கொஞ்சம் அதிக புளிப்பு, கொஞ்சமான இனிப்பு, எஞ்சிய துவர்ப்பு, சற்றே கசப்பு உள்ளிட்ட பல சுவைகளின் கலவையாக உள்ளது நெல்லிக்காய். ஏழைகளின் ஆப்பில் என்று அழைக்கப்படும் நெல்லிக்காய்கள் ஆரோக்கியம் மற்றும் அழகு சார்ந்த பயன்பாடுகளுக்கு பெரும்பங்கு வகிக்கிறது. மேலும், வைட்டமின்கள், நார்ச்சத்து, தாதுக்கள், புரதங்கள் போன்ற பல ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்களின் நன்மைகளால் ஆம்லா நிரம்பியுள்ளது.
ஆயுளை வளர்க்கும் கனி என்று அழைக்கப்படும் சிறப்பு நெல்லிக்கனிக்கு மட்டுமே உரியது. சமைத்தாலும் வேக வைத்தாலும் காயவைத்தாலும் வெட்டி நறுக்கினாலும் மொத்த பயனையும் வீணாக்காமல் தரும் சத்து மிகுந்த கனி இந்த நெல்லிக்கனி.
தினசரி நெல்லிக்காய் சாப்பிடுவதால் இந்த குளிர்காலத்தில் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும்.
1. நோய்த்தொற்றிலிருந்து பாதுகாகும்
வைட்டமின் சி & ஏ, பாலிபினால்கள், ஆல்கலாய்டுகள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் மற்றும் காம்பெரோல் ஆகியவற்றின் கலவையுடன் பருவகால நோய்த்தொற்றுகளைத் தடுக்கும் திறன் ஆம்லாவுக்கு உள்ளது. ஆயுர்வேதத்தில், ஆம்லாவுக்கு ஒரு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. இது உடலில் உள்ள வெள்ளை இரத்த அணுக்களை அதிகரிக்கப் பயன்படுகிறது, மேலும் இது நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. மேலும், இரத்தத்தில் உள்ள நச்சுக்களையும் நீக்குகிறது.
2. முடி உதிர்தலைக் குறைக்கிறது
ஆம்லா முடிக்கு நீண்ட ஆயுளை அளிக்கிறது. இது கூந்தலுக்கு இயற்கையான ஊட்டச்சத்தை அளிக்கிறது, மேலும் முடி உதிர்தல் மற்றும் வழுக்கைக்கான வாய்ப்புகளையும் குறைக்கிறது. மேலும், ஆம்லா எண்ணெய் தலைமுடியை நீளமாகவும் வலுவாகவும் மாற்றுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது. இது முடி வேர்களை வலுப்படுத்தி முடி அடர்த்தியாகவும் கருப்பு நிறமாகவும் மாறும். ஆம்லாவில் கரோட்டின், இரும்பு மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன, அவை மயிர்க்கால்கள் மற்றும் ஹார்மோன்களை தீவிர சேதத்திலிருந்து பாதுகாக்கின்றன.
3. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது
உடல் செயல்பாடு இல்லாததால் நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கத் தொடங்குகிறது. ஆம்லாவில் உள்ள குரோமியம் நீரிழிவு சிகிச்சையில் மிகவும் நன்மை பயக்கும். இதனுடன், ஆம்லாவுக்கு ஹைப்பர் கிளைசெமிக் மற்றும் லிப்பிட் குறைக்கும் பண்புகள் உள்ளன, இது இரத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும்.
4. சருமத்தைப் பாதுகாக்கிறது
ஆக்ஸிஜனேற்ற பண்புகள் இருப்பதால் தோல் பிரச்சினைகளுக்கு ஆம்லா பயன்படுத்தப்படுகிறது. ஆம்லாவில், வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் ஃப்ரீ ரேடிக்கல்களை சுத்தம் செய்ய உதவுகின்றன. வறண்ட சருமத்திற்கு காரணமான செல்களை அளிக்கிறது. ஆம்லாவை தவறாமல் உட்கொள்வத மூலம் ஆரோக்கியமான மற்றும் ஒளிரும் சருமத்தை வழங்குகிறது.
5. இதய ஆரோக்கியம்
இதய நோய் உள்ளவர்களுக்கு குளிர்காலம் மிகவும் ஆபத்தானது. ஆம்லா இதய தசையை வலுப்படுத்துவதோடு உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தையும் சீர்படுத்துகிறது. மேலும், இது உடலில் உள்ள கொழுப்பை கரைக்கவும் செய்கிறது. முறையாக எடுத்துக்கொள்வதன் மூலம் பக்கவாதம் மற்றும் மாரடைப்புக்கான வாய்ப்புகளை குறைக்கிறது.
மேலும் படிக்க...
தேசிய பால் தினம் 2020 : வெண்மைப் புரட்சியின் தந்தை வர்கீஸ் குரியன் குறித்து தெரியுமா உங்களுக்கு!!
அதிக விட்டமின்களைக் கொண்ட தவசிக் கீரை! பயன்களை அறியலாம் வாங்க!
Share your comments