti-Ageing Agent)

முப்பத்தைந்து வயதைக் கடக்கும்போது, முகத்தில் ஏற்படும் சுருக்கங்களைத் தடுக்க பால் பெரிதும் உதவுகிறது. முகத்தில் ஏற்படும் கருவளையத்தை நீக்கி, தோலின் மேற்பகுதியை மென்மையானதாக வைத்துக்கொள்ள பால் மட்டுமே போதும். இதனால் நாம் என்றும் இளமையாக காட்டிக்கொள்ள பால் அடித்தளம் அமைக்கிறது. தவறான உணவு பழக்கங்கள் (Bad Diets) சூரிய ஒளி படுவதால் தோலில் ஏற்படும் பாதிப்பு (Exposure To Sun) போன்றவற்றில் இருந்து விடுபட பாலை நாம் தினமும் பயன்படுத்த வேண்டும். அவ்வாறு பயன்படுத்தினால் மூன்று மாதங்களுக்கு பிறகு உங்கள் முகத்தில் நல்ல மாற்றத்தை உணர முடியும். அதிலும் காய்ச்சாத பாலைப் பயன்படுத்துவது சிறந்தது.

இறந்த செல்களை நீக்கும் (Dead cells)

நமது சருமத்தில் இறந்த செல்கள் (Dead cells) அப்படியேத் தங்கிவிடுவதால், சருமம் பொலிவிழந்துவிடுகிறது. அவ்வாறு தங்கிவிடும் இறந்த செல்களை, சருமத்திற்கு எவ்விதத் தீங்கும் இல்லாத வகையில் நீக்க பால் உதவுகிறது. இந்த பணியைச் செய்ய அழகு நிலையங்களில் பெரும்பாலும் ரசாயணப் பூச்சைப் பயன்படுத்துகின்றனர். இவை உடலுக்கு சில வேளைகளில் தீங்கு விளைவிக்கும். எனவே பாலை சிறந்த ஸ்க்ரப்பாக (Scrub) பயன்படுத்தலாம்.

உங்கள் முகத்திற்கு தினமும் பாலை இயற்கை ஸ்க்ரப்பாக பயன்படுத்தலாம். குறிப்பாக எண்ணை பசை உள்ள சருமமாக இருப்பின் வாரத்திற்கு 3 முறை பயன்படுத்தலாம். மற்றவர்கள் வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை பயன்படுத்தலாம். இதனால் முகம் மாசு, மரு இன்றி பளிச்செனக் காட்சியளிக்கும்.

சன்-டேமேஜ்ஜை நீக்கும் (Sun Damage)

சூரிய ஒளி படுவதால், பலருக்கு தோல் கருப்பாக மாறி சன்-டேமேஜ்ஜாக மாறும். இது நாளடைவில் கருவளையமாக மாறி முக அழகை கெடுத்துவிடும். இந்த பிரச்னைக்கு பால், சரியான தீர்வாக இருக்கிறது. பாலில் உள்ள லாக்டிக் அமிலம் சன்-டேமேஜ்ஜை முழுமையாக நீக்கும் எனவும், பல்வேறு ஆராய்ச்சிகளின் முடிவுகள் தெரிவிக்கின்றன. இதனால்தான் ஆயுர்வேத மருத்துவத்தில், சன்-டேமேஜ்ஜை நீக்க பாலைப் பயன்படுத்துகின்றனர்.

Credit By : Beauty & health tips

சருமப் பொலிவு (Skin Brightening)

நம்முடைய தோலில் உள்ள மெலனின் என்னும் பொருளே, நிறத்தை நிர்மாணிக்கும் காரணி. இந்த மெலனின் தோலின் சில இடங்கிளில் அதிகளவில் சுரந்தால் அந்த இடம் கருமை நிறமாக மாறும். இவ்வகைக் கருமையைப் போக்க அந்த இடத்தில் பாலைப் பயன்படுத்தினால் நாளடைவில் பொலிவடையும்.

காய்ச்சாத பால் அல்லது மோருடன், மஞ்சள் தூளைக் கலந்து பேஸ்ட்டாக மாற்றி கருமையான இடங்களில் பூசிக் கொண்டு பின்னர் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், அந்த கருமை படிப்படியாக மறையும். ஆக பாலில் உள்ள லாக்டிக் அமிலம், மெலனின் உற்பத்தியைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இது மட்டுமல்ல இன்னும் ஏராளமான பலன்கள் பாலில் உள்ளன. எனவே இனிமேல் நாமும், சருமப் பராமரிப்புக்கு பாலைப் பயன்படுத்தி பயனடைவோம்.

மேலும் படிக்க...

அட...! அகத்தி கீரையில் இவ்வளவு நல்ல விஷயங்கள் இருக்கிறதா?

பழங்களின் அரசன் மாம்பழம் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?

உங்கள் கிச்சனில் இருக்கும் கடுகு விதைகளில் உள்ள மருத்துவ குணங்கள்!

English Summary: all you need to know about health benefits of milk Published on: 19 June 2020, 01:28 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.