அன்னாசிப் பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள், இதய நோய்கள் மற்றும் பல்வேறு வகையான புற்றுநோய்களுக்கு எதிராக போராட உதவுகின்றன. அன்னாசிப்பழத்தில் வைட்டமின் பி1, பி2, பி3, பி5, பி6, மற்றும் சி, மாங்கனீசு, தாமிரம், பொட்டாசியம், பீட்டா கரோட்டின், ஃபோலிக் அமிலம் என பல சத்துக்கள் நிறைந்துள்ளது. வெப்பமண்டலங்களில் வளரும் பழங்களில் சூப்பர் பலன்களை தரும் பழம் அன்னாசி.
ஆரோக்கிய நன்மைகள் (Healthy Benefits)
- அன்னாசிப் பழத்தில் உள்ள நார்ச்சத்துக்கள் (Fiber for health) செரிமானத்தை எளிதாக்கும்
- இருதய ஆரோக்கியத்திற்கு நல்லது
- எலும்புகளுக்கு நன்மை பயக்கும்
- மின்னி மினுக்கும் சருமத்திற்கு பைனாப்பிள் ஆதாரமாக இருக்கிறது.
- கவர்ச்சியான தோற்றத்திற்கு அன்னாசி உத்தரவாதம் அளிக்கிறது.
அழகு சாதன பொருள் (Beauty Tips)
சருமத்தின் இறந்த செல்களை வெளியேற்ற உதவும் ஆல்ஃபா ஹைட்ராக்ஸி அமிலங்கள் அன்னாசியில் நிறைந்துள்ளது, இது உங்கள் சருமத்தில் உள்ள அழுக்குகளை அகற்றும். சருமத்தில் உள்ள பழைய செல்களை அகற்ற இது உதவுகிறது. அன்னாசியை சாப்பிட்டால், மென்மையான சருமம் கிடைக்கும்.
அன்னாசி பழ ரசம், தோலில் உள்ள துளைகளை சுருக்கச் செய்ய உதவும். இந்தப் பழத்தில் உள்ள ஒருவிதமான இயற்கையான துவர்ப்புச்சத்து, சருமத் துளைகளை இறுக்க உதவும். அன்னாசி சாற்றை உங்கள் முகத்தில் தடவிவந்தால், அழகு பொங்கும் வதனம் கிடைக்கும்.
அன்னாசியில் உள்ள ப்ரோமைலைன் என்ற வேதிப்பொருள், ஒரு சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு பொருளைக் கொண்டுள்ளது, இது தோலழற்சி, தடிப்புத் தோல் அழற்சி மற்றும் பல சருமப் பிரச்சனைகளுக்கு தீர்வாகும். எனவே, அன்னாசிப் பழக்கூழை தோலில் தடவினால் பிரச்சனைகள் அகன்று அழகான சருமத்தைப் பெறலாம்.
முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி ஆகியவை நிரம்பிய அன்னாசிப்பழம் முடியின் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்தும். வலுவான மற்றும் பளபளப்பான மேனியைப் பெற வேண்டுமா? அன்னாசி பழச்சாற்றை தலையில் தடவி சிறிது நேரம் கழித்து ஷாம்புவால் கழுவினால், முடிக்கு வளம் கிடைக்கும்.
வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் அன்னாசிப்பழம், கூந்தல், தோல் மற்றும் நகங்களின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்தை வழங்குகிறது. அன்னாசிப்பழத்தில் இருக்கும் அபரிதமான மாங்கனீசு எலும்புகளை வலுப்படுத்துவதோடு, ஈறுகளின் ஆரோக்கியத்தை வலுப்படுத்துகிறது.
மேலும் படிக்க
Share your comments