நம் நாட்டில் நகர்ப்புறங்களில் வாழும் 75 சதவீதத்தினருக்கு புரதச் சத்து (Proteins) குறைபாடு உள்ளது. மூன்று வேளையும் சமச்சீரான உணவு கிடைக்காத, பொருளாதார நிலையில் பின்தங்கியவர்களை விட, வசதியானவர்களுக்கு புரதச் சத்து மிகுந்த உணவு எது என்பது தெரிவதில்லை.
புரதச் சத்து
பழங்கள், காய்கறிகளை சமைக்காமல் சாப்பிட்டால் புரதச் சத்து எளிதாக கிடைப்பதாகவும், பச்சைக் காய்கறிகளில் புரதம் நிறைய இருப்பதாகவும் 73 சதவீதம் பேர் நம்புகின்றனர். புரதம் சாப்பிடுவது உடலுக்கு நல்லதல்ல என்பது 20 சதவீத மக்களின் கருத்து. தற்போது நம் பழக்கத்தில் உள்ள உணவில் 73 சதவீத புரதச் சத்து குறைபாடு உள்ளது.
சைவ உணவு சாப்பிடும் 84 சதவீதம் பேரில், அசைவ உணவு பழக்கம் உள்ள 65 சதவீதம் பேர், புரதச் சத்து குறைபாடுடன் இருக்கின்றனர். மொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒருவர் மட்டுமே சரியான அளவில் புரதம் சாப்பிடுகின்றனர். போதுமான அளவு புரதம் சாப்பிடாவிட்டால் பலவீனம், மயக்கம், சோர்வு ஏற்படும் என்பதை புரிந்து வைத்துள்ளனர்.
உடல் எடையை சென்டிமீட்டரில் கணக்கிட்டு, அதில் 100ஐ கழித்தால் வருவது நம் உடலுக்கு அவசியமான புரதம். உயரம் 150 செ.மீ., என்றால், தினமும் 50 கிராம் புரதம் தேவை.
மேலும் படிக்க
Share your comments